முதுகுவலி தீர ஆலோசனைகள்

முதுகுவலி தீர பலர் பல ஆசோசனைகள் கூறுவர். ஆனால் அவைகள் அனைத்துமே ஒருவருக்கு பொருந்தும் என்றால் கண்டிப்பாக பொருந்தாது. காரணம் உடல் அமைப்பு, செய்யும் வேலை, உண்ணும் உணவு, இருக்கும் சூழ்நிலை, பரம்பரை போன்ற பல காரணிகள் உடல் வாகை தீர்மானிக்கிறது. எனவேதான் முதுகு வலியோ, தலைவலியோ மனிதர்களுக்கு மனிதர் மாறுபடும். வைத்திய முறையும், வலி தீர்க்கும் முறையும் உடலமைப்புக்கு ஏற்ப சற்றே மாறுபடும்.

பொதுவாக முதுகு வலி தீர, ஆங்கில மருத்துவத்தில் வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் பூசுவதற்கு களிம்புகள் கொடுப்பர். அது நிந்தரமான தீர்வாகாது. உடனடி வலி தீர்க்க உதவும். உண்மையான காரணம் என்ன என்பதை நோயாளிகளிடம் பேசுவதன் மூலம் கேட்டறிந்து, அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்க வேண்டும்.


முதுவலி தீர ஆலோசனைகள்:


1. நேராக நிமிர்ந்து உட்காருங்கள்
2. கூன் போட்டு நடக்காதீர்கள்
3. முதுக வளைந்து செய்யும் வேலைகளுக்கு இடையே சற்று ஓய்வு கொடுங்கள்
4. நேரம் கிடைக்கும்போது தரையில் பாய்விரித்து மல்லாந்து படுத்து ஓய்வெடுங்கள்.
5. முதுகு தண்டுக்கு இதமளிக்க கூடிய பஞ்சு தலையணைகளை தாங்கலுக்கு கொடுத்து சேர், நாற்காலி, சோபா போன்ற அமரும் இருக்கைகளில் உட்காருங்கள்.
6. யோகா செய்யுங்கள். முறையான கற்றலுக்குப் பிறகு செய்யப்படும் யோக பயற்சியால் முதுகுவலி, உடம்புவலி பறந்து போய்விடும்.
7. பஞ்சு மெத்தை, தலையை போன்றவற்றை தவிருங்கள்.
8. முதுகு எலும்பை நீவி விடுங்கள்
9. நக்கும்போது கழுத்தை நேராக வைத்து முதுக நேர்கோட்டில் இருக்கும்படி நடந்து செல்லுங்கள்.
10. நீண்ட தூர இருசக்கர வாகன பயணங்களை முடிந்தளவுக்கு தவிருங்கள். பயணத்திற்கு பிறகு குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது ஓய்வெடுக்கும் நிலையை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
11. தொடர்ந்த கடின வேலை, மன அழுத்தம், உடல் எடை கூடுதல், மற்றும் விபத்து காரணங்களில்தான் முதுகு வலி ஏற்படுகிறது.
12. வயோதிகம் காரணமாகவும் முதுகு வலி ஏற்படும். சரியான வயதிற்குத தகுந்த உணவுகளை எடுத்துகொண்டு, யோகா,  ஆன்மீக செயல்களில் ஈடுபட குறுக்கு வலி, முதுகுவலி ஆகியவை தீர்ந்து விடும்.
13. நெடுநேரம் நின்று கொண்டு பணி செய்தல், கால்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்தும் வேலை செய்தல் போன்ற செயல்கள் முதுகு தண்டை ஒரு பதம் பார்த்துவிடும்.


முதுகுவலி நீங்க சித்த மருத்துவம்

நம் தமிழ் சித்தர்கள் ஆயிரக்கணக்கான தமிழ் மருத்துவங்களை நமக்காக விட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் வழியில் உணவுமுறை, வாழ்க்கை முறையை பின்பற்றால் நாறாண்டுகளுக்கு குறைவில்லாமல் வாழலாம். 

உடல் எடை, கால் முழுவதும் சீராக பரவும் வகையில் செருப்பு அணிந்து எந்த ஒரு இடர்பாடு இல்லாமல் கால்களை பெண்டுலம் போல் அசைத்து நடக்க வேண்டும். 

கைப்பையை தொடர்ந்து ஒரு தோள் பட்டையில் மாட்டிக்கொள்ளாமல், அதை எடுத்து  அடுத்த தோள் பட்டைக்கு மாற்றி பயன்படுத்த வேண்டும். இதனால் தோள்பட்டைக்கு ஓய்வு கொடுக்கப்படும். இதனால் முதுகு தண்டு அழுத்த த்தை சீராக வைத்து பராமரிக்க முடியும். 

வீட்டு வேலைகளை இயந்திரங்கள் இல்லாமல் செய்யக் கற்றுக்கொண்டாலே முதுகுவலி பிரச்னை வராமல் தடுத்திடலாம். 
இரண்டு கைகளையும் பயன்படுத்தி
  • பாத்திரங்கள் தூக்குவது
  • வீடு பெருக்குவது, 
  • தரை துடைப்பது 

ஆகியவை இயல்பான முறையில் செய்ய வேண்டும். அந்த வேலைகள் முதலில் கடினமானவையாக தோன்றும். ஆனால் பழகி கொண்டால் முதுகு தண்டு வடம் நல்ல முறையில் இயங்கி வேறு எந்த பிரச்னையும் கொண்டு வராமல் இருக்கும். 

உடலின் இரு பகுதிகளும் உள்ள உறுப்புகளுக்கு சம்மான வேலைகள் கொடுத்திட வேண்டும். 

கர்ப்பிணி பெண்கள் உயற்பயிற்சி செய்வது அவசியம். குழந்தை பிறப்பதற்கு முன்பு மற்றும் பிறப்பதற்கு பின்பு உடற்பயிற்சி செய்து வருவதால் குழந்தை பிறத்தல் இயல்பாக நிகழும். மேலும் குழந்தையின் எடையால் முதுகு தண்டு அதிக பாதிப்படையாமல் இருக்கும். 


முதுகு தண்டு மூட்டு நழுவுவதாலும் முதுகு வலி ஏற்படலாம். ஒரு சில பயற்சிகளின் மூலம் இதற்கு நல்ல தீர்வு காணலாம். 

விரிப்பை விரித்து அதில் முதுகுப்புறம் தரையில் படும்படியாக படுத்துக்கொண்டு, குதிகால்களை மடக்கி, நாற்காலி மேல் வைத்துக்கொள்ள வேண்டும். குதிகால்களுக்கு தலையணை வைத்துக்கொள்ளலாம். 
இப்படி ஓரிரு நாட்களுக்கு செய்து வர முதுகு வலி குறையும். மூட்டு நழுவலால் வந்த வலி குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். 


மேலும் வெது வெதுப்பான சூட்டு ஒத்தடம் முதுகிற்கு இதமாக அரை மணி நேரம் கொடுத்தால் வலி குறைந்து நிம்மதி அடையலாம். 

உடல் எடையை உயரத்திற்கு தகுந்தாற் போல வைத்துக்கொள்ள பழக வேண்டும். அதீதமான எடை காரணமாக முதுகு தண்டு அதிக அழுத்தம் பெற்று வலியை உண்டாக்கும். 

தூங்கும்போது தரையில் படுத்து உறங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். முதுக தண்டு தரையில் படும்படி படுத்து உறங்குதல் அவசியம். மேலும் உயரம் குறைந்த தலையணை, கால்களுக்கு இலேசான உயரத்தில் தலையணை வைத்து உறங்கும் பழக்கமும் கைகொடுக்கும். 


கார் மற்றும் கனரக வாகனங்களை ஓட்டுவோர் குறிப்பிட்ட நேர இடைவெளியில் வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுத்துக்கொள்வது நல்லது. அதுபோல கால்களை நீட்டி, மடக்கி, குனிந்து நிமிர்ந்து  உடலை Stretch செய்வதன் மூலம் உடல் வலியை குறைத்து, தேங்கியிருக்கும் மடிப்புகளில் உள்ள இரத்தம் மற்ற இடங்களுக்குப் பரவ செய்வதன் மூலம் ஒரு வித உடனடி புத்துணர்ச்சியைப் பெறலாம். 


இந்த சிறிய உடற்பயிற்சியை செய்தால் உடல்வலி, முதுகுவலி உடனடியாக தீர்ந்து நன்மை கொடுக்கும். 

  • முதலில் தரையில் மல்லாந்து படுக்கவும். 
  • பிறகு இடது காலை காலை மடக்கி, நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வரவும்.
  • ஐந்து வினாடிகள் அப்படியே இருக்கவும். 
  • அதன்பின்பு பழைய நிலைக்குக் கொண்டு வரவும். 
  • பின்பு வலது காலை மடக்கி இது போல் செய்யவும்.

இந்த முறையை தொடர்ந்து இரு கால்களுக்கும் 10 முறை செய்து வர முகுது வலி உடனடியாக போய், உடலில் ஒரு புத்துணர்வு தோன்றுவதை உணர்வீர்கள். 


முதுகு தண்டு வலி தீர இயற்கை மருத்துவம்



முதுகு தண்டு வலி தீர இந்த வைத்தியத்தைப் பின்பற்றிப் பாருங்கள். உடனடியாக நிவாரணம் பெற்று நல்ல நிலைமைக்கு திரும்புவீர்கள். 

ஆடாதொடா வேர் எடுத்து ( இது மூலிகை கடைகளில் கிடைக்கும்) கஷாயம் வைத்து குடித்தால், காய்ச்சல் மற்றும் உடல்வலி, முதுகு வலி பிரச்னைகள் சரியாகும். 
.
ஆல மர பூ மொட்டுகளை எடுத்து காய வைத்து அதை பொடி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.

இதை கிராம பகுதிகளில் அடிக்கடி செய்வார்கள். கல் உப்பை வறுத்து, அதை ஒரு வெள்ளை துணியில் கட்டி, கை பொறுக்கும் சூடு ஆகும்வரை பொறுத்திருந்து வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி தானாக சரியாகும். 

health tips to reduce backpain


ஒருமுறை முதுகு வலி வந்தவர்களுக்கு மறுமுறை வராது என்று நிச்சயமாக அறுதியிட்டு சொல்ல முடியாது. வயது மூப்பு காரணமாக 70 சதவிகிதம் நபர்களுக்கு முதுகு வலி வருகிறது. மேலும் கடின உழைப்பு உழைக்கும் உழைப்பாளிகளுக்கு இது வருகிறது. பெரும்பாலும் பஞ்சு மெத்தை பயன்படுத்துபவர்களுக்கு இது வெகு விரைவில் வந்து தொந்தரவு கொடுக்கிறது. உண்மையிலேயே முதுகு வலிக்கு உண்மையான காரணம் இது வென்றுசொல்ல முடியாது. காரணம் சில நேரங்களில் எந்த ஒரு காரணமும் இல்லாமல் முதுகு விண் விண் என்று தெரிக்கும். மருத்துவர்களிடம் சென்று காண்பித்தால் அவர்கள் வலி மரத்துப்போகும் மாத்திரைகள் கொடுத்து மூன்று நாட்களுக்கு சாப்பிட சொல்வார். ஆனால் அது முடிந்த பிறகு மீண்டும் முதுகு வலி இலேசாக தலைதூக்கும். முதுகு வலி மட்டுமல்ல.... தலைவலி, காய்ச்சயல், மூட்டு வலி, கண்வலி, தொடை வலி, புன்புற புட்டக வலி, சிறுநீரக வலி, அனைத்துவிதமான உடல் வலிகளும் வந்து தொல்லைப்படுத்தும்.

எதிர்ப்புச் சக்தி குறைதல் மற்றும் உடல் திசுக்களில் செல்களின் வளர்ச்சி குறைந்து வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் தொய்வு காரணமாக இவையாவும் வயதானால் நிச்சயம் நிகழும். தோல் சுருங்கும். என்னதான் மாஸ்சரைசர கிரீம் பயன்படுத்தினாலும் கூட குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு வயதாவதை, வயதாகும் தோற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது.



Post a Comment

0 Comments