மனிதர்களுக்கு பொதுவாக காய்ச்சல் வருவது என்பது சர்வ சாதாரண விஷயம்தான். உடல்நிலையில் ஏற்படும் அதிக வெப்பமே காய்ச்சல் என உணர படுகிறது. அது அடிபடுவதாலோ, கிருமிகளாலோ ஏற்படலாம். காய்ச்சல் வர பல காரணிகள் உண்டு. மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காலங்களில் ஏற்படும் தொடர் காய்ச்சல், வாந்தி பேதி, மலேரியா போன்ற நோய்களுக்கு அதிக கவனம் கொடுத்து, உடனடியாக வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். சரி, காய்ச்சல் வந்துவிட்டது என்ன? குழந்தைகளுக்கு காய்ச்சல் என்றால் என்ன செய்வது? பெரியவர்களுக்கு என்றால் என்ன செய்வது? நடுத்தர வயதினருக்கு என்றால் என்ன செய்வது? எல்லாவற்றிற்கும் ஒரே வைத்தியம் தான்.
உடல் வெப்பநிலையை சீராக்க மருந்து எடுத்துகொள்ள வேண்டும். முடியாத பட்சத்தில் மருத்துவரை அணுக வேண்டும். சாதாரண காய்ச்சல்களுக்கு வீட்டிலேயே வைத்தியம் செய்து கொள்ளலாம். 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் மருத்துவரிடம் சென்று ஆலோசிப்பது அவசியம்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகளுக்கு காய்ச்சல் என்றால் இதில் குறிப்பிட்டுள்ளபடி செய்து பாருங்கள். நிச்சயம் குணம் தெரியும்.
1.ஈரத்துணி வைத்தியம்
இது நம் வீடுகளில் செய்யும் வழக்கமான வைத்தியம் தான்.உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைக்க மிகவும் உதவியாக இருக்கும்.வெது வெதுப்பான நீரில் சிறிது பருத்தி துணியை நனைக்க வேண்டும்.தண்ணீரை பிழிந்து துணியினை நெற்றி பகுதியில் சிறிது வைக்க வேண்டும்.குழந்தைகளின் உடலிலும் துடைத்து எடுக்கலாம்.நீர் குளிர்ந்த நீராக இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
குழந்தைகளை குளிக்க வைக்க வேண்டுமென்றால் இளஞ்சூடான தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும். சாதாரண தண்ணீரில் குழந்தையை குளிப்பாட்ட கூடாது.
2. நீர்ச்சத்து அவசியம்
அதிகப்படியான வெப்பநிலையால் நீர்ச்சத்து குறைந்து சருமத்தில் வறட்சி ஏற்படக்கூடும்.குழந்தைகளை தண்ணீர் அதிக அளவில் பருக வைப்பது நல்லது.ஆறு மாதத்திற்கு கீழே உள்ள குழந்தை என்றால் அடிக்கடிதாய்ப்பால் தர வேண்டும்.ஆறு மாத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு தண்ணீர் மற்றும் பழச்சாறு போன்றவற்றை பருக கொடுக்கலாம்.தண்ணீர் கொதித்து ஆறவைத்த தண்ணீராக இருப்பது நல்லது.
3.வெங்காயம்
உடலின் வெப்பநிலை குறைக்க வெங்காயம் பெரிது உதவும்.வெங்காயத்தை வட்டமான பெரிய துண்டுகளாக நறுக்கி குழந்தையின் பாதத்தில் நன்றாக 2 நிமிடம் தேய்க்க வெப்பநிலை குறையும்.ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை செய்யலாம்.
4.துளசி தண்ணீர்
குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது தெரிந்தவுடன் தண்ணீரில் துளசி இலைகளை போட்டு கொதிக்க விடலாம்.ஆறியவுடன் சிறிது சிறிதாக அந்த தண்ணீரை கொடுக்க நல்ல பலன் கிடைக்கும். காய்ச்சல் நன்கு குணமாகும் வரை துளசி தண்ணீரை கொடுக்கலாம்.
5.எலுமிச்சை,இஞ்சி மற்றும் தேன்
இந்த வைத்தியத்தினை 1 வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு பின்பற்றலாம்.1 டே.ஸ்பூன் எலுமிச்சை சாறை தண்ணீர் கலக்காமல் எடுத்து கொள்ளவும். இதனுடன் 1 டே.ஸ்பூன் தேன் மற்றும் 4 சொட்டு இஞ்சி சாறு சேர்க்கவும்.காலை,மாலை இரு வேளை கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.
6.மல்லி கஷாயம்
இரண்டு டம்ளர் தண்ணீரில் 1 டே.ஸ்பூன் மல்லித்தூளை சேர்க்கவும்.ஒரு டம்ளர் அளவிற்கு வற்றும் வரை நன்றாக காய்ச்சவும்.இதனுடன் கருப்பட்டி சேர்த்து இளஞ்சூட்டுடன் குழந்தைகளுக்கு கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.
7.உலர் திராட்சை
அரை கப் தண்ணீரில் 25 உலர் திராட்சைகளை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறியதும் திராட்சை மிருதுவாகிவிடும். இதனை அரைத்து பிழிந்து சாறு எடுத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்து காலை,மாலை இரு வேளை கொடுக்கலாம்.
8.நல்ல ஓய்வு
காய்ச்சலின் பொழுது கஞ்சி போன்ற எளிமையான உணவினை உட்கொள்வதும் ஓய்வும் மிக மிக அவசியம்.உடலின் வெள்ளையணுக்களானது நோய் கிருமிகளை அளிக்கும் வேலை செய்து கொண்டிருப்பதால் இந்த நேரத்தில் உடலுக்கு ஓய்வளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
குழந்தைகளின் உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற கிருமிகள் நுழையும் பொழுது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமானது எதிர்த்து போராடும் நிகழ்வே காய்ச்சல் ஆகும்.
காய்ச்சலின் பொழுது வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு போன்ற உபாதைகள் இருந்தால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவது நலம்.
காய்ச்சலின் பொழுது குழந்தைகளை குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க கூடாது.வெது வெதுப்பான நீரில் மட்டுமே குளிக்க வைக்க வேண்டும்.
1 வயதிற்கும் குறைவான குழந்தைகள் என்றால் டவலை வெது வெதுப்பான நீரில் நனைத்து துடைத்து எடுப்பதே நலம்.
குழந்தைகளுக்கான தெர்மோ மேட்டரை உபயோகிக்கும் பொழுது பாதரசம் உபயோகிக்காத தெர்மோமீட்டரை பயப்படுத்துவது நல்லது.
இயற்கையான காய்ச்சல் மருந்து இதுதான்
காய்ச்சல் குணமாக மிளகு மருந்து
காய்ச்சல் குணமாக மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு அதை வாணலியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.
மிளகு நன்கு வறுபட்டு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் இறக்கி மத்தை வைத்து முடிந்த அளவு கடைந்து மீண்டும் அடுப்பில் வைத்து அதில் இரண்டு டம்ளர் குடிநீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வற்றி பாதியானது இறக்கி விடலாம்.
இந்த மிளகு கஷாய நீரை ஆற வைத்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கால் டம்ளர் குடித்தால் காய்ச்சல் குணமாகும். ஒவ்வொரு முறை குடிக்கும் முன் லேசாக சுட வைத்து இளஞ்சூட்டில் குடித்தல் நல்லது. இந்த மருத்துவத்தை மொத்தமாக செய்து வைத்துக் குடிக்காமல் தினம் தினம் புதிதாக தயார் செய்து குடித்து வந்தால் நலம்.
இரண்டே நாட்களில் காய்ச்சல் குணமாகும். மிளகின் காரம் அதிகம் இருந்தால் அதில் சிறிது சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
காய்ச்சல் குணமாக சீரகம், மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை மருந்து
காய்ச்சல் குணமாக சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகு அரை தேக்கரண்டி, இஞ்சித்துண்டு அரை தேக்கரண்டி அளவு எடுத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையுடன் கறிவேப்பிலை ஒரு கையளவு சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும்.
அரைத்த கலவை மை போன்று இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த காய்ச்சல் மருந்தை ஒரு சிறிய நெல்லிக்கனி அளவு எடுத்து காலையும் மாலையும் வாயில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீர் குடித்து வர காய்ச்சல் குணமாகும்.
காய்ச்சல் குணமாக வல்லாரை, மிளகு, துளசி மருந்து
வல்லாரை இலை, துளசி இலை மற்றும் மிளகு ஆகியவற்றை ஒரு கைப்பிடி வீதம் எடுத்துக் கொண்டு நன்கு அரைக்க வேண்டும். மை போல் அரைத்த பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின் காய்ச்சல் உள்ளவர்களுக்கு வேளைக்கு ஒரு உருண்டை வீதம் வாயில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை அருந்தச் செய்தால் காய்ச்சல் குணமாகும்.
காய்ச்சல் குணமாக துளசி, இஞ்சி மருந்து
காய்ச்சல் குணமாக துளசி இலை சாறும், இஞ்சி சாறும் சரி பங்கில் கலந்து வேளைக்கு கால் டம்ளர் வீதம் குடித்து வர காய்ச்சல் குணமாகும்.
காய்ச்சல் குணமாக பார்லி அரிசி, பால் மருந்து
காய்ச்சல் குணமாக பார்லி அரிசி வாங்கி சாதம் வைப்பது போல் தண்ணீருக்கு பதில் பாலில் வேக வைத்து கொடுக்கலாம். காய்ச்சல் அடிக்கும் போது நாவில் ருசி அவ்வளவாக இருக்காது. சாப்பாடும் சாப்பிட தோன்றாது. அந்த மாதிரி சமயங்களில் இந்த பார்லி பால் சாதம் கை குடுக்கும்.
காய்ச்சல் – சாதாரண ஜூரத்திற்கு
இருபது கிராம் மிளகை எடுத்து சட்டியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு அனைத்தும் நன்கு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் மத்தைக் கொண்டு கடைந்துவிட்டு அதில் 200 மில்லி நீர் விட்டு, 100 மில்லியளவுக்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை கொடுத்து வர வேண்டும். இரண்டே நாட்களில் குணமாகிவிடும்.
காய்ச்சல் குணமாக
சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகு அரை தேக்கரண்டி, இஞ்சித்துண்டு அரை தேக்கரண்டி அளவு எடுத்து அம்மியில் வைத்து, சுத்தம் பார்த்து கறிவேப்பிலையில் கைப்பிடியளவில் பாதியளவு எடுத்து இத்துடன் வைத்து மை போல அரைத்து, இரண்டு கழற்சிக்காயளவு எடுத்து வாயில் போட்டு தண்ணீணீர் குடிக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் இவ்விதம் சாப்பிட்டு வந்தால் எந்த விதமான காய்ச்சலும் குணமாகும்.
காய்ச்சல்
காய்ச்சல் என்ற நிலை ஆரம்பித்தவுடனேயே மிளகுக் கஷாயம் போட்டுக் கொடுத்துவிட்டால் எந்த வகையான காய்ச்சலும் குணமாகும். ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டி காய்ந்தவுடன் மூன்று தேக்கரண்டியளவு மிளகை எடுத்துச் சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். மிளகு நன்றாக வறுபட்டு சிவந்து கருகி அதில் தீப்பெ¡றி பறக்கும் வரை வறுத்து அதில் இரண்டு ஆழாக்களவு தண்ணீரை விட்டு, நன்றாகக் கொதிக்க விட வேண்டும்.
கொதித்தபின் இறக்கி ஆறவிட்டு தாங்கக்கூடிய அளவு வந்ததும் இறுத்து கொஞ்சம் சர்க்கரைச் சேர்த்துக் குடித்துவிட வேண்டும். இதில் பாதியளவு கஷாயத்தை வைத்துக்கொண்டு மறுபடியும் கொதிக்க வைத்து மறுவேளைக்குக் குடிக்க வேண்டும். இந்த விதமாக காலை மட்டும் மூன்று நாளைக்கு சாப்பிட்டு வந்தால் எந்தக் காய்ச்சலும் குணமாகும்.
எந்த விதமான காய்ச்சலும் குணமாக
வல்லாரை இலையுடன், மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் என்ன காரணத்தால் ஏற்பட்டிருந்தாலும் சரியாகும்.
குளிர்காய்ச்சல்
நடுங்க வைக்கும் குளிருடன் காய்ச்சலும் இருக்கும்போது, சிறிது மிளகைத் தட்டிப்போட்டு, அத்துடன் கொஞ்சம் பனை வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கி கொடுத்து வர குணமாகும்.
காய்ச்சல் குணமாக சித்த வைத்தியம்
காய்ச்சல்... சில நேரங்களில் சிலரது உயிரைப்பறிக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவிடுகிறது. உயிர்க்கொல்லி நோய் பட்டியலில் அதுவும் இடம்பெற்றுவிடுமோ என்கிற அச்சம் மக்கள் மத்தியில் நிலவ ஆரம்பித்துவிட்டது. சாதாரணக் காய்ச்சல், தொடர் காய்ச்சல், விட்டுவிட்டு வரும் காய்ச்சல், அதிகமாகி குறைதல் ஆகியவை இதன் வகைகளில் சில.
காற்றின் மூலம் பரவக்கூடியது, அசுத்தத்தால் வருவது, குடல்காய்ச்சல். டைபாய்டு, பாக்டீரியா தொற்று காரணமாக வருவது, கொசுக்களால் ஏற்படும் மூளைக்காய்ச்சல், மலேரியா, டெங்கு, யானைக்கால் நோயின் அறிகுறியான கால்வீக்கத்துடன் கூடிய காய்ச்சல்...
என நீண்ட பட்டியல் இதற்கு உண்டு. இவை தவிர பன்றிக் காய்ச்சல், ஜிகா வைரஸ் எனப் புதிது புதிதாக வந்து மனிதர்களைப் பாடாகப்படுத்துகின்றன.
உண்மையில், காய்ச்சல் வந்தால், அலட்சியம் காட்டாமல் உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் போதும். பிறகு பயப்படத் தேவையில்லை. அன்று முதல் இன்று வரை காய்ச்சலை எதிர்கொள்ள இயற்கையாகவே சில எளிய வழிகள் உள்ளன. அவற்றில் சில இங்கே...
மிளகு வைத்தியம்
கைப்பிடி மிளகை வெறும் வாணலியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு சிவந்து அதிலிருந்து தீப்பொறி பறக்குமளவுக்கு வறுக்க வேண்டும். பிறகு அதை, அடுப்பிலிருந்து இறக்கி அதை மத்தால் கடைந்து மீண்டும் அடுப்பில் வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்கவிட வேண்டும்.
நீர் பாதியாக வற்றியதும், கீழே இறக்கி, ஆறியதும் அதிலிருந்து கால் டம்ளர் குடிக்க வேண்டும். இதேபோல் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை செய்து குடிக்க வேண்டும். ஒருமுறை கஷாயம் வைத்த மிளகைக்கொண்டு மீண்டும் ஒருமுறை கஷாயம் வைக்கலாம்.
பிறகு புதிதாக மிளகை வறுத்துத்தான் கஷாயம் செய்ய வேண்டும். மிளகின் காரம் அதிகமாக இருந்தால், பனைவெல்லம் சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.
கறிவேப்பிலை வைத்தியம்
கைப்பிடி கறிவேப்பிலையுடன் அரை டீஸ்பூன் சீரகம், அதில் பாதியளவு மிளகு, இஞ்சி சிறு துண்டு எடுத்து வெதுவெதுப்பான நீர்விட்டு மையாக அரைக்க வேண்டும். மையாக அரைத்தக் கலவையில் வெந்நீர் ஊற்றிக் கலந்து, வடிகட்டி, தேன் சேர்த்து காலை, மதியம், மாலை என குடித்து வந்தால் காய்ச்சலில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
வல்லாரை வைத்தியம்
வல்லரை, துளசி இலைகள், மிளகு தலா ஒரு கைப்பிடி அளவு எடுத்து மையாக அரைக்க வேண்டும். மைபோல் அரைத்ததும் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, நிழலில் உலரவைக்க வேண்டும்.
அதிகமாகக் காய்ச்சல் உள்ளவர்கள், காய்ந்த அந்த உருண்டையை வேளைக்கு ஒன்று வீதம் வாயில் போட்டு, கொதிக்கவைத்து, ஆறவைத்த நீரைக் குடித்து வந்தால் குணமாகும்.
இஞ்சி வைத்தியம்
துளசி இலை, இஞ்சி சேர்த்து அரைத்து சாறு எடுத்து வேளைக்கு கால் டம்ளர் வீதம் குடித்துவர, காய்ச்சல் குணமாகும்.
பார்லி பால்
காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் பார்லி அரிசியை வாங்கி, தண்ணீர் சேர்த்து சாதம் பொங்குவதுபோல் வேகவைத்துச் சாப்பிடலாம். நாக்கில் ருசி இல்லாத நேரங்களில் சாப்பிடத் தோன்றாது.
அப்படிப்பட்ட நேரங்களில் இந்த பார்லி சாதம் ஓர் ஊக்கமருந்தாகச் செயல்படும். பார்லி அரிசியை பாலில் வேகவைத்து பனங்கற்கண்டு சேர்த்தும் சாப்பிடலாம்.
பித்தக் காய்ச்சல் வந்தால், தனியா அல்லது கொத்தமல்லிக் கீரையை கஷாயமாக்கிக் குடிப்பதன் மூலம் குணம் பெறலாம். இவற்றை தனித்தனியாகத் துவையலாகச் செய்தும் சாப்பிடலாம்.
புதினா இலையை கஷாயமாக்கிக் குடித்துவந்தால், எந்தக் காய்ச்சலாக இருந்தாலும், அதன் தீவிரம் குறைந்து விடும்.
மிளகு, இஞ்சி, சீரகம், தூதுவளை, துளசி, கற்பூரவள்ளி போன்றவற்றை தண்ணீர்விட்டுக் காய்ச்சி, வெறுமனேயோ பாலுடன் கலந்தோ குடித்து வந்தால் தீராத காய்ச்சலும் தீரும்.
ஆடாதொடா இலைச்சாற்றில் தேன் கலந்து குடித்தால், சளியுடன் கூடிய காய்ச்சலின் தீவிரம் குறையும்.
தேனில் இஞ்சியை வதக்கி, தண்ணீர் சேர்த்து, சுண்டக் காய்ச்சிக் குடித்துவந்தால் வலியுடன் கூடிய காய்ச்சலுக்கு நிவாரணம் கிடைக்கும்.
துளசி இலையுடன் சிறிது உப்பு சேர்த்துக் காய்ச்சி, இளஞ்சூட்டோடு குடித்துவந்தால் குளிர் காய்ச்சல் தீவிரம் தணியும்.
துளசி இலைகளை தண்ணீரில் ஊறவைத்துக் குடித்துவந்தால், மலேரியா காய்ச்சலின் தீவிரம் மட்டுப்படும்.
கொத்தமல்லிக் கீரைச் சாற்றைக் குடித்துவந்தால், மூளைக்காய்ச்சல் தீவிரத்தைக் குறையச் செய்யலாம்.
மூன்று டீஸ்பூன் துளசி சாற்றுடன் இரண்டு டீஸ்பூன் இஞ்சிச்சாறு, ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து தினமும் மூன்று தடவை குடித்து வந்தால் மலேரியா காய்ச்சல் குறையும்.
இவை தவிர டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளி இலைச்சாறை வெறுமனேயோ தேன் கலந்தோ குடித்து வந்தால் ரத்த தட்டணுக்கள் அதிகரிக்கும். புதிதாக பப்பாளி இலைகளில் காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி 10 மி.லி வீதம் தினமும் 4 தடவை குடிக்க வேண்டும்.
நிலவேம்பு கஷாயம், டெங்கு பரவுவதற்கான வைரஸை அழிக்கக்கூடியது. அது காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்கும். நிலவேம்பு, சுக்கு, மிளகு, பற்பாடகம், விலாமிச்சை, சந்தனம், பேய்ப்புடல், கோரைக்கிழங்கு, வெட்டிவேர் ஆகியவை சேர்ந்த நிலவேம்புக் கலவையை தண்ணீர்விட்டு, கொதிக்கவைத்து, வடிகட்டி 50 மி.லி வீதம் தினமும் இரண்டு தடவை குடித்துவந்தால், டெங்கு வைரஸ் அழிந்துவிடும். இதன் அருமை புரிந்துதான் அரசு மருத்துவமனைகளில், நிலவேம்பு கஷாயம் இலவசமாக வழங்கப்படுகிறது.
மலைவேம்பு இலைச்சாறும் டெங்கு வைரஸை அழிக்கக்கூடியது. புதிதாக பறித்த மலைவேம்பு இலைகளுடன் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மி.லி வீதம் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை குடித்துவந்தாலும், டெங்கு வைரஸ் அழிந்துவிடும்.
பப்பாளி இலைச்சாறு மட்டுமல்லாமல் கஷாயங்களையும் ஐந்து நாள்கள் குடித்துவந்தால், காய்ச்சல் தணிந்துவிடும். காய்ச்சல் குணமான பிறகும் மேலும் 2 நாள்களுக்கு குடித்துவந்தால் காய்ச்சலின் தாக்கத்தை முழுமையாக தடுத்துவிடலாம். மூன்றையும் ஒருசேர குடிப்பதில் சிரமம் இருந்தால், முதலில் நிலவேம்புக் கஷாயம் குடித்துவிட்டு மற்றவற்றைத் தொடரலாம்.
காய்ச்சலுக்கு நம் வீட்டிலேயே வைத்தியம் உண்டு. சரியான நேரத்தில், சரியாகச் செய்யப்படும் சிகிச்சை நிச்சயம் நல்ல பலனைத் தரும்.
0 Comments
Don't Comment Spam Link on Comment Section.