ஒற்றைத் தலைவலி ஒரே தீர்வு one sided head ache remedy

சில விளம்பரங்களில் ஒற்றைத் தலைவலி ஒரே தீர்வு என விளம்பரம் செய்கிறன்றனர். ஆனால் அது உண்மையா என்றால் ஆராய்ச்சிக்குரியதே. காரணம் ஒற்றைத் தலைவலி ஏற்பட ஆயரம் காணங்கள் இருக்கின்றன. ஒன்னுமே செய்யாமல் வீட்டில் இருப்பவர்களுக்கு ஒற்றைத்தலைவலி வந்து இஇ இடி என இடித்துக் கொண்டிருக்கும். பிறகு ஒரே தீர்வு என்று சொன்னால் நம்பவா முடிகிறது. பொதுவாக தலைவலிக்கு தைலத்தை பூசி அதன் வலியின் வீரிய்யத்தை குறைக்க முயற்சிப்பர்.சாதாரண தலைவலி என்றால் உடனடியாக அந்த மருந்திற்கு சிறிது பலன் கிடைக்கும். ஆனால் ஒற்றைத் தலைவலி மட்டும் வந்துவிட்டால், எந்த மருந்து போட்டாலும் சரியாகாது.

குறிப்பிட்ட நேரத்தில் வரும் தலைவலி: 


காலையில் எழுந்தவுடன் இலேசாக ஆரம்பிகும் ஒற்றைத்தலைவலி, சூரியன் உதிக்க உதிக்க பயங்கரமான விண் விண் என்று தெறிக்கும். ஒரு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் துடி துடிக்க வைத்துவிடும். அந்தளவிற்கு கொடூரமானதாக இருக்கும் அந்த தலைவலி. ஒரு பக்க பொட்டில் நரம்பு பாதையில் தோன்றும் வலியானது மரண வேதனையை தரக்கூடியது. சூரியன் கிளம்ப கிளம்ப வலியின் வீரியம் கட்டுக்கு அடங்காமல் தலைதூக்கி  மனிதனை பாடாய் படுத்தி எடுத்து விடும்.

ஒற்றைத் தலைவலிக்குக் காரணங்கள் !

ஒற்றை தலைவலி வர பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

1. உடலில் போதுமான சத்துக்கள் இல்லாமல் இருப்பது.
2. அதிக நேரம் கண்விழித்து இரவில் தூங்காமல் இருப்பது
3. டி.வி., மொபைல் போன், மற்றும் கம்ப்யூட்டரை அதிக நேரம் பார்ப்பது
4. தூசி, துகள் அதிகம் இருக்கும் பஞ்சாலை, நெசவாலைகளின் பணி புரிவது
5. அதுபோன்ற இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் குடியிருப்பது.
6. உடலில் வேறு ஏதேனும் நோய்கள் இருப்பது
7. அதிக டென்சன், வேலைபளு
8. முதுகு தண்டவட பாதிப்பு
9. கண்கள் பாதிப்பு ஏற்படுவதால் உருவாகும் தலைவலி
10. போதிய உடல் உழைப்பு இல்லாமை
11. போதுமான உடற்பயிற்சி இல்லாமல், வீட்டிலேயே சோம்பேறியாக இருந்து, டிவி பார்த்து, நொற்று தின்றி உடலில் அதிக கொழுப்பை சேர்த்துக்கொள்வது.
12. மனநிலை பாதிப்பு


இறுதியில் குறிப்பிட்ட மனநிலை பாதிப்பால் தலைவலியுடன் கூடிய வியாதிகள் வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. கற்பனையாக நினைத்துக்கொண்டு இல்லாத வியாதியை வரவழைத்துக்கொள்ள மனதிற்கு ஆற்றல் உண்டு. கொடுமையான வியாதியை வைத்துக்கொண்டு, அதன் பாதிப்பு துளி கூட இல்லாமல் மன அமைதியின் மூலம் தீர்வு காணுவதிலும் மனதிற்கு பெரும்பங்கு உண்டு.

ஒற்றைத் தலைவலிக்கு இயற்கை மருத்துவம்.  (வீட்டு வைத்தியம்) 


இயற்கையில் அதுவும் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே ஒற்றைத் தலைவலியை தவிர்த்து விடலாம். சமையறையில் உள்ள பொருட்களே இது உறுதுணையாக இருந்து உதவுகின்றன. 

ஒற்றை தலைவலி போக்கும் புதினா டீ 


நம்பாமல் இருக்க முடியாது. அன்றாடம் குடிக்கும் டீ, காபிக்கு பதிலாக புதினா இலை பயன்படுத்தி டீ போட்டு குடித்து வந்தால் ஒற்றைத்தலைவலி வாரது. ஒற்றை தலைவலி பிரச்னை இருப்பினும், விரைவில் அது மறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பலாம்.

one sided head ache remedy


ஒற்றை தலைவலி நீங்க சிவப்பு மிளகாய் 


இது என்னடா அதிஷ்யமாய் இருக்கு. சிவப்பு மிளக்காய் காரத்திற்கு மட்டும்தானே பயன்படுத்துகிறோம். அது எப்படி தலைவலியை? என்று நீங்க சந்தேக கண்ணோட்டத்துடன் பார்ப்பது புரிகிறது. "நீங்க நம்பலன்னாலும் அது தான் நெசம்" என்பது போல, அதில் உள்ள கேப்சைசின் என்ற பொருள்  நம் உடலில் உள்ள நியூரோடிரான்ஸ்மிட்டர் மூலமாக தலைவலி வராமல் இருப்பதற்கான சிக்னல்களை அனுப்புகிறது.

இருட்டில் விரட்டலாம் ஒற்றை தலைவலி யை


சிலருக்கு போட்டோ போபியா போன்ற ஒளிச்சிதறல்கள் கண்ணில் பார்ப்பதால் ஒற்றைத்தலைவலி ஏற்படும். அதிக வெளிச்சம் கண்களை கூச செய்வதால் தலைவலி உருவாகும். அதுபோன்றவர்கள் சிறிது நேரம் இருட்டு அறையில் உட்கார்ந்திருந்தால் சரியாகி விடும்.

அடிக்கடி தலைவலி வந்து உங்கள் உயிரை எடுக்கிறதென்றால், நீங்கள் வைட்டமின் பி2 வை எடுதுக்கொள்ள வேண்டும். விட்டமின் B2 இருக்கும் உணவுப் பொருட்களை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு எடுத்துக்கொண்டால் இதிலிருந்து விடுதலை பெறலாம். 


தூக்கம் கெட்டால் வியாதி வரும்



எந்த நோய்க்கும் மூலாதாரம் அதிக நேரம் கண்விழித்து வேலை பார்ப்பதுதான். போதுமானதூக்கமின்மையால் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் உடற் செல்கள் சோர்ந்து அன்றாட புதுப் புதுப்பித்தல் ப வேலைகளைச் செய்யாது. அதனால் உடல் முழுவதும் தேவையான ஆக்சிஜன் இரத்ததிற்கு செல்லாமல், செலுத்தப்படாமல் இருக்கும். இதனாலேயே உடல்வலி, பல்வலி, தலைவலி என எந்த ஒரு உடலுறுப்பில் அதிக தேக்கம் இருக்கிறதோ அந்த உறுப்பில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு அங்கு வலி உண்டாகும்.  நன்றாக தூங்கி எழுந்தால் ஒற்றைத் தலைவலி மட்டும் அல்ல இரட்டை தலைவலி கூட வராது. 

ஒற்றைத் தலைவலியை போக்க பட்டபர் மூலிகை

இந்த மூலிகையை காலம் காலமாக நம் முன்னோர் பயன்படுத்தி வருகின்றனர். பட்டர்பர் மூலிகை அதி சிறந்த ஒற்றைத்தலைவலி நிவாரணம் கொடுக்க கூடிய மூலிதை இலை ஆகும். 

நீரே அனைதிற்கும் ஆதாரம். 


உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாமல் இருந்தால் தலைவலி ஏற்படும். தினமும் குறைந்த பட்சம் ஒரு சராசரி மனிதன் 5 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். அது முழுமையான நீராகவோ, அல்லது நீராகார உணவு பொருட்களாகவோ இருக்கலாம். உடலில் போதுமான நீர்ச்சத்து இருந்தால் நிச்சயமாக ஒற்றைத் தலவலி வராது.


ஒற்றை தலைவலி போக்கும் உடற்பயிற்சி


போதுமான உடற் பயிற்சி செய்தாலே ஒற்றை தலைவலியின் வீரியத்தை குறைக்கலாம். உடற்பயிற்சியின்போது நம் உடல் எண்டோர்ப்சின் உருவாக்குவதால் அது ஒரு சிறந்த இயற்கையான வலி நிவாரணியாக செயல்பட்டு தலைவலியின் வீரியத்தைக் குறைக்கிறது.

Post a Comment

0 Comments