தலைவலி என்பது பலருக்கும் வரக்கூடிய ஒரு நோயாக இருக்கிறது. அதற்கு பல காரணங்கள் உண்டு. சிறுவர்கள்,பெரியவர்கள், மத்திய வயதினர்கள் என வயது பாரபட்சமில்லாமல் "தலைவலி" அனைவருக்கும் வந்து பாடாய் படுத்தும். சில நேரங்களில் இதனால் ஏற்படும் அசௌகரியங்களால் மனமானது மிகவும் நொந்து நூலாகி, இந்த வாழ்க்கை தேவைதானா? என்ற நிலைமைக்கு கொண்டு விட்டு விடும்.
சரி, தலைவலி வர என்ன காரணம்?
பொதுவாக 3 காரணங்களால் தலைவலி வரும். இவைகளாலே பெரும்பாலான தலைவலிக்கான காரணங்கள் அடங்கிவிடும். தற்காலத்தில் 99% விகித்தினர் இதன் காரணமாகவே பாதிக்கபடுகின்றனர் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
1. அதீத இரைச்சல்
2. செரிமானக் கோளாறு
3. கணினித்திரை-கேட்ஜெட்ஸ்
தலைவலி வர காரணம் - இரைச்சல்
நகரங்களில் வசிப்போருக்கு இந்த இரைச்சல் மிகப்பெரிய காரணமாக உள்ளது. தொழிற்சாலைகள், வாகனங்கள் ஏற்படுத்தும் மாசு மற்றும் இரைச்சல்கள் தான் பெரும்பாலானோருக்கு இத்தகைய அசௌகரியத்தை உருவாக்கும்.
இதனால் தினந்தோறும் காலை நேரம் மற்றும் மாலை நேரங்களில் அதிக பட்சமான தலைவலிகளை உணர்வார்கள்.
தலைவலி உருவாக்கும் செரிமானக் கோளாறு
கண்ட கண்ட உணவுகளை உட்கொண்டு, செரிமானக் கோளாறுடன் இருப்பவர்களுக்கு தலைவலி பெரும் பிரச்னையை உருவாக்கும். அது தெரியாமல் தொடர்ந்து தலைவலிக்கு மருந்து மாத்திரைகள் எடுத்து, மேலும் உடல்நிலையை மோசமான நிலைமைக்கு கொண்டு வந்து விடுவர். உணவுக் கட்டுப்பாடு, வீட்டில் சமைத்ததை மட்டுமே உட்கொள்வது, செரிமான கோளாறு வராமல் தடுப்பதோடு, தலைவலியை வெகு விரைவில் போக்கும் தன்மையை உடலுக்கு வெகு விரைவில் கொண்டு வந்து சேர்க்கும் இந்த நல்ல பழக்க வழக்கம்.
தலைவலி உருவாக்கும் கணினித்திரை-கேட்ஜெட்ஸ்
இது எப்படி சாத்தியம் என்று பலரும் கேள்வி கேட்பர். ஆனால் தொடர்ந்து நாட் கணக்கில் தொழில் நிமித்தமாக பயன்படுத்துவோருக்கு, அதிலிருந்து வெளிவரும் ரேடியேசன் எனும் கதிர் வீச்சு பாதிப்பு காரணமாக கண் நரம்புகள் வீக்கமடைந்து அதனால் தலைவலி ஏற்படும்.
தற்காலங்களில் சிறார்களையும் இது விட்டு வைப்பதில்லை. ஸ்மார்ட் போன் என்று சொல்லப்படும் திறன் பேசியை அதிக நேரம் பயன்படுத்துவதால் கண் பாதிப்போடு தலைவலி வந்து உசிரை எடுக்கும்.
எப்படி தலைவலியை போக்குவது? எப்படி தடுப்பது?
தலைவலி போக்க தற்பொழுது அதிக திறன் வாய்ந்த மாத்திரைகள், தனியார் ஜெல்கள், சில க்ரீம்கள் வந்து விட்டன. ஆனால் இவை அனைத்தும் இயற்கைக்கு மாறாக, உடலுக்கு பக்க விளைவுகள் ஏற்படுத்தும் விதமான தயாரிப்புகள் தான். ஆனால் உடனடி தீர்வு வேண்டி பலரும் விளம்பரங்களை பார்த்து உடனடி தீர்வுக்காக இதை பயன்படுத்தி வருகின்றனர்.
இதை விட இயற்கையான உணவு முறை, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் தலைவலி போக்கலாம்.
தலைவலிக்கு நாட்டு மருந்து
தலைவலி போக்கும் இஞ்சி
நமது சமையலறையில் இஞ்சி இல்லாமல் இருக்காது. இயற்கையாகவே நமது மூளை நரம்புகள் சுருங்கி விரியும் தன்மைகொண்டவை. இதுவே அதீத மான செயல்பாட்டுடன் இருக்கும்போது தலைவலி ஏற்பட்டு விடும். இதை தீர்க்க இஞ்சி ஒரு அருமருந்து. இதில் தலைவலியைப் போக்கும் ஜிஞ்சரால் ரசாயனம் உள்ளது.
அதிகாலை எழுந்தவுடன் காலை கடனை முடித்துக் கொண்டு வெறும் வயிற்றில் இஞ்சிச் சாறு (2 டீஸ்பூன்) குடித்தால், நாள் முழுக்கத் தலைவலி வராது.
செர்ரி பழம் - தலைவலிக்கு சிறந்த நிவாரணி
இது சுவைக்காக மட்டுமல்ல செர்ரியில் தலைவலியை போக்கும் ஆந்தோசயானின் என்ற நிறமியை கொண்டுள்ளது. இது நரம்பு வீக்கத்தை சரி செய்கிறது. காலை எழுந்த வுடன் இந்த செர்ரி பழத்தை சாப்பிடுவதன் மூலம் முளை புத்துணர்ச்சிப் பெறும். நரம்புகள் இயற்கையாகவே புத்துணர்ச்சி பெற்று நன்றாக செயல்பட ஆரம்பிக்கும்.
புற காரணிகளான இரைச்சல், சத்தம் போன்றவற்றால் ஏற்படும் காலை நேர தலைவலி வராமல் தடுத்து, அலுவலகத்தில் புத்துணர்வுடன் வேலை செய்ய உதவும்.
தலைவலி நீக்கும் பட்டை
நாம் மாமிசம் சமைப்பதில் உபயோக்கிக்கும் இந்த மணம் நிறைந்த பட்டையானது அதிக மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது. இதை தினமும் மாலை வேளையில் பிளாக் டீ யுடன் கலந்து அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். குறிப்பாக சைனஸ் தொந்தரவு உள்ளவர்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும்.
தலைவலி நீங்க தவிர்க்க வேண்டிய உணவுகள்:
அதிக உடலுழைப்பு கொண்டவர்களுக்கு கூட தலைவலி சில நேரம் வரும். காரணம் அதிகமான வெயில் மற்றும் உடனடியாக பசியை போக்க வேண்டிய அங்கு கிடைக்கும் ஃபாஸ்புட் மற்றும் நொறுக்கு தீனிகளை எடுத்துக் கொள்வதுதான். சிப்ஸ், ஜாம், கார்ன்ஃப்ளேக்ஸ் போன்ற நைட்ரேட், எம்எஸ்ஜி சேர்க்கப்பட்ட உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
புகை, மதுப் பழக்கத்தைக் கண்டிப்பாக கைவிடவேண்டியது அவசியம். ஏனென்றால் அதிக ஆல்கஹால், நிகோட்டின், கஃபைன் உள்ளிட்டவை தலைவலியை அதிகரிக்கும்.
தலைவலியை போக்கும் எலுமிச்சை
ஆச்சர்யமாக இருக்கும். எலுமிச்சை எப்படி தலைவலியை போக்கும் என்று. இது புதுசா இருக்கே என்று கூட நினைக்கத் தோன்றும் ஆனால் எலுமிச்சைச் சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் இந்த வேலையை அதி அற்புதமாக செய்கிறது. இது நாக்கு வறளுவதைத் தடுக்கும். அத்தோடு மூளை நரம்புகளைப் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கவும் உதவி செய்கிறது.
தலைவலி - செரிமான கோளாறு - நிவாரணம்
செரிமான கோளாறு இருப்பவர்களுக்கு தலைவலி அதிகம் வர சாத்தியம் உள்ளது. இதனால் தலை நரம்புகளில் வலி, வாந்தி வரும் உணர்வு உள்ளிட்டவை ஏற்படும்.
இதை தவிர்க்கும் குணம் கொண்ட சீரகம், இஞ்சி, ஓமம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் தலைவலி வராது. இவைகள் அடங்கிய தயாரிக்கப்பட்ட கஷாயத்தைக் குடித்தால் வலி நீங்கி உடல் புத்துணர்வு பெறும். தலை வலி நீக்குவதில் கிரீன் டீ ஒரு அற்புத ரெமிடி
நாட்பட்ட தலைவலி நீங்க இயற்கை வைத்தியம்
ஒரு சிலருக்கு அதிக நாட்கள் தொடர்ந்து தலைவலி இருந்து கொண்டே இருக்கும். என்ன வைத்தியம் செய்தாலும், அது தீராது. அப்படிப்பட்டவர்கள் இந்த இயற்கை வைத்திய முறையை பின்பற்றி நிவாரணம் தேடிக்கொள்ளலாம்.
50 கிராம் சீரகத்தை அரைத்துப் பொடியாக்கி, 50 கிராம் தேனில் கலக்கவும். இந்தக் கலவையை, எலுமிச்சைச் சாற்றில் கலந்து, ஏழு நாட்கள் வெயிலில் உலரவைக்கவும்.
இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஐந்து மில்லி கிராம் அளவுக்கு சாப்பிட்டுவந்தால், நாள்பட்ட தலைவலி குணமாகும்.
இந்த வீடியோ தலைவலி போக்கும் முறைகளை உங்களுக்கு தருகிறது. பயனுள்ளதாக இருக்கும்.
0 Comments
Don't Comment Spam Link on Comment Section.