இடுப்பு வலி நீங்க இயற்கை மருந்து

இடுப்பு வலி வந்தாலே பயங்கர கடு கடுப்பாக இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு அது ஒரு பெரிய அவதி. ஆண்களைவிட பெண்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் ஏற்படும் குறுக்கு வலியானது தாங்க முடியாத அளவிற்கு வந்து பாடாய் படுத்தும். அந்தளவிற்கு மிக கடுமையான இடுப்பு வலி க்கு நம் இயற்கை நமக்கு மருந்து கொடுத்திருக்கிறது. நிவாரணம் நிச்சயம் உண்டு.

இடுப்பு வலி வருவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை. எந்த வயதினருக்கும் வரலாம்.

இடுப்பு வலி நீங்க மருந்து


உளுந்து கஞ்சி

உளுந்தை பொட்டு நீக்கி, கஞ்சி செய்து கொடுத்து வந்தால் இடுப்பு வலி படிப்படியாக குறையும்.

தோல் நீக்காத உளுந்தம்பருப்புடன், தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து, களி போல கிண்டி அதனுடன் சுவைக்காக பனைவெல்லம், வாழைப்பழம் சேர்த்து சாப்பிட உடல் பலம் பெற்று, இடுப்பு வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

இடுப்பு பலம் பெற

ஒரு சிலர் எப்பொழுது பார்த்தாலும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நின்று கொண்டிருப்பர். அவர்களுக்கு பின் இடுப்பு பலவீனமாக உள்ளது என்பதை அதைப் பார்த்தே தெரிந்துகொள்ளலாம். அதுபோன்றவர்கள் உளுந்தங்களி செய்து சாப்பிட்டு வர இடுப்பு பலம்பெறும். கீழே விழுந்து உண்டாகும் இரத்தக்கடிகள், தலை முறிவு, தசை பிடிப்புகளுக்கு உளுந்தை அரைத்து ,நன்கு பொடி செய்து, தேவையில்லாத தூசிகளை சலித்துவிட்டு, அதனுடன் முட்டை வெள்ளை கரு கலந்து அடிப்பட்ட , இரத்த கட்டு இருக்கும் இடத்தில் தடவி கட்டுப் போட்டால் விரைவில் இரத்தக்கட்டு நீங்கும்.

இடுப்பு வலி இருக்கும்போது செய்ய கூடாதவைகள்:

கடுமையான இடுப்பு வலி இருந்தும் சில வேலைகளை செய்தே ஆக வேண்டிய கட்டாய சூழ்நிலையில் சிலர் இருப்பர். தொடர்ந்து அவர்கள் வேலை செய்யும்பொழுது இடுப்பிற்கு அதிக பளு கொடுப்பதால் அது அதி தீவிர நோயாக மாறிவிடும். எனவேதான் இடுப்பு வலி இருக்கும்போது சில வேலைகளை செய்யக்கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
ஒரே இடத்தில் நிற்பது, தொடர்ந்து நடப்பது, தொடர்ந்து உட்கார்ந்து கொண்டே இருப்பது போன்ற வேலைகளை முதுகு தண்டு வலியின்போது செய்யக்கூடாது. இடுப்பு கீழ், மேல் உடல்களை இணைப்பதால் அதற்கு சரியான ஓய்வு கொடுக்க வேண்டும். கீழ் முதுகில் அதிக வலி இருந்தால் சம்மான தரையில் பாய்போட்டு, கால்களை நீட்டி உட்காரலாம். இதனால் வலி குறையும்.

remedy for hip pain


உடற்பயிற்சி தவிர்த்தல் நல்லது

தினமும் உடற்பயற்சி, வாக்கிங் செல்பவர்களாயின் இடுப்பு வலி தீரும் வரை எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. தொடர்ந்து உடலுக்கு வேலை கொடுக்கும்போது இடுப்பு பாதிப்பு அதிகமாகி, அதுவே பெரிய சிக்கலாக மாறவிடக்கூடும்.

உடனடி வலி நிவாரணி வேண்டாம்.

பொறுக்க முடியாத வலி இருந்து, மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளலாம். தேவையில்லாமல் நீங்களே வைத்தியம் பார்க்கிறேன் பேர்வலி என்று மெடிக்கல் ஸ்டோர் ல் சென்று மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டாம்.

இடுப்பு எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டறிய சில காரணங்களை அறிந்து தெரிந்துகொள்ளும் வரை நீங்களாகவே வைத்தியம் செய்து கொள்ளலாம். சிலர் தொடர்ந்து 10, 15 மணி நேரம் டூவீலர் ஓட்டுவதால் இடுப்பு வலி வந்திருக்கும். சிலர் தொடர்ந்து 18 மணி நேரம் அலுவலகத்தில் உட்கார்ந்தவாறே வேலை செய்வதால் இடுப்பு வலி ஏற்படும். சிலர் தொடர்ந்து குனிந்துகொண்டே வேலை செய்யும்போது இடுப்பு பிடித்துவிடும். ஒன்றுமே செய்யாமல் வீட்டில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு கூட இடுப்பு வலி வந்து பாடாய் படுத்திவிடும்.

எடை தூக்காமல் இருப்பது

இடுப்பு வலியின்போது வேலையே செய்யக்கூடாது. குறிப்பாக அதிக எடை கொண்ட பொருட்களை தூக்கவே கூடாது. அது இடுப்பிற்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்து மேலும் சிக்கலாக மாற்றிவிடும்.

அதே போல ஒத்தடம் கொடுப்பது, ஐஸ் வைத்து வலியை நீக்க முயற்சிப்பது போன்ற தற்காலிக வலி நீக்கும் முறைகளையும் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வது தற்காலிக தீர்வை மட்டுமே கொடுக்கும். அது நிரந்தரமல்ல. மருத்துவரை அணுகி வைத்தியம் செய்து கொள்வதே  நல்லது.

இடுப்பு வலி போக இயற்கை வைத்தியம்


1. உடனடியாக இடுப்பு வலிக்கு நிவாரணம் செய்வதென்றால் அது சுடுநீர் ஒத்தடம் கொடுப்பதுதான். ஆனால் அதையே தினந்தோறும் செய்து கொண்டிருப்பது நல்லதல்ல.
2. ஐஸ் கட்டி ஒத்தடம் தரலாம். அதுவும் நிரந்தர தீர்வு அல்ல.
3. படியை வைத்து முதுக்கு பின்புறம், வலி இருக்கும் இடத்தில் வைத்துப் படுத்து, படியை உருட்டினால் பெரும்பாலான வலிகள் மறைந்து போகும்.
4. உளுந்தங்கஞ்சி நல்ல மாமருந்து
5. சுக்கு டீ இடுப்பு வலி நீங்க நல்ல மருந்து
6. சரியான பொசிசனில் படுத்து தூங்கினால் இடுப்பு-முதுகுவலி தீரும்
7. கீழ் முதுகில் வலி இருப்பவர்கள் குப்புற படுக்க கூடாது.
8. சரியான உடற்பயிற்சி இடுப்பு வலி போக உதவும்
9. பாடி ஸ்ட்ரெட்ச் செய்தால் இடுப்பு வலி போகும்
10. சரியான நிலையில் உட்கார்ந்தால் குறுக்குவலி போகும்.



Post a Comment

0 Comments