தலைவலி கடுமையானதாக இருந்தால், வாழ்க்கையே வெறுத்துப் போய்விடும். சில நேரங்களில் உயிரை மாய்த்துக்கொள்ளலாமா என்று கூட தோன்றும். இதுபோன்ற உடலுக்கு அதிக தொல்லைத்தரக்கூடிய வலியை எப்படி போக்கலாம்? என்ன செய்தால் தலைவலி தீரும் என்று இந்தப் பதவின் வழியாக தெரிந்துகொள்வோம். அதற்கு முன்பு தலைவலி மற்றும் வாந்தி வர காரணம் குறித்து நமது "நலம்டாக்டர்" இணையதளத்தில் ஒரு பதிவொன்றை பதிந்திருக்கிறோம். விருப்பட்டால் அதையும் வாசித்துவிடுங்கள்.
கடுமையான தலைவலி ஏன் ஏற்படுகிறது?
சின்ன சின்ன தலைவலிகள், புற காரணிகளால் ஏற்படுவது அனைவருக்குமே இயல்புதான். இன்னும் சொல்லப்போனால் அலுவலக அழுத்தங்கள் காரணமாக தலைவலி ஏற்படுவது இயல்பு. அதற்கு சிறிய அளவு ஓய்வெடுத்து ஒரு சூடாக ஒரு டீ குடித்தாலே போதுமானது. ஜலதோஷம் பிடித்தால் ஏற்படும் தலைவலி. அதுவும் ஒரு சில நாட்களில் போய்விடும். அதிகளவு சுவாச பாதையில் சளி ஆக்ரமிப்பதால் அது ஏற்படுகிறது.
அப்படி அல்லாமல் உடலையே ரணகளப்படுத்தி, விண் விண் என்று தலை 100 சுக்கலாக வெடித்து சிதறும் அளவுக்கு தலைவலி ஏற்படுவதும், கண்கள் அப்படியே பழுத்து வெடித்து விடுமளவிற்கு அழுத்தத்துடன் கூடிய தலைவலி உருவாவதும் எதனால்? எப்படி அதை எதிர்கொள்வது என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.
சத்துக்குறைபாடு:
உடலுக்குத் தேவையான போஷாக்கான உணவு இல்லாமையால் ஏற்படும் சத்துக்குறைபாடு காரணமாக தலைவலி ஏற்படும். அது தீவிரமாக பல நாட்கள் நீடிக்கும். அதற்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகள் பெருகுவதால் உள் உறுப்பு பாதிப்புகள் ஏற்பட்டு, அதன் வெளிப்பாடாகவும் மிக கடினமான தலைவலி ஏற்படுகிறது.
தலையில் இடிபோல அடிவிழுதல்:
மனைவி கோபம் கொண்டு கணவரின் தலையில் பூரிக்கட்டை எடுத்து மண்டு மண்டு என அடிப்பதால் தலையில் தீராத தலைவலி ஏற்படும். சில நேரங்களில் வலி விண் விண் என தெறிக்க விடும். இது நகைப்பிற்காக எழுத்தப்பட்டது அல்லது. உண்மையிலேயே சில குடும்பங்களில் அடிதடி நிகழ்ந்து இதுபோல ஏற்பட்டதுண்டு.
விபத்துகளில் தலையில் அடிப்பட்டு, அதிகம் கவனிக்காமல் விட்டு விட்டபிறகு அதன் விளைவாக சில நாட்களில் பெரும் பிரச்னையாக தலைவலி ஏற்படுவதுண்டு. குறிப்பாக மூளைகளில் இரத்தக்கட்டு உருவாகி ஏற்படும் கர்ண கடூர தலைவலி. சிலருக்குத் தலை பின்னால் வலிக்கும். சிலருக்கு நெற்றியின் இருபுறமும் வலிக்கும். ஒரு சிலருக்கோ தலை முழுவதும் ஒரு பூதம் தன் இரு கைகளை வைத்து அழுத்துவது போல அதிக பாரமாக இருக்கும்.
வேறு சிலருக்கோ ஒரு பக்கம் மட்டும் விண் விண் என வலி தெறித்து, உயிரை வாங்கும். அந்த இடத்தில் மட்டும் ஒரு பிளேட் கொண்டு பட்டென தட்டி நரம்பை உருவி விடலாம் போல ஒரு உணர்வு வரும். அந்தளவுக்கு அந்த ஒற்றைத்தலைவி பாடாய் படுத்தி எடுத்து விடும்.
தலைவலியும், காய்ச்சலும் தனக்குத் வந்தால் தான் புரியும் என்று ஒரு பழமொழியே கூட உண்டு. இதற்கு உள்ளர்த்தம் என்ன என்பதைக்காட்டிலும், வெளி அர்த்தம் நோய் தனக்கு உருவானால்தான் அதன் பாதிப்பு பற்றி புரிந்துகொள்ள முடியும் என்பதுதான். அந்தளவிற்கு நோயின் தீவிரம் இருக்கும் என்பதை உணர்த்தவே நம் முன்னோர்கள் அப்படி இயற்கி வைத்துள்ளனர்.
மழைக்காலம் தலைவலிக்கு உகந்தகாலம்
ஈரக்காற்றால் தலையில் ஈரம்கோர்த்து தலைபாரம் ஏற்படும். குறிப்பாக பெண்களுக்கு அதிக தொலைவு ஈரக்காற்றில் பயணம் செய்யும்பொழுது, தலைக்கு எந்த ஒரு பாதுகாப்பு கவசமும் அணியாத சூழ்நிலையில் அதிகமாக ஈரக்காற்று காதுகள் வழியாக புகுந்து நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும். இதனால் வைரஸ் தொற்று ஏற்பட்டு காய்ச்சல், சளி, தலைவலி என தொடர் நோய்கள் உருவாகி அவதிபடுவர்.
காட்டு நொச்சியிலைகளைப் பறித்து வந்து கைப்பிடி அளவு ஒரு பாத்திரத்தில் நீரூற்றி கொதிக்க வைத்து "ஆவி" பிடித்தால் தலைவலி வந்த இடம் தெரியாமல் பறந்து ஓடிவிடும். நன்றாக மூச்சு இழுத்து விட முடியும். சுவாசப்பாதையில் இருக்கும் சளி போன்ற நச்சுகள் நீங்கி சுவாசம் சீரடைவதால் இடமடக்காக வேலை செய்து கொண்டிருந்த கிருமிகள் ஒழிந்து தலைபாரம் குறையும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் காப்பி கொட்டைகளை எடுத்து நீரில் இட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிக்க கடுமையான தலைவலி குறைந்து, தலை இலேசாகும்.
நல்ல தரமான இளசான முள்ளங்கிகளை காய்கறி மார்க்கெட்டில் ஃப்ரஸ்சாக வாங்கி வந்து, சிறு சிறு துண்டாகளாக்கி அதன் சாறு எடுத்து (Juice) பருகி வர தலைவலி குணமாகும்.
சமையலறையில் இருக்கும் இஞ்சியை சுத்தப்படுத்தி, அழுக்கில்லாத சுத்தமாக கழுவப்பட்ட அம்மிக் கல்லில் தட்டி அதை தலைக்கு பற்றாக போட தலைவலி நீங்கி இயல்பு நிலையை அடையலாம்.
நல்ல தரமான எலுமிச்சைப் பழத்தை எடுத்து சாறு பிழிந்து எடுத்து அதை இரும்பு சட்டியில் போட்டு காய்ச்சி அதை தலையில் பற்றுபோட தலைவலி குணமாகும்.
தண்ணீரில் வேப்பிலை, துளசி போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிக்க, தலையில், சுவாசபாதையில் கோர்த்து கொண்டிருக்கும் கெட்டியான சளி இளகி, வெளியேறி தலைவலி நீங்கும்.
காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் உப்பைப் போட்டு தொண்டைக்குழி நனையும் வரை வாயில் ஊற்றி, நன்றாக கொப்பளித்து துப்ப தொண்டையில் கட்டிக்கொண்டிருக்கும் சளி வெளியேறி, தலைவலி குறையும்.
கொஞ்சம் கிராம்பு எடுத்து மை போல அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைப்பாரம் குறைந்து இலேசாகும்.
திருநீறு இலை, தும்பை இலை இவற்றின் சாறு எடுத்து அவற்றுடன் பச்சை கற்பூரம் சேர்த்து நெற்றியில் தடவ பாடாய்படுத்தும் தலைவலி சிறிது சிறிதாக குறைந்து இறுதியாக மறைந்துவிடும்.
கடுமையான தலைவலி ஏன் ஏற்படுகிறது?
சின்ன சின்ன தலைவலிகள், புற காரணிகளால் ஏற்படுவது அனைவருக்குமே இயல்புதான். இன்னும் சொல்லப்போனால் அலுவலக அழுத்தங்கள் காரணமாக தலைவலி ஏற்படுவது இயல்பு. அதற்கு சிறிய அளவு ஓய்வெடுத்து ஒரு சூடாக ஒரு டீ குடித்தாலே போதுமானது. ஜலதோஷம் பிடித்தால் ஏற்படும் தலைவலி. அதுவும் ஒரு சில நாட்களில் போய்விடும். அதிகளவு சுவாச பாதையில் சளி ஆக்ரமிப்பதால் அது ஏற்படுகிறது.
அப்படி அல்லாமல் உடலையே ரணகளப்படுத்தி, விண் விண் என்று தலை 100 சுக்கலாக வெடித்து சிதறும் அளவுக்கு தலைவலி ஏற்படுவதும், கண்கள் அப்படியே பழுத்து வெடித்து விடுமளவிற்கு அழுத்தத்துடன் கூடிய தலைவலி உருவாவதும் எதனால்? எப்படி அதை எதிர்கொள்வது என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.
சத்துக்குறைபாடு:
உடலுக்குத் தேவையான போஷாக்கான உணவு இல்லாமையால் ஏற்படும் சத்துக்குறைபாடு காரணமாக தலைவலி ஏற்படும். அது தீவிரமாக பல நாட்கள் நீடிக்கும். அதற்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகள் பெருகுவதால் உள் உறுப்பு பாதிப்புகள் ஏற்பட்டு, அதன் வெளிப்பாடாகவும் மிக கடினமான தலைவலி ஏற்படுகிறது.
தலையில் இடிபோல அடிவிழுதல்:
மனைவி கோபம் கொண்டு கணவரின் தலையில் பூரிக்கட்டை எடுத்து மண்டு மண்டு என அடிப்பதால் தலையில் தீராத தலைவலி ஏற்படும். சில நேரங்களில் வலி விண் விண் என தெறிக்க விடும். இது நகைப்பிற்காக எழுத்தப்பட்டது அல்லது. உண்மையிலேயே சில குடும்பங்களில் அடிதடி நிகழ்ந்து இதுபோல ஏற்பட்டதுண்டு.
விபத்துகளில் தலையில் அடிப்பட்டு, அதிகம் கவனிக்காமல் விட்டு விட்டபிறகு அதன் விளைவாக சில நாட்களில் பெரும் பிரச்னையாக தலைவலி ஏற்படுவதுண்டு. குறிப்பாக மூளைகளில் இரத்தக்கட்டு உருவாகி ஏற்படும் கர்ண கடூர தலைவலி. சிலருக்குத் தலை பின்னால் வலிக்கும். சிலருக்கு நெற்றியின் இருபுறமும் வலிக்கும். ஒரு சிலருக்கோ தலை முழுவதும் ஒரு பூதம் தன் இரு கைகளை வைத்து அழுத்துவது போல அதிக பாரமாக இருக்கும்.
வேறு சிலருக்கோ ஒரு பக்கம் மட்டும் விண் விண் என வலி தெறித்து, உயிரை வாங்கும். அந்த இடத்தில் மட்டும் ஒரு பிளேட் கொண்டு பட்டென தட்டி நரம்பை உருவி விடலாம் போல ஒரு உணர்வு வரும். அந்தளவுக்கு அந்த ஒற்றைத்தலைவி பாடாய் படுத்தி எடுத்து விடும்.
தலைவலியும், காய்ச்சலும் தனக்குத் வந்தால் தான் புரியும் என்று ஒரு பழமொழியே கூட உண்டு. இதற்கு உள்ளர்த்தம் என்ன என்பதைக்காட்டிலும், வெளி அர்த்தம் நோய் தனக்கு உருவானால்தான் அதன் பாதிப்பு பற்றி புரிந்துகொள்ள முடியும் என்பதுதான். அந்தளவிற்கு நோயின் தீவிரம் இருக்கும் என்பதை உணர்த்தவே நம் முன்னோர்கள் அப்படி இயற்கி வைத்துள்ளனர்.
மழைக்காலம் தலைவலிக்கு உகந்தகாலம்
ஈரக்காற்றால் தலையில் ஈரம்கோர்த்து தலைபாரம் ஏற்படும். குறிப்பாக பெண்களுக்கு அதிக தொலைவு ஈரக்காற்றில் பயணம் செய்யும்பொழுது, தலைக்கு எந்த ஒரு பாதுகாப்பு கவசமும் அணியாத சூழ்நிலையில் அதிகமாக ஈரக்காற்று காதுகள் வழியாக புகுந்து நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும். இதனால் வைரஸ் தொற்று ஏற்பட்டு காய்ச்சல், சளி, தலைவலி என தொடர் நோய்கள் உருவாகி அவதிபடுவர்.
தலைவலி தீர வைத்தியம்
கடுமையான தலைவலி, மிதமான தலைவலி, இலேசான தலைவலி இப்படி எது வந்தாலும், இந்த இயற்கை முறை ஓரளவிற்கு தீர்வு தரும்.காட்டு நொச்சியிலைகளைப் பறித்து வந்து கைப்பிடி அளவு ஒரு பாத்திரத்தில் நீரூற்றி கொதிக்க வைத்து "ஆவி" பிடித்தால் தலைவலி வந்த இடம் தெரியாமல் பறந்து ஓடிவிடும். நன்றாக மூச்சு இழுத்து விட முடியும். சுவாசப்பாதையில் இருக்கும் சளி போன்ற நச்சுகள் நீங்கி சுவாசம் சீரடைவதால் இடமடக்காக வேலை செய்து கொண்டிருந்த கிருமிகள் ஒழிந்து தலைபாரம் குறையும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் காப்பி கொட்டைகளை எடுத்து நீரில் இட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிக்க கடுமையான தலைவலி குறைந்து, தலை இலேசாகும்.
நல்ல தரமான இளசான முள்ளங்கிகளை காய்கறி மார்க்கெட்டில் ஃப்ரஸ்சாக வாங்கி வந்து, சிறு சிறு துண்டாகளாக்கி அதன் சாறு எடுத்து (Juice) பருகி வர தலைவலி குணமாகும்.
சமையலறையில் இருக்கும் இஞ்சியை சுத்தப்படுத்தி, அழுக்கில்லாத சுத்தமாக கழுவப்பட்ட அம்மிக் கல்லில் தட்டி அதை தலைக்கு பற்றாக போட தலைவலி நீங்கி இயல்பு நிலையை அடையலாம்.
நல்ல தரமான எலுமிச்சைப் பழத்தை எடுத்து சாறு பிழிந்து எடுத்து அதை இரும்பு சட்டியில் போட்டு காய்ச்சி அதை தலையில் பற்றுபோட தலைவலி குணமாகும்.
தண்ணீரில் வேப்பிலை, துளசி போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிக்க, தலையில், சுவாசபாதையில் கோர்த்து கொண்டிருக்கும் கெட்டியான சளி இளகி, வெளியேறி தலைவலி நீங்கும்.
காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் உப்பைப் போட்டு தொண்டைக்குழி நனையும் வரை வாயில் ஊற்றி, நன்றாக கொப்பளித்து துப்ப தொண்டையில் கட்டிக்கொண்டிருக்கும் சளி வெளியேறி, தலைவலி குறையும்.
கொஞ்சம் கிராம்பு எடுத்து மை போல அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைப்பாரம் குறைந்து இலேசாகும்.
திருநீறு இலை, தும்பை இலை இவற்றின் சாறு எடுத்து அவற்றுடன் பச்சை கற்பூரம் சேர்த்து நெற்றியில் தடவ பாடாய்படுத்தும் தலைவலி சிறிது சிறிதாக குறைந்து இறுதியாக மறைந்துவிடும்.
0 Comments
Don't Comment Spam Link on Comment Section.