நீரிழிவு என்ற சர்க்கரை நோய் தீர்க்க சோளம் ரொட்டி ஒரு அருமையான உணவாக செயல்படுகிறது. இது என்ன செய்கிறதென்றால் உடல் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மிக அதிகமாகாமல் பார்த்துக்கொள்கிறது. சாதாரண நெல் போன்ற அரசி உணவு வகைகளில் அதிக சர்க்கரை சத்து இருப்பதால், அவற்றை மருத்துவர்கள் தவிர்க்க சொல்கிறார்கள்.
கோதுமையை சிலர் பரிந்துரைக்கிறார்கள். அதைவிட சோளத்தில் செய்யப்படும் ரொட்டி மிக அற்புமான உணவாக உள்ளது.
ஆயுர்வேதத்தில் சோளம் கொழுப்பை கரைக்கவும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவு என்பதாலேயே இது சிறந்த உணவாக இருக்கிறது.
சோள விதைகள் பசையம் இல்லாத தானியமாகும். இதன் எளிதில் செரிமானிக்கக் கூடிய ஆற்றலாது உடலுக்கு எண்ணற்ற வகைகளில் நன்மை சேர்க்கிறது. இனிப்பு , துவர்ப்பு சுவையை கொண்ட இது காலை அல்லது இரவு உணவுக்கு பொருத்தமாக இருக்கும். ஆயுர்வேத முறையில் சோள உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.
ஏனெனில் ஆயுர்வேதத்தில் சோளம் கொழுப்பை கரைக்கவும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவு என்பதாலேயே இது சிறந்த உணவாக இருக்கிறது. இதில் சோள ரொட்டி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- சோளம் மாவு - 1/2 கப்
- தண்ணீர் - 1/2 கப்
- உப்பு - தே.அ
- நெய் - தே.அ
செய்முறை :
தண்ணீரை முதலில் சூடேற்றிக்கொள்ளுங்கள்.
தண்ணீர் சற்று மிதமான சூட்டில் இருக்கும்போது அதை மாவில் ஊற்றிக்கொள்ளுங்கள். உப்பு தேவையான அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.
இப்போது நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.
புரோட்டீன் முழுமையாக கிடைக்க முட்டையை எப்போதும் இப்படித்தான் சாப்பிட வேண்டுமாம்… ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்..!
அடுத்ததாக எப்போதும்போல் சப்பாத்தி கல்லில் உருட்டி எடுத்துக்கொள்ளுங்கள். உருட்டை முடியவில்லை எனில் அடை போல் கை விரல்களாலேயே தட்டி கல்லில் போடுங்கள்.
பின் தோசைக்கல்லில் போட்டு நெய் ஊற்றி சுட்டு எடுங்கள்.
அவ்வளவுதான் சோள மாவு தோசை தயார்.
0 Comments
Don't Comment Spam Link on Comment Section.