சர்க்கரை நோய் மருத்துவம்/உணவுகள்

நீரிழிவு என்ற சர்க்கரை நோய் மட்டும் மனிதனுக்கு வந்துவிடவே கூடாது. அது மெல்ல மெல்ல செல்களை அழித்து, கைகால்களை தின்னும் கொடிய வியாதி. இன்று இந்தியா உட்பட பலரும் சர்க்கரை நோய் வந்து வெந்து போயுள்ளனர். ஆனால் அது ஒரு நிரந்தர நோய் அல்ல என்பது கண்டறிந்துள்ளனர்.

முறையான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி இரண்டும் இருந்தால் "சர்க்கரை" நோய்க்கு சாவு மேளம் அடித்து கொண்டாடலாம் என்று இயற்கை ஆர்வலர்கள், மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் நீரிழிவு டயட் இல் இடம் பெறும் வெண்டைக்காய் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துமா..? கட்டுப்படுத்தாதா? அதை எப்படி சாப்பிட்டால் உடலுக்கு நன்மை செய்யும் என்பது இங்கு பார்ப்போம்.

சர்க்கரையை கட்டுப்படுத்தும் வெண்டைக்காய் 


இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஒரு அற்புதமான இயற்கை உணவு வெண்டைக்காய். ஆங்கலத்தில் Lady Finger என அழைக்கப்படும் இது நீரிழிவு நோயாளிகளுக்கு அற்புத உணவாக இருக்கிறது. அப்படி என்ன இதில் ஸ்பெஷல்? என்னதான் நிபுணர்கள் இந்த காயைப் பற்றி சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்வோம் வாங்க.


வெண்டைக்காயின் சிறப்பம்சங்கள்

இது கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தி, இரத்த கொழுப்பை குறைக்கிறது.  இதில் உள்ள சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோயில் இருந்து காத்திட, இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க வெண்டை உதவுகிறது.

இதை ஓக்ரா என்றும் அழைக்கின்றனர். பல்வேறு வகையான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளது. சுவையாக தாயாரித்து உண்பதற்கு ஏற்றது.

நீரிழிவு நோயாளிகள் இயற்கையாகவே இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

இது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். நீரிழிவு நோயுடன் தொடர்புடைய சிக்கல்களை எதிர்த்துப் போராட இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.

சில உணவுகள் இயற்கையாகவே இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க பங்களிக்கும். அந்த வகையில் இரத்த சர்க்கரைகளை எதிர்மறையாக பாதிக்காத நீரிழிவு நோயாளிகளுக்கும் வெண்டைக்காய் நன்மை பயக்கும்.

சர்க்கரை நோய்க்கான டயட்டில் வெண்டைக்காய் ஏன் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்:

இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் சயானி தாஸ் (Sayani Das) இப்படி விளக்குகிறார்.

இதில் நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் நல்ல மூலங்கள் அடங்கியுள்ளன.

அந்தக் காலத்திலிருந்தே இது நீண்ட காலமாக காய்கறியாகவும், மருந்தின் மூலமாக பயன்படுத்தப்படுகிறது.

இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சேர்ந்திருக்கும் சர்க்கரையை குறைப்பதற்கும், நீரிழிவு நோயாளிக்குத் தேவையான நார்ச் சத்துக்களையும் வழங்கவல்லது.

குறைந்த கலோரி கொண்டதாகவும்,  கிளைசெமிக் இன்டெக்ஸ் (ஜி.ஐ) குறைவாகவும் இருப்பதனால் வெண்டைக்காய் ஒரு சூப்பர்ஃபுட் ஆகும்.

வெண்டைக்காயில் கரையாத நார்ச்சத்து இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது என்று நம்பப்படுகிறது.

கர்ப்பகால நீரிழிவு நோயில் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க வெண்டைக்காய் உதவுகிறது என்று சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளது. "


வெண்டைக்காயால் கிடைக்கும் பிற ஆரோக்கிய நன்மைகள் :

சிறந்த இரத்த சர்க்கரை அளவைத் தவிர, உங்கள் உணவில் வெண்டைக்காயைச் சேர்ப்பதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. சில சுகாதார நன்மைகளும் இதில் அடங்கும்.

1. கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்த வெண்டைக்காய் உதவும், இதனால் இதய நோய்கள் குறையும்.

2. வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

3. வைட்டமின் A,B மற்றும் C அதிக அளவில் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்களுக்கும் வெண்டைக்காய் நல்லது.

4. இதில் மிகக் குறைந்த கலோரிகளே உள்ளன.

5. வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் K எலும்பு உருவாக்கம் மற்றும் இரத்த உறைவுக்கு உதவுகிறது.

neerilivu noi vaithiyam


நீரிழிவு - சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பரட்டைக் கீரை

இதென்னடா புதுசா இருக்கு? பரட்டை கீரை என்று நினைப்பவர்களுக்கு உடனடியாக பதினாரு வயதினிலே ரஜினி பரட்டை தான் நினைவுக்கு வரும். ஆனால் இதை சமைத்து உண்ட பிறகு இனி மறக்கவே மறக்காது. உங்கள் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, ஏன் மாமா, மச்சினி என யாருக்காவது சர்க்கரை வியாதி இருந்தால் இதை ஒரு உணவாக செய்து கொடுத்து பாருங்கள். நிச்சயம் அவர்களுக்கு நல்ல குணம் தெரியும்.

பரட்டைக்கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது.   இதனை அடிக்கடி சாப்பிடுவதால் உடலில் ஹார்மோன்கள் சீராக இயங்குகிறது.  கொலஸ்ட்ரால் அளவையும் சீராக வைக்கிறது.  இதில் உள்ள ஆண்டிஆக்ஸிடன்ட், ஒமேகா 3 இருப்பதால் உடலின் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கிறது. இதில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மையும் உள்ளது.

இந்த பரட்டைக்கீரையில் கேரட்டில் இருப்பதைப் போன்று  பீட்டா கெரட்டின் இருப்பதால் கண் பார்வையை தெளிவாக்கி, பார்வைத் திறனை அதிகரிக்கச் செய்கிறது. இதில் வைட்டமின் சி இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.  தோல் பளபளப்பு அடைக்கிறது. பரட்டைக்கீரையின் சாறு எடுத்து குடித்து வந்தால்,  இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு ஒரே சீராக இருக்கும்.

இது இன்சுலின் சுரப்பை தூண்டுவதுடன், சிறுநீரகம், இருதயத்தின் ஆரோக்கியத்திற்கும் துணைபுரிகிறது. மேலும் கண்கள், பாதம் மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படக்கூடிய நாட்பட்ட நோய்களை போக்கும் தன்மை இந்த கீரைக்கு உண்டு.

பரட்டைக் கீரையின் மேலதிக நன்மைகள்: 



க்ளைசமிக் இண்டெக்ஸ்: 

இதில் க்ளைசமிக் இண்டெக்ஸ் மிக குறைவாக இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

ஸ்டார்ச்: 
பரட்டைக்கீரையில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் உடலில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தாது.

ஆண்டிஆக்ஸிடண்ட்:
இந்த பரட்டைக்கீரையில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் நாட்பட்ட நோய்கள் குணமாகிறது.

கலோரிகள்: 
பரட்டைக்கீரையில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் இதன் சாறு எடுத்து பருகலாம்.

நார்ச்சத்து: 

இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சீராக இருப்பதுடன் மலச்சிக்கல் குணமாகிறது.

சர்க்கரைக்கு வெங்காயம் நல்லது

சர்க்கரை நோய்க்கு வெங்காயம் மிக நல்லது. குறிப்பாக சின்ன வெங்காயம் சர்க்கரையை வெகு விரைவாக கட்டுப்படுத்தி, இரத்திலுள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வருகிறது.

இந்த நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இயற்கையாக ஏராளமான வழிகள் உண்டு.  சில உணவுகள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும் தன்மை கொண்டிருக்கும். அவற்றை தெரிந்துகொண்டு, அளவோடு எடுத்துக் கொண்டால் இரத்த சர்க்கரை மிகாமல் பார்த்துக்கொள்ள முடியும். அப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் உடலில் மற்று உள்ளுறுப்புகளும் பாதிக்கப்படும்.

எளிதான உணவு வகைகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது. எண்ணெய், இனிப்பு, கொழுப்பு மிகுந்த உணவுகளை குறைத்து, நார்சத்து மிக்க உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.   நம் சமையலறையில் இருக்கக்கூடிய வெங்காயத்தை கொண்டு நீரிழிவு நோயை மிக எளிதில் கட்டுப்படுத்தலாம்.

தினமும் உண்ணும் உணவில் வெங்காயத்தை மறக்காமல் சேர்த்து கொண்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்து விடும். 100 கிராம் வெங்காயத்தை உணவில் சேர்த்து கொள்வதால் அடுத்த நான்கு மணி நேரத்தில் இரத்த சர்க்கரை கட்டுப்படுகிறது என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

1. க்ளைசமிக் இண்டெக்ஸ்: 



வெங்காயத்தில் க்ளைசமிக் இண்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கிறது.  55க்கும் குறைவான க்ளைசமிக் இண்டெக்ஸ் உள்ள உணவுகள் நீரிழிவு நோய்களுக்கு சிறந்தது.  வெங்காயத்தில் க்ளைசமிக் இண்டெக்ஸ் 10 ஆக இருப்பதால் இதனை சாப்பிட்டு வரலாம்.

2. கார்போஹைட்ரேட்: 


வெங்காயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கிறது.  நீரிழிவு நோயின் பாதிப்பு இருப்பவர்கள் அதிகபடியாக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை எடுத்து கொள்ள கூடாது.  அரை கப் வெங்காயத்தில் 5.9 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது.

3. நார்ச்சத்து: 


நீரிழிவு நோயாளிகளுக்கு நார்ச்சத்து மிகுந்த உணவு மிகவும் நல்லது.  வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படாது.  தொடர்ச்சியாக வெங்காயம் சாப்பிட்டு வந்தால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து இருதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிடலாம்.  பெரும்பாலும் சிவப்பு வெங்காயத்தை சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு குறையும்.  மதிய மற்றும் இரவு உணவுகளுடன் வெங்காயத்தை சேர்த்து சாப்பிடலாம்.  சாண்ட்விச்சில் வெங்காயம் சேர்த்து சாப்பிடலாம்.   நாவற்பழம், பட்டை, முட்டை, கீரைகள், விதைகள், கொட்டைகள், க்ரீக் யோகர்ட், மஞ்சள், சியா விதைகள், ப்ரோக்கலி, ஆளி விதை, ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் பூண்டு ஆகியவற்றை சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு குறையும்.

Post a Comment

0 Comments