இடுப்பு வலி நீங்க முத்திரை ! (இயற்கையில் வலி போக்கும் நீக்கும் முறைகள்)

அடுப்பு மீது சில நிமிடங்கள் உட்கார சொன்னால் கூட உட்கார்ந்துவிடுவார்கள். ஆனால் இந்த இடுப்பு வலி மட்டும் வரக்கூடாது என்பார்கள். அந்தளவிற்கு அதன் வலியும் வேதனையும் மனிதனை போட்டு வாட்டும். வந்தவர்களுக்குத்தான் அதன் வேதனை புரியும். கர்ண கடூரமாக இடுப்பு கடுகடுவென வலிக்கும்போது அப்படியே எங்காயாவது போய் இந்த உலகத்தை விட்டே தொலைந்து விடலாம் என்று நினைக்கத் தோன்றும்.

இடுப்பு வலிக்கு இயற்கையில் மருத்துவம் உண்டு. கூடவே சரியான முறையில் உடல் எடை பராமரிப்பு மற்றும் முறையான வகையில் உட்கார்ந்து வேலை செய்தல் போன்ற செய்கைகளால் இடுப்பு வலி வராமல் தடுக்க முடியும்.

இயற்கையில் இடுப்பு அதிக எடை தாங்க கூடியதாக இருப்பினும், அதன் தாங்கு திறனுக்கு அதிகமான எடை அழுத்திடும்பொழுது Pelvics என்ற இடுப்பு எழும்பு ஒன்றுடன் ஒன்று உராய்ந்து அதிகமான வலியை கொடுக்கிறது. இதனால் மனிதர்கள் இடுப்பு வலிக்கு பயந்து மருத்துவர்களை நாடுகிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு அதிக உடல் எடையே இடுப்பு வலிக்கு காரணமாக அமைகிறது. கடினமான உடலை உழைப்பு உள்ளவர்கள் போதிய ஓய்வு எடுக்காவிடினும் இடுப்பு வலி வந்து பாடாய் படுத்திவிடும்.

ஜிம் சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள செல்வோர், ஆர்வ மிகுதியால் வெகு விரைவில் கட்டமைப்பைப் பெற வேண்டும் என்ற நோக்கோடு, அளவுக்கதிகமான எடை தூக்குதல், உடற்பயிற்சி செய்தலால் இடுப்பு வலி வருவதற்கான வாய்ப்புகள் 90% சதவிகிதம் ஏற்படுகிறது.

இடுப்பு வலி வந்து வேதனையுறும்பொழுது பிள்ளைகள் அல்லது மனைவிமார்களை ஆண்கள் முதுகின்மேல் ஏறி நின்று மசாஜ் செய்வது போல "மிதிக்க" கூறுவார்கள். அவ்வாறு இடுப்பு மிதிபடும்பொழுது, அங்கே தேங்கி நின்ற இரத்தமானது பரவலாக சென்றுவிடுவதால் அப்போதைக்கு தற்காலிக தீர்வாக இடுப்பு வலி சற்று குறைந்திருப்பது போல இருக்கும். ஏறி மிதிக்கும்பொழுது அந்த இடமானது சற்று இதமானதாக இருக்கும்.

iduppu vali neenga yoga muthirai


ஆனால் உண்மையில் அப்படிச் செய்யக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அவ்வாறு செய்திடும்பொழுது, இடுப்பு எலும்பில் ஏதேனும் பிரச்சினை இருந்து கவனிக்காமல் விட்டுவிட வாய்ப்பு உண்டு. மேலும் நரம்புகளை தசைகள் அழுத்திக் கொண்டு இருக்கும் வாய்ப்பும் உண்டு. இந்த இரண்டு காரணங்களால் இடுப்பெலும்பில் வலி காணும் என்ற உண்மை மருத்துவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவேதான் எந்த ஒரு நோய்க்கும் மருத்துவரின் ஆலோசனையின்றி, இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவே  மருத்துவம் செய்யக்கூடாது என அறிவுறுத்துகிறார்கள்.


இடுப்பு வலி நீங்க இயற்கை மருத்துவம்:  (இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியத்தைப் பற்றி அறிந்துகொள்ள இந்த இடுகையை வாசிக்கவும்)


இடுப்பு வலி நீங்க இயற்கையில் ஒரு செய்முறையை பெரியவர்கள் கூறுவார்கள். அந்தக் காலத்தில் படி அல்லது பக்கா என்று சொல்லப்படுகிற பொருட்களை அளந்து பயன்படுத்தும் இரும்பு உருளை போன்ற கொள்கலனை முதுகின் அடியில் வைத்து உருட்டினால் முதுகுவலி, இடுப்பு வலி வந்த இடம் தெரியாமல் பறந்து போய்விடும் என்று கூறுவார்கள். எனக்குத் தெரிய என்னுடைய பாட்டி, பாட்டன்மார்கள் அவ்வாறு செய்திருகின்றனர். அவ்வாறு செய்திடும்பொழுது இடுப்பு அல்லது முதுகில் ஏதேனும் தசைப்பிடிப்பு அல்லது இரத்தக்கட்டு ஏற்பட்டு இருந்தால் அது சீராகி, அங்கிருக்கும் வலியை போக்கிவிடும். இது ஒரு அருமையான வைத்தியம் என்று தற்கால சுயசார்ப்பு வைத்திய குறிப்புகளை வழங்கும் ஹீலர் பாஸ்கர் கூட ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.

இயற்கையாக கிடைக்கும் கொள்ளு (குதிரைக்கு தீவனமாக போடுவது) வை எடுத்து சூப் வைத்துக் குடிக்க சளி மற்றும் இடுப்பு வலி பஞ்சாய் பறந்து போய்விடும். கொள்ளுவில் அவ்வளவு மருத்துவ மகிமை உள்ளது. குதிரை போல நல்ல திடகாத்திரமான உடலைப் பெறுவதற்கும் கொள்ளு பயன்படுகிறது. மேலும், மேலும் உடல் எடையை உயரத்திற்கு தகுந்தவாறு பராமரிப்பதன் மூலம் உடல்வலி, மூட்டுவலி, முதுகுவலி, இடுப்பு வலி வராமல் தடுத்திட முடியும்.

அதிக காரம், எண்ணெய், புளிப்பு உணவு வகைகளை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

இளம்பெண்களுக்கு இடுப்பு வலி வர காரணங்கள்: 


இளம் பூவையர்கள் அடிக்கடி இடுப்பு வலி வருகிறது என மருத்துவர்களை நாடுகிறார்கள். அதுபோன்றவர்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியாக இருக்க கூடும். அல்லது அவர்கள் நவநாகரீக பெண்மணிகளாக இருந்து, அவர்கள் அணையும் "ஹைஹீல்ஸ்" செருப்பால் கூட வர வாய்ப்பு இருக்கிறது. உயந்த குதிகால் உடைய செருப்புகளை அணியும்போது, முதுகு தண்டுவடத்தில் ஏற்படும் அதிகம் அழுத்தம் காரணமாக இடுப்பு வலி கட்டாயம் வரும் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. வரும்முன் காப்பதே சிறந்த வலி. இல்லையென்றால் பாடாய் படுத்திவிடும் இடுப்பு வலி.

இடுப்பு வலி நீங்க முத்திரை என்ற தலைப்பில் கட்டுரையை வைத்துவிட்டு, இடுப்பு வலி நீங்க முத்திரை பற்றி ஒரு வார்த்தை கூட இல்லையே என நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆரம்பத்திலேயே முத்திரை குறித்து கூறியிருந்தால் நான்கு வரிகளில் முடிந்திருக்கும். ஆனால் இடுப்பு வலி பற்றி முழுமையாகத் தெரிய வேண்டுமானால் மேற்குறிப்பிட்ட தகவல்களை அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

இடுப்பு வலி நீங்க முத்திரை

இடுப்பு வலி நீங்க முத்திரைகள் சில உண்டு. அவற்றை முறையாக இங்கு குறிப்பிட்டபடி செய்து வந்தால் தொடர்ந்து இரண்டு வார காலங்களுக்குள் நிரந்த குணம் கிடைக்கும். உடனடியாக குணம் பெறவும் இந்த இடுப்பு வலி நீங்க முத்திரைகள் பயன்படும். இடுப்பு எலும்பு தேய்மானம் காரணமாகவும் இடுப்பு வலி வரும்.

முத்திரை செய்யும் முறை

(இடுப்பு/குறுக்கு வலி நீங்க அருமையான வழி)


  • முதுகு, கழுத்து நேராக நேர்க்கோட்டில் இருக்குமாறு தரையில் பாய்விரித்து சம்மணமிட்டு அமரவும். 
  • பிறகு உங்கள் இரு கைகளையும் உங்கள் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவேண்டும். 
  • அடுத்து உங்கள் இரு கைகளில் உள்ள நடு விரல்களை மடக்கி, அதன் மீது உங்கள் கட்டைவிரல்களை மேலே உள்ள படத்தில் காட்டியது போல் வைத்துக்கொள்ளவேண்டும். 
  • இப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு, மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளுக்குள் இழுத்து சுவாசிக்க வேண்டும். 
  • பின்பு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். 
அவ்வளவுதான்.


இதே முறையில் இந்த பயிற்சியை தினமும் காலையிலும், மாலையிலும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

பலன்கள்: இது ஒரு அருமையான பலன் தரும் முத்திரை. நான் பயன்படுத்தி அற்புதமான பலனை கண்டிருக்கிறேன். இம்முத்திரையை தொடர்ந்து செய்வதால் நீண்ட நாட்களாக இருக்கும் இடுப்பு வலி நீங்கி சுகம் கிடைக்கும். உடலிலுள்ள விஷக்கழிவுகள் அனைத்தும் நீங்கி உடலும், மனமும் புத்துணர்வு பெறும். சிலருக்கு நடக்கும் போது ஏற்படும் தடுமாற்றங்கள், தடங்கள்கல் இம்முத்திரை பயிற்சி செய்வதால் நீங்கும். நன்றாக நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். முக்கியமாக மூலாதார சக்கரம் சக்தி பெறும்.

இடுப்பு வலி நீக்கும் நீர் முத்திரை 


நீர் முத்திரை பொதுவாக உடலில் உள்ள நீர் சத்து குறையாமல் இருக்க, உடலில் நீர் சமநிலை ஏற்படுத்திட உதவும் ஒரு முத்திரை ஆகும். இந்த சரியாக செய்து வந்தால் உடலில் நீர் சத்து குறையாமல் பாதுகாத்திட முடியும். சமீபத்தில் பரவிய சிக்குன் குனியா நோயால் வந்த கால் மூட்டு, கை மூட்டு வலி, இடுப்பு வலி போன்றவற்றை நீங்கிட இந்த முத்திரையை தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்து வர வேண்டும். நிச்சயமாக 100% இடுப்பு வலி, மூட்டுகளில் ஏற்படும் வலிகள் மறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பலாம்.


நீர் முத்திரை செய்யும் முறை: 


வலது கையில் செய்யும் முறை: பெருவிரல் நுனியுடன் மோதிர விரல் நுனியை சேர்த்து வைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி செங்குத்தாக இருக்க வேண்டும்.


இடது கையில் செய்யும் முறை: பெருவிரல் நுனியுடன் நடுவிரல் நுனியை சேர்த்துவைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் முறையே படத்தில் உள்ளபடி வளையாமல் செங்குத்தாக நீட்டி இருக்க வேண்டும்.

இடுப்பு வலி போக ஏகபாத பிராணாமாசனம்

வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் இந்த ஆசனைத்தை செய்து இடுப்பு வலி, உடல் வலி வராமல் தடுத்திடலாம். எப்படி ஏகபாத பிராணாமாசனம் செய்வது என்பது குறித்து கீழுள்ள வீடியோவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாங்க.

நன்றி: மாலைமுரசு டிவி.



Post a Comment

0 Comments