முதுகு வலி தீர்க்கும் முத்திரைகள் !

ஐயோ சாமி... முதுகெல்லாம் வலிக்குதே வந்து தாத்தா முதுகு மேல நின்னு ஏறி குதிடா என்று முதுகுவலியால் அவதிப்பட்ட என்னுடைய தாத்தா அலற கேட்டிருக்கிறேன். அந்தளவிற்கு முதுகுவலி கொடுமை இருக்கும். முதுகு வலி வந்தால் சமதளத்தில் முதலில் பாய் விரித்து படுக்க வேண்டும். நேராக கால்களை நீட்டி மல்லாக்கப்படுப்பதன் மூலம் முதுகு வலியை ஓரளவிற்கு குறைக்க முடியும்.

முதுகு வலி வருவதற்கு பல முக்கிய காரணங்கள் இருப்பினும், அதிக எடை (பளு) தூக்குதல் முழு முதற் காரணம். அதற்கடுத்து முதுகிற்கு அதிக அழுத்தம் தரும் வேலைகளைச் செய்வது காரணமாக இருக்கும்.

கம்ப்யூட்டர்/கணினி போன்றவற்றில் அமர்ந்து 24 மணி நேரமும் பணி செய்வோர்களுக்கு இந்த பிரச்னை வர வாய்ப்பு உண்டு. குறிப்பாக கால் சென்டர்களில் பணிபுரிவர்களுக்கு ஒரு சில வருடங்களில் தொடர் முதுகுவலி வந்து தொந்தரவு கொடுக்கும். டைலர், டிரைவர் வேலை பார்ப்பவர்களுக்கு மூலம் உட்பட முதுகுதண்டுவட வலி, இடுப்பு வலி, தலைவலி மற்றும் குதிகால் வலி போன்றவைகள் வந்து தூங்க கூட விடாது.
muthuvali neenga muthirai


அந்தக் கடுமையான வலிகளைத் தாங்கிக் கொண்டும் கூட வேலை செய்து பிழைப்பவர்கள் நம் தமிழ்நாட்டில் ஏராளம். அதன் பிறகு அளவுக்கு அதிகமான வலி வரும்போது மட்டும் மாத்திரை மருந்துகளை டாக்டரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்வர். இதனால் கல்லீரல், கணையம் கெட்டுப் போய் குட்டிச் சுவராகி போய்விடும்.

அதன்பிறகு அதற்கும் வைத்தியம் பார்க்க வேண்டி வரும். முதலில் ஏற்படும் சின்ன சின்ன வலிகள் என்றாலும் கூட அவற்றை கண்டிப்பாக கவனித்து சரியான நேரத்தில் வைத்தியம் செய்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் அது மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தி, வீரியமிக்க நோயாகி, அறுவைசிகிச்சை வரை கொண்டு வந்து விட்டுவிடும்.

முதுகுவலி குணமாக அனுசாசன முத்திரை 


முதுகு வலி குணமாக முத்திரைகள் சில உண்டு. அவற்றில் அனுசாசன முத்திரை மிக அம்சமான முறையில் முதுகுவலியை நீக்கி, முற்றிலும் குணம்பெற உதவுகிறது. அனுசாசன முத்திரை எப்படி செய்வதுஎன்று இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

அனுசாசன முத்திரை செய்யும் முறை 

அனுசாசன முத்திரை

செய்முறை:


  • தரை விரிப்பில் கிழக்கு நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
  • முதுகெலும்பு நேராக செங்குத்தாக இருக்க வேண்டும்.
  • கண்களை மூடி மெதுவாக  அதே சமயம் ஆழமாக இரு நாசி துவாரங்களின் வழியாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியே விடவும். வாய் கட்டாயம் மூடி இருக்க வேண்டும். 
  • இதை தொடர்ந்து ஐந்து முறைகள் இவ்வாறு செய்யவும்.
  • இப்போது ஆள்காட்டி விரலை வளைக்காமல் நேராக மேல் நோக்கி நீட்டவும். பிறகு நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரல் ஆகியவற்றை பெருவிரலுடன் இணைத்து வைக்கவும். அவ்வளவுதான். மிக எளிதான முத்திரை இது. 


இரு கைகளிலும் மேற்சொன்ன முறையில் ஐந்துமுறை செய்யவும்.

அனுசாசன முத்திரையின் பலன்கள்:

இந்த முத்திரையை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து செய்து வந்தால் உடல் சீராக இயங்கும். உடலுக்குத் தேவையான பஞ்ச பூதங்களின் சக்தி கிடைக்கும்.
ஐம்புலன்களும் அடங்கி அமைதியான மனநிலை கிட்டும்.
மனம் ஒடுங்கி, மன அமைதி கிடைக்கும்.
கழுத்து வலி கட்டாயம் நீங்கும்.
தியானம் கைகூடும்.
கழுத்து முதுகு வலி, நடு முதுகு வலி, இடுப்பு வலி, கால்வலி, அடிமுதுகு வலி நீங்கும்.

டலின் எந்தப் பகுதியிலாவது தீராத வலி இருந்தால் இந்த முத்திரையைச் செய்வதன் மூலம் வலி குறைவதை உணரலாம். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.


உடல் வலியை தீர்க்கும் சமான முத்திரை

நம் உடலில் ஐம்பூதங்களும் சமநிலையில் இருக்க வேண்டும் என்கிறார்கள். இதற்கான எளிய வழி சமான முத்திரை. ஐம்பூதங்களும் சமநிலை அடைவதால் உடலுக்கு அபரிதமான ஆற்றல் கிடைக்கிறது.  


செய்முறை  :


 

விரிப்பில் அமர்ந்து கொண்டு அல்லது சேரில் அமர்ந்து கொண்டு ஐந்து விரல்களையும் குவித்து, கட்டை விரல் நுனியை மற்ற நான்கு விரல்களின் நுனிகளும் தொட்டுக்கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும்.


கட்டளைகள்: சப்பளம் இட்டு அமர்ந்த நிலையில் செய்யலாம். முதுகுத்தண்டு நிமிர்ந்து நாற்காலியில் அமர்ந்து பாதங்களைத் தரையில் பதித்தபடி செய்யவேண்டும். நின்ற நிலையில் செய்யக் கூடாது. முத்திரை செய்யும்போது உள்ளங்கையும் விரல்களும் மேல்நோக்கி இருக்கவேண்டும்.  ஐந்து முதல் 20 நிமிடங்கள் வரை செய்யவேண்டும்.


பலன்கள்: உடல் மற்றும் மனதின் சக்திநிலை அதிகரிக்கிறது. அனைத்து உறுப்புகளுக்கும் பலம் கிடைக்கும். குறிப்பாக மூளை சுறுசுறுப்படையும். பல நாட்களாகப் படுத்தபடுக்கையாக இருப்பவர்களும் இந்த முத்திரையை 40 நிமிடங்கள் செய்துவர தெம்பு கிடைக்கும். உடலின் எந்தப் பகுதியிலாவது தீராத வலி இருந்தால் இந்த முத்திரையைச் செய்வதன் மூலம் வலி குறைவதை உணரலாம்.


தினந்தோறும் குறைந்தது 10 நிமிடங்களாவது செய்துவர நல்ல மாற்றத்தை உணர முடியும். கைவிரல்கள், வயிறு, தோள்பட்டை, முழங்கை, முன்கை, உள்ளங்கால், தொடை ஆகிய பகுதிகளில் ஏற்படும் வலிகள் சரியாகும். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் அதிகாலையில் 20 நிமிடங்கள் செய்யலாம். மனதில் உற்சாகம் பிறந்து சுறுசுறுப்பாகத் தயாராக முடுயும். தன்னம்பிக்கை, மனஉறுதி ஆகிய நல்லுணர்வுகள் உருவாகும். தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் செய்துவந்தால் ஆண்களுக்கு விந்தணு வீரியத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்கும்.


வேலைச் சுமை காரணமாக ஏற்படும் அலுப்பு, முதுகு வலி, கழுத்து வலி போன்ற உடல் வலிகள் சரியாகும். எந்த முத்திரை நமக்கு சரி எனத் தெரியாதவர்கள், ஒரே நாளில் இரண்டு, மூன்று முத்திரைகள் செய்ய முடியாதவர்கள் சமான முத்திரையை  மட்டும் செய்தாலே போதும். நல்ல தீர்வு கிடைக்கும்.


#முதுகுவலி #முத்திரை #தியானம் #யோகம் #மந்திரம் 

Post a Comment

0 Comments