சாமை என்பது ஒரு சிறுதானிய வகை. கம்பு, சோளம், கோதுமை போன்று அதுவும் மிக முக்கிமான உணவு வகைகளில் ஒன்று. ஆனால் தற்காலத்தில் வளரும் இளம் தலைமுறையினருக்கு இது பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வேகமாக ஓடும் உலகத்தில் உயர்தர உணவு என நினைத்து, குப்பை போன்ற உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். அதன் விளைவு?
அதிக உடல் எடை, அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என மிக அதிகமாகவே நோய் நொடிகளால் பாதிக்கப்படுகின்றனர். ஏறிய எடையை குறைக்கவென மாதாந்திரம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்கின்றனர். Body Fat ஆல் வரும் உப தொந்தரவுகள், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் என அவர்களை பிடித்து ஆட்டுவிக்கிறது. என்ன செய்யலாம்?
எப்படி இதைத் தீர்க்கலாம்?
எல்லாம் நம்மிடம் மட்டுமே உள்ளது. உடல் என்ன கேட்கிறதோ, அதை மட்டும் சாப்பிட்டால் போதும். அதுவும் போதுமான அளவு மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிடுகிற உணவுப்பொருளின் தன்மை எத்தகையத்து? அது நம் உடலுக்கு எந்தளவுக்கு நன்மையை செய்யும்? அது இயற்கையில் விளைந்ததா? செயற்கை உரங்கள் மட்டும் "கெமிக்கல்" கொண்டு விளைவிக்கப்பட்டதா? என ஆராய்ந்து அதன் பின் உண்ண வேண்டும். அது மட்டுமில்லாமல், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள்,குழந்தைகள் என அனைவருக்கும் அத்தகைய நன்மை செய்யும் உணவுகளை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும்.
இந்த இயந்திர உலகத்தில் விவசாய பொருட்களை வியாபார நோக்கோடு விற்றுத் தீர்த்து பணக்கார ர்கள் ஆக வேண்டும் என முனைப்போடு இருப்பவர்கள், எந்த வழியிலும் "பணம் சம்பாதிக்கலாம்" என்ற உணர்வோடு செயல்பட்டு, சுயநல போக்கை கடைபிடிக்கின்றனர். அவர்களின் தீவிர சிந்தனையில் உருவாவது தான் உணவுப்பொருள் கலப்படம்.
ஒரு உணவப் பொருளைப் போன்றே இருக்கும் மற்ற ஒன்றை அதில் கலந்து விட்டு, மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் உணவுப்பொருட்களாக மாற்றிவிடுகின்றனர். அவர்களின் பணத்தாசையே இதற்கு காரணம். உண்மையான விவசாயி உணவுப்பொருட்களில் கலப்படம் செய்ய மாட்டான். உன்னதமான எண்ணத்தோடு பயிரிட்டு, அதை மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பார்.
அவனுகுக இருக்கிறதோ, இல்லையோ, மற்றவர்கள் பசியாறி, பயன்பெற வேண்டும் என்பது மட்டுமே அவனுக்கு நோக்கமாக இருக்கும்.
தானிய வகையில் சாமை சிறந்தது ஏன் தெரியுமா?
சிறுதானிய வகை களில் சாமை பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொண்டது.
புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புகள், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, துத்தநாகம், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை சாமையில் அடங்கியுள்ளன.
உடலுக்கு வலிமை தரும் சாமையில் உள்ள அதிகப்படியான கால்சியம் காரணமாக எலும்புகள் வலு பெறுகின்றன. உடலின் தசைகளையும் வலிமை பெறச் செய்கிறது.
விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் சாமை, ஆண்களின் இனப்பெருக்க விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது. உயிரணுக்களின் எண்ணிக்கையையும் கணிசமாக உயர்த்தும்.
சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகமாக இருப்பதால், ரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது சாமை. சாமையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
அரிசியை காட்டிலும் ஏழு மடங்கு அதிக நார்சத்து கொண்ட சாமையை சாப்பிட்டால், ஆரம்ப நிலையில் உள்ள சர்க்கரை நோயை வராமலே தடுத்து பாதுகாக்கும்.
சாமையை உணவில் அடிக்கடி சேர்த்து கொண்டால் நோய்களுக்கெல்லாம் ஆண்வேரான மலச்சிக்கலிருந்து விடுபடலாம். வயிற்றுக் கோளறுகளையும் சரி செய்யும் சாமை பல மருத்துவ ரீதியிலான நன்மைகளையும் கொண்டுள்ளது.
0 Comments
Don't Comment Spam Link on Comment Section.