கொலஸ்ட்ரால் கெட்டது
என்றால்
உடலுக்கு தீங்கு விளைவிக்கும்
கொலஸ்டாரலை
கல்லீரல் தினமும் நாம் உண்பதை விட அதிகமான கொலஸ்ட்ராலை (endogenous cholesterol)
உற்பத்தி செய்கிறது ????
கொழுப்பு கெட்டது என்றால்
நாம் உண்ணும் மாவுச்சத்தை கூட நமது உடல் கொழுப்பாக மாற்றி உடலில் சேமிப்பது ஏன்?
செடிகளைப்போல ஸ்டார்ச்சாகவே சேமித்து வைக்கலாமே? ஏன் கொழுப்பு செல்ககளாக மாற்றி சேமிக்கின்றன?
உடலுக்கு கெட்டது என்று நாம் நினைப்பதை நமது உடல் ஏன் செய்கிறது?
கொழுப்பு கெட்டது என்றால்
ஏன் ட்ரில்லியன் கணக்கில் இருக்கும் நம் ஒவ்வொரு செல்களின் சுற்றுச்சுவரான ப்ளாஸ்மா மெம்ப்ரேன் கொழுப்பினால் செய்யப்பட்டுள்ளது..???
கொலஸ்ட்ரால் கெட்டது என்றால்
ஏன் இனப்பெருக்க ஹார்மோன்களான டெஸ்டோஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜென் போன்றவை கொழுப்பை தங்கள் உருவாக்கத்துக்கு கோருகின்றன..???
கொலஸ்ட்ரால் மட்டுமே இதய நோய்க்கு காரணம் என்று இன்னும் ஆணித்தரமாக அடித்துக்கூற முடியாத நிலையில் கொழுப்பை அக்யூஸ்ட் லிஸ்ட்டில் உள்ளே எத்தனை நாளைக்கு வைத்திருப்பது???
ஏனைய அக்யூஸ்ட்களான சிகரெட்/ மது/ ஜங்க் குப்பை உணவுகள் போன்றவை வெளியே ஃப்ரீயாக சுற்றும் போது கொழுப்பை மட்டும் உள்ளே வைத்திருப்பது ஏன்?
கொலஸ்ட்ரால் தான் இதய நோய்க்கு காரணம் என்றால்
கொலஸ்ட்ரால் அளவுகளை சரியான அளவில் வைத்திருக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் இதய நோய் வருவது ஏன்?
உணவு மூலம் உண்ணும் கறி மீன் முட்டை தான் இதய நோய்க்கு காரணி என்றால் முட்டை கூட உண்ணாத
மரக்கறி மட்டும் உண்ணும் சொந்தங்களுக்கும் இதய நோய் வருவதன் காரணம் என்ன???
கொலஸ்ட்ராலே கெட்டது என்றால்
அந்த கெட்டதில் நல்லதாக HDL இருப்பது போல
LDL கெட்ட கொலஸ்ட்ரால் என்றால் அதிலும் நல்ல large and fluffy LDL இருப்பது ஏன்?
கெட்டது என்று கூறுவதிலும் நல்லது இருப்பது ஏன்?
"கொழுப்பு தேவையற்றது" என்று அதை ஒதுக்கும் மக்களுக்கும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவுகள் கூடுவதன் அர்த்தம் என்ன?
கொழுப்பை குறைவாக உண்ணும் உணவு முறை ஊர் முழுவதும் குழாய் மைக்கில் கூவி கூவி அனைவரையும் தேங்காய் எண்ணெய் வேண்டாம்.. மட்டன் வேண்டாம் என்று கொழுப்பு குறைவான உணவை பரிந்துரை செய்தும்
காணும் இடமெங்கும் நீரிழிவு / ரத்த கொதிப்பு / இதய நோய் / சிறுநீரக நோய் அதிகமாகிக்கொண்டிருப்பது எதனால் இருக்கும் ???
கொழுப்பு
கொலஸ்ட்ராலை அக்யூஸ் லிஸ்ட்டில் இருந்து விடுவித்து வழக்கை நாம் என்று உண்மையான கிரிமினல்களான
இனிப்பு சுவை தரும் ரீபைண்டு மாவுச்சத்து உணவுகள் , ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட எண்ணெய்கள், ட்ரேன்ஸ் ஃபேட், தானியங்களை மட்டும் சார்ந்திருக்கும் அதிக மாவுச்சத்து (VERY HIGH CARBOHYDRATE STAPLE BASED DIET) உண்ணும் உணவு முறை போன்றவற்றிற்றை கண்விக்ட்களாக அறிவிக்கிறோமோ அன்று தான் நீரிழிவு உடல் பருமன் ரத்தக்கொதிப்பு போன்ற
தொற்றா நோய்களை சிறந்த கட்டுப்பாட்டில் வைக்க முடியும்
0 Comments
Don't Comment Spam Link on Comment Section.