ஹார்ட் அட்டாக்/மாரடைப்பு வராமல் வாழ்வில் ஆரோக்கியத்துடன் வாழ தான் அனைவரும் விரும்புபவர். ஆனால் தற்காலத்தில் உணவுமுறை, வாழ்க்கை முறையின் காரணமாக வயது வித்தியாசமின்றி இளம் தலைமுறையினர் மாரடைப்பினால் உயிர் இழக்கின்றனர். அதுபோன்று திடீரென உயிரிழந்தவர்களின் குடும்ப நிலை கேள்விக்குறியாகி, திக்கற்று, நாதியற்று செல்லும் நிலையும் உள்ளது. குறிப்பாக திடீர் இழப்புகளை அந்த குடும்பம் எதிர்கொள்ளாமல் நிலை தடுமாறி, துக்கத்தில் உள்ளபோது பார்க்க மனம் சகிக்காத மோசமான நிலைமை உள்ளது. அவ்வாறான மோசமான சூழ்நிலைகளை உருவாக்க விடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்பு வலி, நெஞ்சு வலி வரும்போது, அது இதயம் சார்ந்த நோயாக இருக்கும் பட்சத்தில் உயிர்காக்கும் மருந்தாக சில மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் முதல் 3 மணி நேரத்திற்குள் ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுத்திடலாம் என பிரபல மருத்துவமனையின் மருத்துவர் கூறியுள்ள பதிவு தான் இந்த கட்டுரை. நிச்சயம் ஒவ்வொருவரும் படித்து தெரிந்துகொண்டு, அதன் படி பின்பற்றவும். அதே நேரம் இந்த பதிவை பலருக்கும் சென்றடையும்படி, நீங்கள் வைத்திருக்கும் சமூக வலைத்தளங்களின் மூலம் (வாட்சப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், லிங்க்ட்இன், டெலிகிராம், ஷேர்ஷாட், ஹலோ ஆப், மற்றும் பல) பகிர்ந்து அனைவருக்கும் தகவல் சென்று சேர உதவிடுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.இப்படிக்கு, -நலம்டாக்டர் குழு
மாரடைப்பு வராமல் தடுக்க நெஞ்சு வலியின்போது கொடுக்க வேண்டிய முதலுதவி மாத்திரகள் | மாரடைப்பு வராமல் இருக்க செய்ய வேண்டிய முதலுதவிகள் :
மாரடைப்பு என்றால் என்ன?
இதய தசையின் ஒரு பகுதிக்கு போதுமான இரத்தம் கிடைக்காதபோது மாரடைப்பு ஏற்படுகிறது அதாவது இதயம் செயல்படுவது நிற்கிறது. உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வில்லையென்றால் மரணம் ஏற்படும்.
மாரடைப்பின் அறிகுறிகள்
1. மார்பு வலி அல்லது அசௌகரியம் (Discomfort). பெரும்பாலான மாரடைப்புகளில் மார்பின் மையத்தில் அல்லது இடது பக்கத்தில் உள்ள வலி / அசௌகரியம் / அழுத்துதல் சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் அல்லது அது போய்விட்டு மீண்டும் வரும். பல நேரங்களில் வெறும் வாயுக் கோளாறு என்று மக்களால் தவறுதலாக புறக்கணிக்கப்படுவதும் நடக்கும்.
2. பலவீனம், லேசான தலை சுற்றுதல் அல்லது மயக்கம். குளிரான சூழ்நிலையிலும் வியர்த்தல்.
3. தாடை, கழுத்து அல்லது முதுகில் வலி அல்லது அசௌகரியம்.
4. ஒன்று அல்லது இரண்டு கைகளில் அல்லது தோள்களில் வலி அல்லது அசௌகரியம்.
5. மூச்சு திணறல்.
6. படிக்கட்டுகளில் ஏறுவதில் அல்லது நடைபயிற்சி போது அசாதாரண சிரமம் / அசௌகரியம்.
மாரடைப்பு வந்தால் உடனடியாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள்
1. "லோடிங் டோஸ்" என்ற முதலுதவி மாத்திரைகள்
வந்தது மாரடைப்பு தான் என்று ஊர்ஜிதம் ஆனால் நீங்கள் கீழ்க்கண்ட மாத்திரைகளை உடனடியாக எடுக்க வேண்டும். இது கோவையின் பிரசித்தி பெற்ற KG Hospital மருத்துவமனையின் டீன் Dr.G.பக்தவச்சலம் தரும் ஆலோசனை (படத்தில் இருப்பவர்). ஏற்கனவே நான் அதனை என் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன். (கீழே கமெண்டுகளிலும் அப்பதிவுகளை பகிர்ந்திருக்கிறேன்)
a) Disprin 325 mg - 1 tablet
b) Atorvastatin 80 mg - 1 tablet
c) Clopitab 150 mg - 2 tablets
இந்த மூன்று மருந்துகளையும் (கவனிக்க.. மூன்றாவது மாத்திரை 150 mg ல் இரண்டு எடுக்க வேண்டும்) உடனடியாக எடுத்துவிட்டு அருகில் உள்ள பெரிய மருத்துவமனையின் அவசரசிகிச்சை பிரிவிற்கு வாகனத்திலோ, ஆம்புலன்சிலோ செல்லுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். (நீங்கள் வாகனத்தை ஒட்டி செல்லுதல் கூடாது, நீங்கள் பேசாம படுத்துக் கொள்ள வேண்டும்.) அங்குள்ள மருத்துவர்களிடம் லோடிங் டோஸ் எடுத்ததை பற்றி தெரிவிக்க வேண்டும்.
எதற்காக இதனை எடுக்க வேண்டும்?
மருத்துவமனைக்கு செல்வதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் அங்கு உடனடியாக தரப்படும் முதலுதவி மருந்துகளை தான் மருத்துவர் பரிந்துரைத்துளார். இந்த மாத்திரைகள் நம் ரத்தத்தின் பாகுத்தன்மையை குறைத்து நம் இதயத்திற்கு எளிதாக இரத்தம் செல்ல உதவி செய்யும். ஒரு மூன்று மணிநேரத்திற்கு உங்களை உயிரிழப்பு ஆபத்திலிருந்து காக்கும்.
இவைகளை எப்போது வாங்க வேண்டும், எப்படி வைத்து கொள்ள வேண்டும்?
மாரடைப்பு வந்ததற்குப் பிறகு நீங்கள் மருந்துக் கடைகளுக்கு சென்று இம்மாத்திரைகளை வாங்கி வருவதற்குள் காலம் கடந்துவிடும். ஆகையால் இந்த மாத்திரைகளை எப்போதும் உங்கள் வீட்டில், உங்கள் வாகனத்தில், உங்கள் பர்ஸில் வைத்திருக்க வேண்டும்.
கவனிக்க: எப்போதும் நம்மிடம் இருக்க வேண்டிய மாத்திரைகள் என்பதால் அதிக காலாவதி காலம் (Expiry date) உள்ள மாத்திரைகளாக பார்த்து வாங்குங்கள். (குறைந்தது இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் காலாவதி ஆகிவிடும்)
இந்த மாத்திரைகள் கடைகளில் ஓரிரு மாத்திரைகளாக கிடைக்காது, ஒரே அட்டையாக, அதாவது பத்து பத்து மாத்திரைகளாக தான் கிடைக்கும். ஆகையால் அங்ஙனம் அட்டைகளாக வாங்கி அவைகளை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பிரித்து கொடுத்து கொள்ளலாம்.
யார் யார் வைத்திருக்க்க வேண்டும், எப்படி வைத்திருக்க வேண்டும்..?
இந்த மாத்திரைகளை கீழ்கண்ட ரிஸ்க் உள்ளவர்கள் எப்படி அடையாள அட்டைகளை தனது சட்டை / பர்ஸ் பாக்கெட்டுகளில் வைத்திருப்போமோ அதே போல் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
a) நீரிழிவு நோய்
b) உயர் இரத்த அழுத்தம்
c) புகைப்பிடிப்பவர்கள்
d) பருமனான நபர்கள் (80 கிலோ மற்றும் அதற்கு மேல்)
e) அதிக ‘கெட்ட’ இரத்த கொலஸ்ட்ரால் உள்ளவர்கள்
f) மாரடைப்பின் குடும்ப வரலாற்றைக் கொண்டவர்கள்
g) மன அழுத்தம் நிறைந்த வேலை மற்றும் மன உளைச்சல் அதிகம் உள்ளவர்கள்
h) 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் (இந்த வகையினரை பற்றி KG மருத்துவமனையின் செய்தி குறிப்பில் உள்ளது ஆனால் Dr.GB யூடியூபில் கூறும்போது கூறவில்லை)
மேலே சொன்ன வகையினர் மேலே சொன்ன லோடிங் டோஸை (அதாவது Disprin 325 mg-1 tablet, Atorvastatin 80 mg-1 tablet, Clopitab 150 mg-2 tablets) ஒரு சிறிய ஷேஷியில் போட்டு தனது பாக்கட்டில் / பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
மற்றவர்கள் இவைகளை தனது வீடுகளில், வாகனங்களில் வைத்திருந்தால போதும். ஆனால் மற்றவர்களும் ஒரு சேஷேயை தனதுடன் எப்போதும் வைத்திருந்தால் தனக்கு பயன்படாவிடினும் தனக்கு அருகில் இருக்கும் மற்றவர்களுக்கு பயன்படலாம்.
இவைகள் எங்கு கிடைக்கும்?
இவைகள் அனைத்து மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கோவை KG மருத்துவமனை பார்மஸியில் தனி தனி சேஷேயில் கிடைக்கும்.
இவைகளை யார் எடுக்க கூடாது ?
பெப்டிக் அல்சர் உள்ளவர்கள் டிஸ்பிரினை தவிர்த்து விட்டு மற்ற இரு மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று Dr. GB கூறுகிறார்.
சரி.. அவ்வளவு தானா.. இது இருந்தால் போதுமா, இதய சம்பந்தப்பட்ட அனைத்து மரணங்களிலிலிருந்து தப்பித்து கொள்ளலாமா...??
இல்லையில்லை.. இது மாரடைப்பு வலி வரும்போது செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே.
இது தவிர மாரடைப்பு வந்து நாம் சிகிச்சை அளிக்குமுன் cardiac arrest என்ற இதய நிறுத்தம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னென்ன, Hear failure என்ற இதய செயலிழப்பு என்றால் என்ன, முதலுதவிகள் தவிர்த்து மாரடைப்பு, இதய செயலிழப்பு ஆகியவைகளை வாராமல் தடுக்க.. அதாவது வருமுன்காக்க நாம் என்ன செய்ய வேண்டும், பொதுவாக ஆரோக்கியமான வாழ்விற்கு தேவையான வாழ்க்கை முறைகள் என்னென்னெ..?
0 Comments
Don't Comment Spam Link on Comment Section.