இதயம் மனித உடலின் முக்கியமான ஒரு உறுப்பு. அது செயல்படும் விதம் நன்றாக இருப்பின், உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். அவ்வாறு சீர்படுத்திட அன்றாட உடல் உழைப்புத் தேவை.
1. உழைப்பில்லாதவர்கள், ஓடியாடி வேலை செய்யாதவர்களுக்கு 30 வயதிற்குப் பிறகு இதய நோய்கள் இலேசாக எட்டிப் பார்க்கும். குறிப்பாக உட்கார்ந்து வேலை செய்பவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு இதய துடிப்பு சீராக இருக்காது.
2. இதயத்தை சீராக வைத்திட கட்டாயம் உடல் உழைப்புத் தேவை. இல்லாதவர்கள் அன்றாட ஓட்டப்பயிற்சி, உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா மற்றும் சைக்கிளிங் போன்றவற்றை செய்வதன் மூலம் இதய இயக்கத்தை மேம்படுத்தி, உடலில் இரத்த ஓட்டம் சீராக இயங்கும்படி செய்திடலாம். அவ்வாறு செய்திடும்பொழுது, இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
சீரான உணவு அவசியம்.
3. இதயத்தை பாதுகாப்புடன் வைத்திட, 30 வயதிற்கு மேல் நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் உணவுப் பொருட்கள், அதிகமான இறைச்சி வகைகள் எடுப்பதை நிறுத்த வேண்டும்.
4. மேலும், பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதசத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை இப்போதே சாப்பிட தொடங்கினால் நீங்கள் வயதாகும்போது உங்கள் இதய ஆரோக்கியம் மேம்படும்.
5. ஒரு நாளைக்கு 4.5 கப் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும், ஒரு வாரத்திற்கு குறைந்தது 3.5 கப் மீன் சாப்பிட வேண்டும், ஒரு நாளைக்கு 1 அவுன்ஸ் அளவு வேகவைத்த நார்சத்து நிறைந்த முழு தானியங்களை சாப்பிட வேண்டும் மற்றும் நட்ஸ், பருப்பு வகைகள் மற்றும் விதைகள் போன்றவற்றை ஒரு வாரத்திற்கு குறைந்தது 4 தடவை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
6. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க விரும்புபவர்கள் உங்கள் உணவில் உப்பு பயன்பாட்டை குறைக்க வேண்டும் மற்றும் நிறைவுற்ற கொழுப்புக்களை சாப்பிடக்கூடாது. மேலும் நீங்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் சர்க்கரை பானங்களைத் தவிர்ப்பதும் முக்கியம்.
0 Comments
Don't Comment Spam Link on Comment Section.