தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்

கால்வலி முதுகுவலியைக் கூட தாங்கி வேலை செய்து விடலாம். ஆனால் தலை வலி வந்தால் பாடாய் படுத்திவிடும். நகர முடியாது. வேலைகளை செய்ய முடியாது. 

தலைவலி சரியானவுடன், அப்பாடா என்கின்ற பெருமூச்சு மகிழ்ச்சியுடன் வரும். இதை அனுபவிப்பவர்களுக்கு புரியும். அப்படி தலைவலி வந்தால், சரியானால் போதும் என்று பக்க விளைவுகளை அறிந்தும் பெரும்பாலோனோர் மாத்திரைகளை விழுங்குவார்கள். 

முதலில் அதற்கான இயற்கை முறையில் தீர்வுகளை பாருங்கள். எதையும் முயலாமல் மாத்திரையை விழுங்குவது தவறு. இதோ உங்களுக்கான எளிய வழிகள். 

ottrai thalai vali neenga


தலைவலி குணமாக பாட்டி வைத்தியம் - 1

உருளைக் கிழங்கை துண்டாக்கி, நெற்றியில் தேய்க்கவும் அல்லது அதனை அரைத்து தலையில் பற்று போல் இடுங்கள். சில நிமிடங்களில் தலை வலி மறைந்து போகும். 

தலைவலி குணமாக பாட்டி வைத்தியம் - 2 

ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து இஞ்சியை நசுக்கி அதில் போடுங்கள். 10 நிமிடம் நன்றாக கொதிக்க வையுங்கள். பின்னர் அதனை இறக்கி எலுமிச்சை சாறு சில துளிகள் பிழிந்து, அதனை வெதுவெதுப்பாக பருகவும். வலி சட்டென விட்டுவிடும். 

தலைவலி குணமாக பாட்டி வைத்தியம் -3 

சுக்கு ஒரு துண்டு எடுத்து நீர் விட்டு அரைத்து தலையில் பற்று இடுங்கள். தலைவலி குணமாகிவிடும் இதை தினமும் 10 கிராம் சாப்பிட்டால் தொப்பை வேகமா குறையுமாம்

தலைவலி குணமாக பாட்டி வைத்தியம் - 4 

உங்கள் உடலில் தேவையான அளவு நீரில்லாதபோது சூடேறி தலைவலி உண்டாகும். உடனே சில டம்ளர் நீர் குடித்து பாருங்கள். 

தலைவலி குணமாக பாட்டி வைத்தியம் -5 

முட்டைக் கோஸ் இலையை நீர் விடாமல் அரைத்து அதனை தலையில் பற்று இடவும். அதன் சற்றினை நெற்றியில் தடவவும். 

தலைவலி குணமாக பாட்டி வைத்தியம் -6 

பால் கலக்காத வரகாபியில் சில துளி எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.


Post a Comment

0 Comments