முதுகுவலி வரக் காரணங்கள் என்ன?

முதுகு வலி காரணங்கள் என்று பார்க்கும்பொழுது பல இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது அதிக வெயிட் தூக்குவதுதான். பல உடல் உழைப்பாளிகளில் குறிப்பாக மூட்டை தூக்குவோர் முதுகு வலியால் அவதி படுவதை நாம் கண் கூடாக பார்க்கலாம். அவர்கள் வேலை முடித்து வீடி திரும்பும்போது வலியை மறக்க சோம பாணம் அருந்திவிட்டுதான் வீட்டிற்கு திரும்புவர். உண்மையில் அது ஒரு மிக கடினமான வேலை. அந்த வேலை செய்வதற்கு உடலில் அதிக சக்தி வேண்டும். அந்த சக்தியை தருவதாக நினைத்துக்கொண்டு அவர்கள் அருந்தும் பாணம் அவர்களின் உயிருக்கே உலை வைக்க கூடியது என்று அவர்களுக்கு தெரிவதில்லை. ஒரு சிலர் அதுபற்றி தெரிந்திருந்தாலும் கூட வலியை மறக்க வேறு ஏதும் வழி தெரியவில்லை என்று கூறிவிடுவர்.

உண்மையில் அதுபோன்ற காரணங்கள் எல்லாம் ஒரு சாக்கு போக்கு மட்டுமே தவிர, அது உண்மையாகாது. ஏனெனின் அதுபோன்ற வேலைகளில் இருப்பவர்கள் ஒழுக்கமாக, நேர்மையாக இருப்பவர்களும் உண்டு. நல்ல ஆரோக்கியமான உடலமைப்புடன் இருப்பவர்களும் உள்ளனர். ஒரு மயக்க நிலையை தற்காலிகமாக அது தருவதால், உடனடியாக அது ஒரு மலிவு விலை மருந்து போல செயல்பட்டு உணர்வை மறக்கடிக்கச் செய்வதால் அதை நாடுகின்றனர்.

முதுகுவலி வர காரணங்கள்


சரி. முதுகு வலி காரணங்கள் மூட்டை தூக்குவது மட்டும்தானா? ஏசி ரூமில் வேலை பார்ப்பவர்களுக்கும், ஏன் வீட்டில் சும்மா இருப்பவர்களுக்கும் கூட முதுகுவலி வருகிறதே? அது எப்படி? என்ற கேள்வி கேட்பது எனக்குப் புரிகிறது. அப்படிப்பட்டவர்கள், அளவுக்கதிகமான உணவு எடுத்துக்கொள்வது, அதிக எடையை ஏற்படுத்திக்கொள்வது, அடிக்கடி எழுந்து செல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து டிவியை பார்த்துக்கொண்டு நொறுக்கு கொறித்துக்கொண்டிருப்பது எல்லாம் ஒரு காரணமாக சொல்லலாம். எனவே எடை அதிகமாகிறது. அதை தாங்க கூடிய அளவிற்கு முதுகு தண்டிற்கு வலிமை இல்லை. அதனால் வருகிறது. இது இயல்பாக ஏற்படக்கூடியது.

திடீர் விபத்துகளில் சிக்குவதால் முதுகு தண்டில் அடிப்படி வலி வருவது. கீழே விழுந்து ஏற்படும் பயத்தால் முதுகு தண்டு சில்லிட்டுப் போவது. அதிக நேர் உட்கார்ந்து பணிபுரியும் டிரைவர், டிரைலர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் போன்றோர்களுக்கு முதுகுவலி வர வாய்ப்பு உண்டு.

causes for back pain


கற்பிணிப் பெண்கள் கரு உருவாவதிலிருந்து, அது குழந்தையாக உருவாகி பத்து மாதங்கள் நிறைவடைந்து பிரசவம் ஆகும் வரைக்கும் அவர்களுக்கு பாரம் (எடை) ஏற ஏற முதுகு தண்டில் வலியும் அதிகரிக்கும். அத்தனை எடையுடன் அவர்கள் நடை பயற்சி செய்தால் மூச்சு வாங்கும். எனினும் இயற்கை முறையில் குழந்தை பெறுவதற்காக அந்த பயிற்சிகள் முக்கியமானதாக கருத்தப்படுகிறது.

வயது மூப்பு காரணமாக முதுகுவலி, இடுப்பு வலி, கழுத்து வலி ஏற்படுவதுண்டு. சிலருக்கு கால் மூட்டுக்கள் கடு கடுவென வலியை உண்டாக்கி பெரும் அவஸ்தையை உருவாக்கும்.


தவிர்க்க என்ன செய்யலாம்? 



பசி எடுத்தால் உணவு. அரை வயிறு மட்டுமே உட்கொள்வது. நிறைய நீராகங்களைச் சேர்த்துக்கொள்வது. உங்கள் உடம்பிற்கு நீங்களே வேலை செய்து கொள்வது. பசி எடுத்தால் கிச்சன் சென்று சாப்பாடு எடுத்துப் போட்டு சாப்பிடுவது. உங்கள் துணிகளை நீங்களே துவைத்துப் போடுவது. காலை மாலை அரை மணி நேரத்திற்காவது உடற்பயிற்சி செய்வது. சைக்கிளிங் போகலாம். ஜாக்கிங் செய்யலாம். மேலும் ஏதாவது ஜிம் சென்று அங்கு பயிற்சியாளரின் துணையுடன் நல்ல முறையில் உடற்பயிற்சி செய்வது பலன் அளிக்கும்.

வந்தால் என்ன செய்வது?

வந்தபிறகு வலி பொறுப்பது கஷ்டம்தான். ஏனென்றால் முதுகு என்பது உடல் முழுவதுமாக தாங்க கூடிய ஒரு உறுப்பு. தண்டுவடத்தில் அதிக அழுத்தம் உண்டாகி, அதனால் வலி ஏற்பட்டால் தாங்க முடியாத அளவிற்கு இருக்கும். அது வந்தவர்களுக்குத்தான் அதன் பாதிக்கு என்னவென்று தெரியும். முதுகுவலி என்று தெரிந்த பின்னர், உடனடியாக நல்ல மருத்துவரைச் சென்று சந்தித்து, உங்கள் பிரச்னை குறித்து மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. எதனால் அது வந்தது என்று மருத்துவர் ஆய்ந்தறிந்து அதன் பிறகு அதற்கான மருத்துவமுறை, உடற்பயிற்சிகளை செய்யுமாறு அறிவுறுத்துவார். 


நீங்களாகவே வைத்தியம் செய்து இருக்கும் பிரச்னையை இரண்டு மடங்காக்கிகொள்ள கூடாது. நல்லதொரு யோகா மாஸ்டரிம் சென்று, உங்கள் உடல் பிரச்னைகளைக் கூறி, யோக கலையை முறையாக கற்றுக்கொண்டு, அதை தினந்தோறும் செயல்படுத்தலாம். அவ்வாறு செயல்படுத்திடும்பொழுது உடல் புத்துணர்வு பெற்று, தேக ஆரோக்கியம் கூடும். 

கீழே படுத்து உடலை சம்மான நிலையில் வைத்து தூங்கவதன் மூலமாக முதுகுவலி வராமல் தடுத்திட முடியும். தூங்கும்போது சரியான நிலையில் உடலை வைத்து தூங்கினால் இடுப்பு வலி, உடல் வலி, முதுகுவலி வராது. எப்படி தூங்க வேண்டும் என்பது குறித்து மிக விரைவில் பதிவிட விருக்கிறோம். அதிக டென்சனால் கூட முதுகு தண்டு விறைத்துப் போய் வலி எடுத்துவிடும். 

சிசேரியன் செய்யப்பட்ட பெண்களுக்கு முதுகு வலி வருவது இயல்பானது. காரணம் அவர்களுக்கு முதுகில் போடப்படும் மயக்க ஊசி மற்றும் ஊசி குத்தப்பட்ட முதுகு தண்டில் ஏற்பட்ட காயம் முதுகு வலி ஏற்பட காரணமாக அமைக்கிறது. குறிப்பிட்ட வயதிற்கு பிறகு நன்றாக நேராக நிமிர்ந்து நடக்கும் பெண்கள் இப்பிரச்னையால் சிறிது முதுகு இழுத்துப் பிடித்தது போல குனிந்து நடப்பதை கண்கூடாக பார்க்க முடியும். அதுவும் அதிக எடையுடன் கூடிய பெண்களுக்கு முதுகு வலி என்பது கதவை தட்டிக்கொண்டு வந்துவிடும்.

அது போன்றவர்கள் மருத்துவர் ஆலோசனைப்பெற்று, அவர் தரும் வழிமுறைகளைப் பின்பற்றி உடலை முதுகுவலியிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.




Post a Comment

0 Comments