HOME REMEDIS FOR FEVER AND COLD
வைரஸ் சளி காய்ச்சல் சளிக்கு இயற்கை மருந்து
மழைக்காலம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் துன்ப படுவது சளி காய்ச்சலால் தான்.சீதோஷ்ண நிலை திடீரென மாற்றம் ஆகி வரும் நிலையில் எந்த ஒரு எதிர்ப்பு சக்தி பலமாக இருப்பவர்கள் கூட , இந்த சீசனல் நோய்க்கு ஆளாகிதான் பின்னர் குணம் பெறுவர். அப்படி பட்ட சீதோஷ்ண நிலை மாற்ற சூழ்நிலையால் வரும் காய்ச்சல், சளி, போன்றவைகள் அனைத்தும் தொற்றுகளாகவே இருக்கும்.
திடகாத்திரமாக இருப்பவர்களுக்கு கூட, வீட்டில் குழந்தைகள் அல்லது பெரியவர்களுக்கு காய்ச்சல், சளி வந்துவிட்டால், அவர்களிடத்திலிருந்து தொற்றிக்கொள்ளும்.
என்ன செய்யலாம்? இருக்கவே இருக்கு இயற்கை மருத்துவம்.
நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற ஆயிரக்கணக்கான இயற்கை வைத்தியம் இதுபோன்ற தொற்று வியாதிகளுக்கு நல்ல தீர்வு கொடுக்கிறது. அதை முறையாக நாம் பயன்படுத்தினால் விரைவில் குணம் பெற முடியும்.
இருமல் தீர வீட்டு வைத்தியம்:
தேன் குடிப்பதால் வறட்டு இருமல் கட்டுப்படும். இரவில் தூங்குவதற்கு முன்பு வெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகுவதால் வறட்டு இருமல் கட்டுப்படுத்தப்பட்டு, நிம்மதியான தூக்கம் வரும். ஒரு வயது குறைந்த குழந்தைகளுக்கு இதை கொடுக்க கூடாது.
லெமன் டீயில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் இருமல் நிற்கும். பகலில் இதுபோன்று செய்து பயன்பெறலாம்.
வெதுப்பான நீரில் குளியல்:
சளி காய்ச்சல் இருக்கும்போது குளிக்க கூடாது என்று கூறுவார்கள். ஆனால் அதீத அசதி, சோர்வு மற்றும் உடல் வலி இருக்கும்போது, வெதுவெதுப்பான நீரில் இலேசான குளியல் போடும்போது, உடல் அசதி, சோர்வு நீங்கி புத்துணர்வு பெற முடியும். அதிக நேர குளியல் உடம்பிற்கு ஆகாது.
சளி இருமலுக்கு சிக்கன் சூப்;
அதிகமான சளி, ஒழுக்கு இருக்கும்போது சிக்கன் சூப் செய்து வெதுவெதுப்பாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் தொண்டைக்கு இதம் கிடைப்பதோடு, அதிகப்படியாக உள்ள சளி கரைந்து வெளியேற்றம் ஏற்படும்.
இஞ்சி, மிளகு, சுக்கு கசாயம் செய்து குடிக்கலாம். நிலவேம்பு குடிநீர் பயனளிக்கும்.
Tags: Sali, Kaichal, Virus Fever, Iyarrkai Maruthuvam
0 Comments
Don't Comment Spam Link on Comment Section.