குழப்பமான மனநிலை நீங்க முத்திரை

kulappa mana nilai mara

குழப்ப மனநிலை. பலருக்கும் வந்து போகும். சிலருக்கு நாள் முழுமையாக இருக்கும். வெகு சிலருக்கோ மாதக் கணக்கில், வருடக்கணக்கில் கூட இருக்கும். இப்படி மனநிலையில் ஏற்படும் மாற்றங்களால், தொடர்ந்து ஒரு விஷயத்தை யோசித்துக்கொண்டிருக்கும்போது, மன நிலை குழப்பமடைந்து என்ன செய்தென்று தெரியாமல் இருக்கும். 

அப்படிப்பட்ட நிலையில் இந்த முத்திரைகளை செய்து வந்தால், உடனடியாக மன குழப்பம் நீங்கி, நிம்மதியான மகிழ்ச்சியான மன நிலையை அடையலாம். 

நிறைய நேரம் அதிக வேலை சுமையை சுமந்து கொண்டு, கணினியின் முன்பு அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு வரக்கூடிய முதல் பிரச்சனை கழுத்து வலி, தோள்பட்டை வலி. 

இந்த வலி வருவதற்கு நம் கணினியின் முன்பு அமரக்கூடிய விதம் ஒரு காரணம் என்றால், நம் வேலையில் இருக்கும் கஷ்டங்களும், அழுத்தமும் ஒரு காரணம் தான். அதிகப்படியான வேலைப்பளு நம் தலையில் விழும் போது தானாகவே நமக்கு மன அழுத்தம் ஏற்படுகின்றது.

மன அழுத்தத்தின் காரணமாக வீட்டில் இருக்கும் பெண்கள் முதல் வேலைக்கு செல்லும் ஆண்கள் பெண்கள் எல்லோரும் இந்த கழுத்து வலி தோள்பட்டை வலிகளில் அவதிப்பட்டு வருகிறார்கள். நிறையபேருக்கு கழுத்து பகுதிகளில் எலும்பு தேய்மானம் ஏற்படுவதற்கு முதல் காரணம் மன அழுத்தம் என்று சொல்லப்பட்டுள்ளது. 

இந்த மன அழுத்தத்தை சரி செய்து மனதை, சந்தோஷமாக வைத்துக்கொள்ள தான் இந்த கணேஷ முத்திரை பயன்படுத்தப்படுகிறது. இந்த முத்திரையை சரியான முறையில் எப்படி பிடிப்பது பார்க்கலாம் வாருங்கள். 

முதலில் முதுகு தண்டுவடம் நேராக இருக்கும்படி தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து கொள்ளலாம். தரையில் அமர முடியாதவர்கள் நாற்காலியின் மீது அமர்ந்து கொள்ளுங்கள். 

உங்களுடைய இரண்டு உள்ளங்கைகளையும் உங்கள் நெஞ்சுப் பகுதிக்கு நேராக கொண்டு வந்து, முதலில் இடது உள்ளங்கை உங்கள் நெஞ்சை பார்த்தவாறு வைத்துக் கொள்ள வேண்டும். 

வலது உள்ளங்கைகளை வெளிப்பக்கம் பார்த்தவாறு வைத்துக் கொண்டு, இரு கைகளையும் கொக்கி போல அமைத்து இணைத்துக்கொள்ள வேண்டும். மேலே படத்தில் காண்பிக்கும் முத்திரையை பாருங்கள்.

இப்போது உங்களது இரண்டு உள்ளங்கைகளும் இணைந்திருக்கும் இந்த முத்திரையை வைத்த வண்ணமே, இரண்டு கைகளையும் இலேசாக இழுக்க வேண்டும். முத்திரையிலிருந்து கைகளை மாற்றக்கூடாது. கொக்கி போல பிணைந்திருக்கும் இரண்டு கைகளிலும் லேசாக அழுத்தம் கொடுத்து, ஐந்து முறை லேசாக இழுத்து விட்டுவிடுங்கள். 

மீண்டும் இரண்டு கைகளையும் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். ganesh-mudra1 வலது உள்ளங்கை உங்களுடைய இதயத்தை பார்த்த வாறும், இடது உள்ளங்கை வெளிப்பக்கம் பார்த்தவாறு கைகளை மறுமுறை மாற்றிக்கொண்டு, அதேபோல் அழுத்தம் கொடுத்து கைகளை இழுத்து, மீண்டும் கைகளை மாற்றி மாற்றி இதேபோல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். 

உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் வரை இந்த முத்திரை பயிற்சியை செய்யலாம். 

தினம்தோறும் இந்த முத்திரையை பயிற்சி செய்து வருவதன் மூலம் உடலில் இருக்கும் இரத்த அழுத்தம் சீராகும். மன அழுத்தம் குறையும். எந்த நேரத்தில் எந்த முடிவுகளை எடுப்பது என்று தடுமாறிக் கொண்டிருப்பவர்களின் மனது ஒரு நிலைப்படும். 

எலும்பு தேய்மானம் சரியாகும். கழுத்து வலி படிப்படியாக குறையும். இப்படியாக பல நன்மைகளை நமக்கு கொடுக்கக் கூடிய சக்தி இந்த முத்திரைக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். முயற்சி செய்து பாருங்கள்.

Post a Comment

0 Comments