தலைவலி ஏற்பட பல காரணங்கள் உண்டு. சூழ்நிலை, உடல் உபாதைகள், தீராத நோய்கள், உடல் உள்ளுறுப்புகள் கோளாறு, வெளிப்புற அடிகள் என எல்லாமே காரணமாக அமைகின்றன. சுற்றுச்சூழல் மாசுபாடு கூட காரணமாக இருக்கும். மருத்துவ ரீதியாக விதவிதமான தலைவலிகளுக்கு என்னென்ன காரணங்கள் என்பதை மிக விரிவாக இந்தக் கட்டுரையின் வாயிலாக தெரிந்துகொள்வோம்.
அலுவலகங்கள் மற்றும் பேருந்து நடத்துனர்கள் போன்றவர்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். கணினியில் பணிபுரிபவர்களுக்கு, மூளையை ஆதாரமாக வைத்து பணிபுரிபவர்கள் அனைவருக்கும் தலைவலி உருவாகும். வெயிலில் மாடாய் உழைத்துக் களைப்போருக்கு போதிய நீராகராமின்றி உழைத்து களைத்துப் போவோருக்கு தலைவலி உருவாகும்.
விட்டீல் மன நிம்மதி இல்லாமல் குழந்தைகள், கணவர், மாமியார், வீட்டு வேலைகள் என ஓயாது வேலை செய்து களைத்துப் போகும் பெண்களுக்கு தலைவலி ஒரு பெரிய நோயாகவே உருவெடுக்கும். இப்படி விதவிதமான தலைவலிகள் ஏற்படுவதற்கு முதல் முக்கிய காரணமே மன அமைதி இன்றி இருப்பதுதான்.
யோகா செய்வதன் மூலம் உடலில் ஏற்படும் பல நோய்களை இல்லாமல் ஆக்கலாம். முறையான ஆசானிடம் சென்று பயிற்சி பெறுவதன் மூலம் பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் யோக க் கலையை கற்று தேர்ந்து "நோயில்லா வாழ்க்கை" யை வாழலாம்.
யோகா பற்றித் தெரிந்துகொள்ள விக்கிப் பீடியாவின் யோகக் கலை பக்கத்தை வாசிக்கவும்.
இப்பொழுதெல்லாம் அவரவர்களுக்கு அவரவர்களே டாக்டர்களாகி விடுகின்றனர். சாதாரண தலைவலி என்றால் கூட உடனே "மெடிக்கல் ஸ்டோர்" க்குச் சென்று தலைவலி மருந்து கொடுங்க என்று கூறி, அங்கு தரும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர்.
தலைவலி எதனால் உருவானது? எவ்வளவு நேரம் இருக்கிறது? தலையின் எந்த பாகத்தில் வலிக்கிறது என்பது பற்றியெல்லாம் மாத்திரை கொடுப்பவர் கேள்வி கேட்பதில்லை. அதே போல நோய் இன்னலுக்கு ஆளானவர்களும் விரிவாக கூறுவதில்லை. மருந்து கொடுப்பவர் முறையாக மருத்துவம் படித்தவரும் அல்ல. இதனாலேயே மிக ப் பெரும்பாலானோர் மாத்திரை வாங்கி விழுங்கிவிட்டு, அந்த மாத்திரைகள் தரும் "பக்க விளைவுகள்" க்கு விரைவில் ஆளாகின்றனர்.
இதுபோன்ற செயல்களால் கல்லீரல் தனது இயல்பு தன்மையை இழந்து கெட்டு நாசமாகின்றது. மேலும் பல உள்ளுறுப்புகள் தன் இயல்பு நிலைமை இழந்து செயல்படுவதில் சுணக்கம் காட்டுகின்றன. இதனால் உடலில் பல விதமான விளைவுகள் ஏற்பட்டு, உடல் முழுவதும் நோய்க்கு ஆட்படுகின்றன. சில வருடங்களில் தீராத நோயாளிகளாகவே மாறிவிடுகின்றனர். இதனால்தான் எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும், டாக்டரின் அறிவுரை இல்லாமல் எடுத்துக்கொள்ள கூடாது என மருத்துவ கவுன்சில் எச்சரிக்கிறது.
தலைவலி என்றாலே உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. அதுவும் பலரிடமும் கைவசம் இருக்கும் தலைவலிக்கு வலி நிவாரணியாக விழங்கும் “பெய்ன்கில்லர்’எல்லாம், உடலுக்கு கேடானது.
40 வயதைத் தாண்டினால், நரம்புத் தளர்ச்சியில் கொண்டு போய் விட்டு விடும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதிலும், “மைக்ரேன்’ என்று சொல்லப் படும், ஒற்றைத் தலைவலி வந்து விட்டால் போதும், உயிரே போகும் அளவுக்கு வலி இருக்கும்.
தலைப்பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் சீரற்று இருப்பதன் காரணமாகவே, தலைவலி ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால், தலைவலி வராது. பெரும்பாலும், மன அழுத்தம் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, தலைவலி அதிகமாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், முதலில் ரத்த அழுத்தத்தைச் சோதிக்க வேண்டும்.
கணினி, மொபைல் என எலக்ட்ரானிக் பொருட்களுடன் பெரும்பாலான நேரத்தைச் செலவழிப்பவர்களுக்கு, கண்களில் உள்ள நரம்புகள் பாதித்து, பார்வை மங்கலாகும். அதன் அறிகுறிதான் தலைவலி.
கண்களில் ஏற்படும் பிரச்னைகளால்தான் தலைவலி வருகிறது. அரை மணிநேரத்துக்கு ஒரு முறையேனும், இரண்டு நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு தரவேண்டும். கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுத்தாலே, தலைவலி வராமல் தடுக்க முடியும்.
சைனஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு, காலை எழுந்ததும் தலைபாரம் ஏற்படும். நேராக நின்றால் தலை வலிக்காது. ஆனால், குனிந்தால் தலைவலி ஏற்படும். சைனஸ் பிரச்னையால் ஏற்படும் தலைவலி நீங்க, மாத்திரை மருந்துகளைக் காட்டிலும், அலர்ஜியைத் தவிர்ப்பதும், யூகலிப்டஸ் தைலம் கலந்து, ஆவி பிடிப்பதும் நல்ல பலன் தரும்.
சில தலைவலிகள் ஓய்வெடுத்தால் தானாகவே சரியாகிவிடும். ஒரு சில தலைவலிகள்தொடர்ந்து கொண்டே இருக்கும். மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்து தலைவலி இருந்தால், நிச்சயமாக மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம். அவர் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மைக்ரேன் என்ற தலைவலி ஏற்பட குறிப்பிட்டு எந்தக் காரணங்களையும் சொல்ல முடியாது. இது மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்படும் பிரச்னை மற்றும் மூளையில் சுரக்கும் வேதியியல் இராசயன சுரப்புகளில் ஏற்படும் பிரச்னைகளால் ஏற்படுவதாகும். இவ்வாறு உருவாகும் தலைவலிக்கு தீர்வு மன அமைதி மற்றும் மருத்துவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகள் மட்டும்தான்.
அனுதினமும் காபி அருந்தினால் வந்தால் தலைவலி நிற்கிறது என நினைத்து உற்சாக பானம் அருந்திக் கொண்டே இருப்பதும் தவறான செயல். அதுவே நாளடைவில் வழக்கமாக மாறி, காபி இல்லை என்றால் தலைவலிப்பது, உடல் சோர்வு, சோம்பல் மேலும் மூளை சரியாக இயங்காமல் இருப்பது போன்ற உணர்வு தோன்றிவிடும். இந்தியாவில் இதுபோன்று 90% மக்கள் உற்சாக பானமான டீ, காபி க்கு அடிமையாகி உள்ளனர் என்பது ஒரு ஆய்வு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோன்றவர்கள் காபி அருந்தாவிட்டால் தலைவலி வரும் என்ற நிலையை அடைந்துவிடுவர்.
குழந்தை பருவத்திலிருந்தே சரிவிகித உணவை உண்ண பழகிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உடலுக்குத் தேவையான போஷாக்குகள் கிடைக்கப்பெறும். இதனால் உடல் சீரான இயக்கத்தில் இருப்பதோடு, உள்ளுறுப்புகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.
உடற்பயிற்சி:
அன்றாடம் காலை எழுந்து பல் துலக்குவது போல, உடற் பயிற்சி செய்வதையும் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். உடல் உறுப்புகளை தூண்டச் செய்து, அதன் இயக்கங்கள் சீராக உடற் பயற்சி அவசியம். ஓடுதல், குதித்தல், நடத்தில், யோகா மற்றும் ஜிம் பயிற்சிகள் என எதையாவது குறைந்த பட்சம் அரைமணிநேரம் செய்தாக வேண்டும்.
தலைவலிக்கு ஆட்பட்டவர்கள் முதலில் தேவையான அளவு தூக்கத்தைப் பெறுகின்றனரா என கேட்டறிய வேண்டும். போதிய தூக்கமின்மையால்தான் பெரும்பான்மையானவர்களுக்கு ஒற்றைத்தலைவலி, இருபக்க தலைவலி என வருகின்றன. ஒவ்வொருவரும் எட்டு மணி நேரம் தூக்கத்தை கடைபிடித்தால் உடலில் எந்த வியாதியும் வந்து சேராது. தூக்கம் மனிதருக்கு கிடைத்த சொர்க்கம். அதை அனுபவிக்காமல் விடலாமா?
சிலர் இந்தக் காலத்தில் பொருள் தேடலில் மட்டுமே குறிக்கோள் கொண்டு ஓடுகின்றனர். ஓய்வில்லா வாழ்க்கையில் ஓடி, ஓடி தேய்ந்து, மாய்ந்து உழைத்து, களைத்து பொருள் குவித்துத் திரும்பிப் பார்க்கையில் உடல் முழுவதும் நோய்களின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும். சேர்த்த பொருள் அனைத்தையும் செலவு செய்தாலும், மீண்டும் அந்த ஆரோக்கியமான உடலைப் பெற முடிவதில்லை. இந்த உண்மை தெரிந்தவர்கள் உடலுக்குப் போதிய ஓய்வு, தூக்கம் கொடுத்து உன்னத நிலைமையை அடைகின்றனர்.
புரியாதவர்கள் பொருள் தேடி குவித்து, இறுதி காலத்தை நரகத்தில் கழிக்கின்றனர். எனவேதான் தூக்கம் என்பது சொர்க்கம் என்று இங்கு குறிக்கிறேன்.
சாதாரண தலைவலி என நினைத்து அதை அலட்சியப்படுத்துவது மிகத் தவறான செயல். மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் முறையான சிகிச்சை அவசியம். அன்றாட செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தலைவலி ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளை சீராக வைத்துக்கொள்ள பழக வேண்டும். முடியவில்லை என்றால் இடம் மாற வேண்டும். குறிப்பாக தூசி அதிகமுள்ள, மாசு நிறைந்த பகுதிகளில் வசிப்போருக்கு அதுதான் பிரச்னை என்றால் உடனடியாக அந்த இடத்தை விட்டு வேறு ஒரு வாழிடத்தைத் தேர்வு செய்தாக வேண்டும்.
மைக்ரேன் என்ற தலைவலி வராமல் இருக்க உடனடியாக மருத்துவரை அணுகி அவர் தரும் குறிப்புகளை ஏற்றுக்கொண்டு, அவர் குறிப்பிட்ட மருந்து மாத்திரைகளை உட்கொண்டு, அந்த நோயிலிருந்து விடுபட வேண்டும். யோகா செய்வது மிக அற்புதம பலனைக் கொடுக்கும்.

தலைவலி போக்கும் யோகா

மருந்துகளை தவறாக பயன்படுத்துதல்

தலைவலிக்கான காரணங்கள்:

தலைவலிக்கான தீர்வுகள்:

சரிவிகித உணவு
குழந்தை பருவத்திலிருந்தே சரிவிகித உணவை உண்ண பழகிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உடலுக்குத் தேவையான போஷாக்குகள் கிடைக்கப்பெறும். இதனால் உடல் சீரான இயக்கத்தில் இருப்பதோடு, உள்ளுறுப்புகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.
உடற்பயிற்சி:
அன்றாடம் காலை எழுந்து பல் துலக்குவது போல, உடற் பயிற்சி செய்வதையும் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். உடல் உறுப்புகளை தூண்டச் செய்து, அதன் இயக்கங்கள் சீராக உடற் பயற்சி அவசியம். ஓடுதல், குதித்தல், நடத்தில், யோகா மற்றும் ஜிம் பயிற்சிகள் என எதையாவது குறைந்த பட்சம் அரைமணிநேரம் செய்தாக வேண்டும்.
முறையான தூக்கம்
தலைவலிக்கு ஆட்பட்டவர்கள் முதலில் தேவையான அளவு தூக்கத்தைப் பெறுகின்றனரா என கேட்டறிய வேண்டும். போதிய தூக்கமின்மையால்தான் பெரும்பான்மையானவர்களுக்கு ஒற்றைத்தலைவலி, இருபக்க தலைவலி என வருகின்றன. ஒவ்வொருவரும் எட்டு மணி நேரம் தூக்கத்தை கடைபிடித்தால் உடலில் எந்த வியாதியும் வந்து சேராது. தூக்கம் மனிதருக்கு கிடைத்த சொர்க்கம். அதை அனுபவிக்காமல் விடலாமா?
சிலர் இந்தக் காலத்தில் பொருள் தேடலில் மட்டுமே குறிக்கோள் கொண்டு ஓடுகின்றனர். ஓய்வில்லா வாழ்க்கையில் ஓடி, ஓடி தேய்ந்து, மாய்ந்து உழைத்து, களைத்து பொருள் குவித்துத் திரும்பிப் பார்க்கையில் உடல் முழுவதும் நோய்களின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும். சேர்த்த பொருள் அனைத்தையும் செலவு செய்தாலும், மீண்டும் அந்த ஆரோக்கியமான உடலைப் பெற முடிவதில்லை. இந்த உண்மை தெரிந்தவர்கள் உடலுக்குப் போதிய ஓய்வு, தூக்கம் கொடுத்து உன்னத நிலைமையை அடைகின்றனர்.
புரியாதவர்கள் பொருள் தேடி குவித்து, இறுதி காலத்தை நரகத்தில் கழிக்கின்றனர். எனவேதான் தூக்கம் என்பது சொர்க்கம் என்று இங்கு குறிக்கிறேன்.
தலைவலி - எச்சரிக்கை செய்தி
சாதாரண தலைவலி என நினைத்து அதை அலட்சியப்படுத்துவது மிகத் தவறான செயல். மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் முறையான சிகிச்சை அவசியம். அன்றாட செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தலைவலி ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளை சீராக வைத்துக்கொள்ள பழக வேண்டும். முடியவில்லை என்றால் இடம் மாற வேண்டும். குறிப்பாக தூசி அதிகமுள்ள, மாசு நிறைந்த பகுதிகளில் வசிப்போருக்கு அதுதான் பிரச்னை என்றால் உடனடியாக அந்த இடத்தை விட்டு வேறு ஒரு வாழிடத்தைத் தேர்வு செய்தாக வேண்டும்.
மைக்ரேன் என்ற தலைவலி வராமல் இருக்க உடனடியாக மருத்துவரை அணுகி அவர் தரும் குறிப்புகளை ஏற்றுக்கொண்டு, அவர் குறிப்பிட்ட மருந்து மாத்திரைகளை உட்கொண்டு, அந்த நோயிலிருந்து விடுபட வேண்டும். யோகா செய்வது மிக அற்புதம பலனைக் கொடுக்கும்.
0 Comments
Don't Comment Spam Link on Comment Section.