சிறுநீரக கல்லை நீக்க அருமையான 7 வழிகள் !

சிறுநீரக கல்லை நீக்கும் வழிமுறைகளைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு, சிறுநீரக கல் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? எப்படி சிறுநீரகத்தில் கல் உருவாகிறது? என்பது குறித்து தெரிந்துகொள்வோம். பெரும்பாலானவர்கள் நினைக்கின்றனர் சிறுநீரக கல் என்பது நம் உணவில் இருக்கும் கல் மண் போன்றவைகள் சென்று ஜீரணமடையாமல் சிறுநீர் குழாயில் சென்று மாட்டிக்கொள்ளும் என்று. உண்மை அப்படி அல்ல. நாம் உண்ணும் உணவில் உள்ள உப்புகள் சிறுநீரகத்தால் பிரிக்க முடியாத நிலையில் சிறு சிறுக சிறு நீரகத்தில் சேர்ந்து, அதை ஒரு கெட்டிப்பட்டு பெரிய பெரிய கற்களைப் போன்று இறுகிவிடும். இதனால் சிறுநீர் பாதையில் அடைப்பட்டு, சிறுநீர் கழிக்கும்போது முழுமையாக சிறுநீர் பிரியாமல் கடு கடுவென வலியை ஏற்படுத்தும். அந்த வலி மரண வலியைவிட கொடியது.

வயது வித்தியாசம் இல்லாமல் நோய்கள் வருவது இந்த 2020 மிக மிக இயல்பானது. காரணம் காலச்சூழல், உண்ணும் உணவு, அவசர வாழ்க்கை. அந்த வகையில் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் வரக்கூடியது சிறுநீரக கல் பிரச்னை. இதற்கு காரணம் உண்ணும் உணவு முறை, செய்யும் வேலை, குடிக்கும் தண்ணீர் தான்.

இந்த நோய் வந்தவர்களுக்குத்தான் அதனால் உருவாகும் கடுமையான வலி உணர்வு தோன்றும். உயிரே போகும் அளவிற்கு பயங்கரமான கடுமையான வலி அதுவாகத்தான் இருக்கும்.

சிறுநீரக வலி இல்லாமல் கட்டுப்படுத்த வழிகள்


சில உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளாமல் இருந்தாலே சிறுநீரக கல் உருவாவதை பெருமளவு தடுத்து விடலாம். தக்காளி, முள்ளங்கி, பசலைக்கீரை, பட்டாணி, நெய், வெண்ணை, முந்திரி போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் சிறுநீரக கற்கள் தோன்றும் வாய்ப்புகள் அதிகம். அதுபோன்ற உணவுகளை அதிகளவு எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் அதிக பட்சம் 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க உதவும்.  உடற்பயிற்சி செய்வதால் இரத்தில் உள்ள கால்சியம் சத்து, எலும்புகளுகு சென்றடையும். பசலைக்கீரை, முள்ளங்கி, வெண்ணை, பூண்டு, கருணைக்கிழங்கு போன்றவற்றை சாப்பிடக்கூடாது.

அரை உப்பு சாப்பாடு உடலுக்கு நல்லது.  சிறுநீரகத்தில் கால்சியம் சேர்வது குறைக்கப்படும். 2 அல்லது 3 கிராம் அளவு மட்டுமே உணவில் உப்பு சேர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, இயற்கையாக கிடைக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிறுநீரக கல் வராமல் தடுக்க உதவும் உணவுகள் 


மக்னீசியம் இருக்கும் உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
வைட்டமின் B6 சீறுநீரகத்திற்கு மிக நல்லது. அது சிறுநீரில் உள்ள கற்களை குறைக்க உதவும். நார்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதால் ஜீரணகோளாறு வராது.

கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு நீர் அருந்தாமல் இருப்பதால் சிறுநீரில் கற்கள் உற்பத்தியாக வாய்ப்பு அதிகரிக்கும். சிறுநீர் மற்றும் இரத்தத்தில் சுண்ணாம்பு சத்து அதிகம் இருந்தால் சிறுநீர் கல் உருவாக வாய்ப்பு ஏற்படும். சிறுநீர் போவது போன்ற உணர்வை கட்டுப்படுத்தி, அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் விட்டுவிட்டால் அதுவே ப பெரிய பிரச்னையை கொண்டு வந்து விட்டுவிடும். இதனாலேயே அதிகமானோருக்கு சிறுநீரக கற்கள் உருவாகின்றன.

வாழைத்தண்டு, தர்பூசனி, ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறு, பூசணிக்காய், அனைத்துவித பழங்கள், திராட்சை, ஸ்டாராபெர்ரி, ராச்ப்பெர்ரி போன்றவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வர சிறுநீரக கற்கள் கரையும். இவை அனைத்திற்கு சிறுநீரக கற்களை கரைக்கும் ஆற்றல் அதிகம் உள்ளன.

siruneeraga kal neeka vaithiyam


செவ்வாய், வெள்ளி நாட்களில் தலைக்கு எண்ணைத் தேய்த்துக் குளிப்பது நல்லது. விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் எடுத்துக்கொண்டு அதனுடன் கடுகு எண்ணைய் சிறிது கலந்து இலேசாக சூடாக்கி, வெதுவெதுப்பு பத்ததில் வயிறு, தலை, முதுகு ஆகிய பகுதிகளில் தேய்த்து ஊறவிட்டு , நல்ல வெதுவதுப்பான நீரில் குளிக்க வேண்டும். தலைக்கு எண்ணெய்த் தேர்த்து குளிப்பதால் உடலில் உள்ள சூடு தலை வழியாக வெளியேறும்.

எண்ணைய் தேயத்துக் குளித்தப் பின்பு, சூடான உணவு சாப்பிட வேண்டும். மிளகு ரசம், கருவேப்பிலை துவையல், தேங்காய் சீரகம் , ம்பூசனிக்காய் கூட்டு, கேரட், மோர் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

குடிப்பதற்கு குளிர் நீர் பயன்படுத்தக்கூடாது. வெது வெதுப்பான நீரை பருகுவது ஜீரணத்திற்கு நல்லது.

சிறுநீரக கல் கரைக்க உதவும் உணவுகள்


தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு குடித்து வர சிறுநீர் கல் பிரச்னை தீரும். நன்கு வேக வைத்த பார்லி தண்ணீரை அதிகம் குடித்து வர அதிக சிறுநீர் பிரியும். சிறுநீர் அதிகம் வெளியேறுவதால் அதிலிருக்கும் உப்பு கற்கள் கரைந்து வெளியேறிவிடும். வாரம் ஒரு முறை பார்லி வேக வைத்த நீர் குடித்து வர சிறுநீரக கல் பிரச்னையே வராது.

வெயில் காலத்தில் இளநீர், மோர் போன்றவற்றை போதுமான அளவு குடித்து வரலாம். அகத்தி கீரையுடன் சீரகம் உப்பு சேர்த்து சமைத்து சாப்பிட நல்ல பலன் தரும்.

முள்ளங்கியை எடுத்து சாறு பிழிந்து, 30 கிராம் அளவிற்கு குடித்து வந்தால் சிறுநீரக பிரச்னை தீரும். சிறுநீரகங்கள் பலப்பட புதினா கீரை அருமையான மருந்து. தினமும் உணவில் புதினா கீரை சேர்த்து வருது நல்ல பலன் அளிக்கும். தேன், துளசி இலைச்சாறு கலந்த கலவையை ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்னையை வெகு விரைவில் தீர்த்து விடலாம்.

அத்திப்பழத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை தொடர்ந்து ஒரு மாதம் அருந்திவர சிறுநீரக கல் பிரச்னை வராது.

மாதுளம் பழத்தை உடைத்து அதன் முத்துக்களை எடுத்து சாறு பிழிந்து அதை கொள்ளு சாறுடன் 1:2 விகித த்தில் கலந்து அருந்திவர சிறுநீரக கல் கரையும்.

பாலுடன் வெள்ளிரி விதையை சேர்த்து மைய அரைது அதை ஒரு சின்ன கோலி குண்டு அளவிற்கு சாப்பிட்டு வர சிறுநீரக கல் கரைந்து இயல்பான நிலைமையை அடையலாம்.

இரண்டு லிட்டர் தண்ணீருடன் எலுமிச்சை சாற்றை கலந்து தினசரி 4 தேக்கரண்டி  சிறிது சிறிதாக குடித்து வர அந்த தொந்தரவு இல்லாமல் போய்விடும்.

10 கிராம் வாங்கி பிரன்ச் பீன்ஸ் அதிலுள்ள விதை நீக்கி, அதை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அந்த கலவையை  மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்துவிட்டு 10 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு பீன்ஸ் வேகவைத்த  2 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். ஒரே முறையில் குடிக்க முடியவில்லை என்றால் சிறிது நேரம் இடைவெளி விட்டு குடித்து விட வேண்டும்.

வெறும் வயிற்றிலே அத்திப் பழங்களை நிரம்ப உண்டு வந்தால், மூத்திரப்பையிலுள்ள கற்கள் அகலும்.அன்னாசிப் பழத்தை வெறும் வயிற்றிலே அடிக்கடி சாப்பிட்டு வந்தால், கற்கள் கரைந்துவிடும்.

Post a Comment

0 Comments