வைரஸ் காய்ச்சல் - சரி செய்ய வழி தான் என்ன?

 இந்த பனிக்காலத்தில், குழந்தைகளுக்கு அதி வேகமாக பரவி வருவது சளி, மற்றும் வைரஸ் காய்ச்சல். இந்த தொற்று ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு அதி வேகமாக பரவும் அதிக ஆபத்து கொண்டது. பருவநிலை, சீதோஷ்ண நிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. குறிப்பாக பனிக்காலம் முடிந்து, வெயில் காலம் தொடங்குகையில் இது போன்ற "வைரஸ் காய்ச்சல்" பாதிப்புகள் அதிகம் இருக்கும். 

virus kaichal sariyaga


எப்படி வைரஸ் காய்ச்சல் சரி செய்வது? 


1. இயற்கை முறையில் காய்ச்சல் கஷாயம் செய்து கொடுக்க, குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு நல்ல குணம் கிடைக்கும். 

2. குழந்தை மருத்துவரை கலந்து ஆலோசித்து அவர் தரும், மருந்து, டானிக்குகளை குழந்தைகளுக்குப் புகட்டுவதன் மூலம் ஓரளவிற்கு காய்ச்சலை குணப்படுத்தலாம். 

3. பனி காலத்தில் குழந்தைகள் மற்றும், பெரியவர்கள், அது பாதிக்காமல் இருக்க "ஸ்வெட்டர்" போன்ற தடுப்பு உடைகளை அணிந்து கொள்வதன் மூலம் அதன் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம். 


மூலிகை வைத்தியம் செய்து எப்படி "வைரஸ் காய்ச்சல்" குணப்படுத்துவது?


நம் தமிழ் மருத்துவத்தின் முக்கிய நாடியே "மூலிகை மருத்துவம்" தான். சில பல மூலிகளை ஒன்றாக்கி, அதை பொடி செய்து வெந்நீரில் குடிப்பதன் மூலம் இந்நோயை விரட்டலாம்.

காய்ச்சல் குணமாக்கும் மிளகு கஷாயம்

நிறைய பேர் சாப்பாட்டில் மிளகு இருந்தாலே தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் மிளகு தரும் மருத்துவ குணம் ஒப்பற்றது. ஒரு கைப்பிடி அளவு மிளகு எடுத்து ஒரு இரும்பு சட்டியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். வறுத்து எடுத்த மிளகை நன்றாகி பொடித்துக்கொள்ள வேண்டும். பொடித்த மிளகுடன் இரண்டு டம்ளர் நீர் ஊற்றி, அது பாதியாகும் அளவிற்கு நன்றாக காய்ச்ச வேண்டும். 

கிடைக்கும் ஒரு டம்ளர் கஷாயத்தை வேளைக்கு கால் டம்ளர் அளவு குடித்து வர மூன்று வேளைகளில் கண்ட காய்ச்சல் காணாமல் போகும். 

ஒருமுறை கஷாயம் வைத்த மிளகை வடி கட்டி, மீண்டும் அதுபோல 2 டம்பளர் நீர் ஊற்றி, 1 டம்பளர் ஆகும் வரை சுண்டவிட்டு, அடுத்த முறை குடிக்கலாம். 

Post a Comment

0 Comments