சளி பிடித்தால் சனியன் பிடித்த மாதிரி என்று சொல்வார்கள். அந்தளவிற்கு அது பாடாய் படுத்திவிடும். மனிதர்களுக்கு மழைக்காலம், குளிர்காலம், வெயில் காலம் என எந்த ஒரு சீதோஷ்ண நிலை மாற்றத்தின்போதும், காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் அதிகரிக்கும். குறிப்பிட்ட கால நிலையிலிருந்து புதிய கால நிலைக்கு மாற்றமடையும்போது, மனிதருக்குள் இதுபோன்ற உடல் உபாதைகள் ஏற்படுவது இயல்பு. குறிப்பாக குழந்தைகளுக்கு பருவ கால மாற்றங்களினால் ஏற்படும் ‘சளி தொந்தரவு’ அதிகமாக இருக்கும்.
இளம்பெற்றோர்கள் இதனால் அதிக மன கவலை அடைந்து, மருத்துவமனைக்கு அடிக்கடி தூக்கிச் செல்ல நேரிடும். எந்த டானிக் கொடுத்தாலும், சரியாக மாட்டேன்கிறது என்பதே அவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தைகளாக இருக்கும். பெரியவர்கள் வீட்டில் இருந்தால், அதற்கு தகுந்த "வீட்டு வைத்தியம்" செய்து முதலுதவி செய்துவிடுவார்கள். இந்தக் காலத்தில் அதெல்லாம் எங்கே நடக்கிறது.
தனிக்குடித்தனம், வேலை காரணமாக வெளியூருக்கு, நகரங்களில் குடி பெயர்ந்து, குழந்தை வளர்ப்பு முறை தெரியாமல்,அந்த பொறுப்பை மருத்துவர்களிடம் விட்டு விடுகின்றனர். சரி, கதை சொல்லாமல் விஷயத்துக்கு வருவோம்.
சளி பிடிக்ககாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
சளி பிடிக்காமல் இருக்க , அது தொடர்பான கால, சீதோஷ்ண நிலைகளிலிருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும்.
- பனிக்காலத்தில் தலையில் குல்லா அணிவது
- ஸ்வேட்டர் போட்டுக்கொள்வது
- அதிக நேரம் வெளியில் சுற்றாமல் இருப்பது
- இளங்காலைப் பொழுதில் பனியில் நனையாமல் இருப்பது
- கண்ட கண்ட இடங்களில் புதிய குடிநீர் குடிக்காமல் இருப்பது
- மழையில் அதிக நேரம் நனையாமல் இருப்பது
- இனிப்பு பண்டங்கள் சாப்பிடாமல் இருப்பது
இப்படி பல வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்து கொள்ளுதல் "சளி பிடிக்காமல் இருக்க" உதவும்.
இதையம் மீறி சளி பிடித்தால் என்ன செய்வது?
அதற்குதான் முன்னோர்கள் விட்டுச் சென்று நாட்டு மருந்து உள்ளது. அவற்றை முறையாக எடுத்துக்கொண்டால், சளி பிரச்னை உங்களை விட்டு விரைவில் அகலும். நல்ல முன்னேற்றம் கொடுக்கும்.
சளிக்கு நாட்டு மருந்து
சளி அகற்றுவதில் நல்ல நாட்டு மருந்து கருமிளகு. இது இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு எடுத்து டீ போட்டு குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீர் எடுத்துக்கொண்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் தேன், 4, 5 கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். அதை அப்படியே 15 நிமிடங்கள் மூடிவைக்கவும். அதன் பிறகு வெதுவெதுப்பாக அதை குடிக்கும்போது தொண்டைக்கு இதம் தரும். சளி அகற்றும். இருமல் போக்கும்.
சளிக்கு சுடு நீர் வைத்தியம்
சளி பிடித்துவிட்டால், வெந்நீர் குடிப்பது அவசியம். சாதாரணமாக தொண்டை கரகரவென்று இருக்கும். வெதுவெதுப்பான நீர் குடிக்கும்போது, தொண்டையில் பட்டு அது தொண்டைக்கு இதம் அளிக்கும்.
அந்த நீரில் துளசி, சிறிது கருமிளகு, 2 சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு வைத்து தாகம் எடுக்கும்போது குடிக்கலாம். அவ்வாறு குடிக்கும்போது சளி கரைந்து, காய்ச்சல் குறைந்து உடல் இயல்பு நிலைக்குத் திரும்பும்.
சளி நீக்கும் பூண்டு
தினம் குழம்பில் பயன்படுத்தும் வெள்ளை பூண்டு சளி நீக்கும் அரு மருந்து. நான்கு அல்லது ஐந்து பூண்டுப் பற்களை எடுத்துக் கொண்டு நெய்யில் பொறித்து எடுக்கவும்.. இதமான சூட்டில் அந்த பூண்டை எடுத்து அப்படியே சாப்பிடலாம். அல்லது பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு / சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். இது சளி, இருமலை இயற்கைவழியில் நீக்கும் அற்புதமான நாட்டு மருந்து.
மூக்கடைப்பு நீங்க பாட்டி வைத்தியம்
சளி பிடித்தால், அடுத்து எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் "மூக்கடைப்பு". நீர் மாதிரி ஒழுகி கொண்டிருக்கும் சளி, மூன்று நாட்களுக்குப் பிறகு முற்றி போகும். அது சுவாச குழாயில், நாசலில் கெட்டிப்பட்டு அடைத்துக்கொள்ளும். குழந்தைகளுக்கு அதை எப்படி வெளியேற்றுவது என்பது தெரியாது. பெரியவர்களுக்கு கூட மூச்சுக்குழல் ஒட்டிக்கொண்டு, காற்று வெளியேற்ற, உள்ளிழுக்க சிரம படுவர். அப்படி மூக்கடைப்பு ஏற்படும்பொழுது என்ன செய்ய வேண்டும்?
என்ன செய்தால் மூக்கடைப்பு நீக்க முடியும் என நம் பாட்டிமார்கள் இயற்கை வைத்தியங்களை சொல்லி தந்து சென்றுள்ளனர்.
அவற்றைத் தெரிந்து கொள்வோமா?
- நல்ல தேங்காயெண்ணெய் 50 மில்லி அளவு எடுத்துக்கொள்ளவும்.
- ஒரு டீஸ்பூன் அளவு கருஞ்சீரகப்பொடி (வறுத்தது)
- இரண்டையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- ஆறிய பிறகு இதை வெள்ளைத்துணியில் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
- ஒரு கண்ணாடி அல்லது, தூய்மையான பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
மூக்கடைப்பு இருக்கும்போது, இதில் ஒன்று அல்லது இரண்டு சொட்டு எடுத்து
மூக்கில் விட்டுக்கொள்ள, மூக்கடைப்பு உடனே நீங்கும்.
0 Comments
Don't Comment Spam Link on Comment Section.