இடுப்பு வலி சித்த மருத்துவம்

இடுப்பு போனால் வாழ்க்கையே போச்சு என்று பேச்சு வழக்கு உள்ளது. அது அவ்வளவு முக்கியம். அப்பொழுது ஒரு மனிதன் நேராக நிமிர்ந்து நன்னடை போட முடியும். இல்லையென்றால் குனிந்து கூன் நடை போட்டுத்தான் போக வேண்டும். அப்படிப்பட்ட இடுப்பல் "கடுகடு" வென வலி வந்தால் யாராலும் தாங்க முடியும். இப்பொழுது எல்லாம் யார் யாருக்குத்தான் இடுப்பு வலி வருகிறது என அனுமானிக்கவே முடிவதில்லை. காரணம் அதிகமான துரித உணவுகள் எடுத்துக்கொள்ளுதல், போதிய உடற்பயிற்சி இன்மை மற்றும் இன்னும் சில புற காரணங்களைக் கூறலாம்.

யார் யாருக்கெல்லாம் இடுப்பு வலி வரும்?


இதென்ன கேள்வி என்றால், நிச்சயமாக எல்லோருக்கும் இப்பொழுது இடுப்பு வலி வருகிறது. மூன்று வயது குழந்தைக்கு இடுப்பு வலி வந்து தொந்தரவு செய்கிறது. காரணம் மேற்குறிப்பிட்டதுதான். குறிப்பாக உட்கார்ந்து வேலை செய்யும் அனைவருக்கும் இடுப்பு வலி வருகிறது. கணினி துறையில் பணி செய்பவர்கள், உட்கார்ந்து கொண்டே கடையில் வேலை செய்பவர்கள், அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், டிரைவர்கள் போன்றவர்கள குறிப்பிடலாம்.


வீட்டில் உட்கார்ந்து கொண்டே நொறுக்குத் தீனிகளை தின்று பொழுதை கழிப்பவர்களுக்கு அதிகளவு இடுப்பு வலி வருகிறது என ஒரு ஆய்வுத் தெரிவிக்கிறது. சரி, இந்த கடுமையான இடுப்பு வலிக்கு சித்த வைத்தியத்தில் வைத்தியம் உள்ளதா? என்ன செய்தால் இந்த மோசமான உடல் வலியை போக்க முடியும் என்று தெரிந்துகொள்ளலாம்.


இடுப்பு வலிக்கு சித்த வைத்தியம்



இடுப்பு வலியை குணமாக்கும் கொள்ளு: 

கொள்ளுப் பருப்பு இடுப்பு வலியை குணமாக்குவதில் அதிக மருத்துவ குணம் கொண்டுள்ளது. கொள்ளை சாப்பிடுவதால் குதிரை போன்ற தேக உறுதி ஏற்படும். அனைத்து வயதினருக்கும் ஏற்றது.  உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருக்கும். இடுப்பு வலி உள்ளவர்கள் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டு வர,  இடுப்பு வலி நாளடைவில் நீங்கும்.

சுக்கு, மிளகு, கிராம்பு 

இந்த மூன்றும் சித்த வைத்தியத்தில் அரும் பங்கு ஆற்றும் வைத்தியப் பொருட்கள் ஆகும். இயற்கையாக கிடைக்கும் இம் மூன்றும் இடுப்பு வலி குணமாக பெரிதும் பயன்படுகிறது.

ஒரு கிராம் சுக்கு, ஐந்து மிளகு, ஐந்து கிராம்பு ஆகிய மூன்றையும் அம்மியில் நசுக்கி தூள் ஆக்கி, அதை டீத் தூள் போல பயன்படுத்தி தேனீர் செய்து.  தினம் இரண்டு வேளை பருகி வர இடுப்பு வலி நீங்கும்.

இடுப்பு வலிக்கு வெற்றிலை: 

வெற்றிலையை  நன்கு நசுக்கி, கசக்கிப் பிழிந்து எடுத்து, அதன் சாற்றினை  எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து இடுப்பு வலி இருக்கும் இடத்தில் இதமாக தடவி வந்தால் இடுப்பு வலி குறையும்.

எள் எண்ணெய்: 

எள் எண்ணெய் என்று கூறப்படும் நல்லெண்ணையுடன் நான்கு பூண்டு பற்கள் மற்றும் தளுதாளி இலை சேர்த்து நன்கு வதக்கி,  துவையல் செய்து சாப்பிட்டு வர இடுப்பு வலி நீங்கும். வாரம் ஒரு முறை இப்படி சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

iduppu vali siddha maruthuvam


மேலே உள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி இடுப்பு வலியில் இருந்து விடுபடலாம். அது மட்டுமில்லாமல் நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்பவர்கள் சோம்பேறித்தனப் படாமல் உங்கள் உடல் நலன் கருதி அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாவது ஒரு சில நிமிடங்கள் அங்கும் இங்கும் நடந்துவிட்டு, பிறகு அமர்ந்து பணியை தொடரலாம். அவ்வாறு செய்வதன் மூலம் 40 வயதிற்கு பிறகு வரும் இடுப்புவலி, கால்வலி, முதுகுவலி போன்றவற்றை தடுத்து, நிமிர் நடை நடந்து ஒரு ஹீரோ போல ஜொலிக்கலாம்.  உங்கள் உடல்நலம் உங்கள் கைகளில்.

இடுப்பு வலிக்கு இயற்கை வைத்தியம்:

அரை தம்ளர் தண்ணீரில் ஒரு கரண்டி அளவு ஓமம் சேர்த்து அதில் 100 மிலி தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ள வேண்டும்.பிறகு அவற்றுடன் கற்பூரப் பொடியை சேர்த்து இளஞ்சூடாக இருக்கும் போது தேய்க்க வேண்டும்.

முருங்கைப் பட்டை, சுக்கு இவை இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து மேலே பூச வலி போகும்.

நல்லெண்ணையில் மருதாணி இலையை போட்டு காய்ச்சி பூசவும்

பூண்டை போட்டு காய்ச்சிய வேப்பெண்ணை தடவவும்.

பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறு கலந்து தடவவும்.

விழுதி இலையை எடுத்து சாறு பிழிந்து அதனுடன் நல்லெண்ணையை கலந்து 5 மி.லி வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குறையும்.

பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:


மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும் இடுப்பு வலியும் ஏற்படுவது இயற்கை. இந்த வலிகளைப் போக்க வெந்தயத்துடன் நூறு கிராம் அளவுக்கு வெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை கலந்து சாப்பிட வயிற்றுவலி, இடுப்பு வலி நீங்கும்.

வெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட இடுப்புவலி பெருமளவு குறைந்துவிடும்.

இளம்பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:


நீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன் மூலம் கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

பெண்கள் ஹைஹீல்ஸ் அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி ஏற்படும். இதுபோன்ற செருப்புகளை அணியாமல் தவிர்ப்பது நல்லது.

சமையலறையில் இருக்கும் மிளகை எடுத்து பொன் வறுவலாக வறுத்து அதில் எள் எண்ணையை கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும்.

மூலிகை தோட்டத்தில் கிடைக்கும் தளுதாளி இலையுடன் சிறிதளவு பூண்டு, எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) சேர்த்து துவையல் போல செய்து சாப்பிட இடுப்பு வலி உடனடி குணமாகும்.







Post a Comment

0 Comments