தலைவலி மற்றும் வாந்தி வர என்ன காரணம் தெரியுமா?

சின்ன சின்ன பிரச்னைகள் முதல், பெரிய பிரச்னைகள் வரை அனைத்திற்கு ஒரு அலாரம் போல செயல்பட்டு முன்னெச்சரிக்கை செய்து, தற்காப்பு நடவடிக்கைகளை எடுங்கள் கூறுவது தான் இந்த தலைவலியும், வாந்தியும். ஒவ்வாத உணவை எடுத்துக்கொண்டால், அது குடலில் தங்காமல், தானாகவே வெளியேற்ற உதவும் யுக்தான் வாந்தி, குமட்டல். அதுபோன்ற சமயங்களில் வாந்தி எடுத்துவிட வேண்டும். வாந்தியை அடக்க, குணமாக்குகிறேன் பேர்வழி என்று கூறி, அதை தடுப்பதற்கா மருந்து மாத்திரைகளை நீங்களாகவே எடுத்துக்கொள்ளக் கூடாது.

தலைவயும் அப்படித்தான். ஏற்கனவே உடலில் ஏதேனும் பிரச்னை இருந்து, அதை ஒரு எச்சரிக்கை முன் வடிவமாக காட்டிட தலைவலி வந்து சேரும். மழையில் நனைந்தால் தலைவலி, வெயிலில் அலைந்தால் தலைவலி, சளி பிடித்தால் தலைவலி, டென்சன் ஆனால் தலைவலி, எதிரியை கண்டால் கோபத்துடன் கூடிய தலைவலி, மனைவியை கண்டால் அது ஒரு வித தலைவலி என ஆளுக்கு ஆள், வீட்டுக்கு வீடு, வயதுக்கு வயது ஒரு பாரபட்சம் இல்லாமல் வந்து வாட்டி எடுப்பதுதான் தலைவலி.

தலைவலி பெரியவர்கள் முதல் சிறயவர்கள் வரை அனைவரையும் வாட்டி வதைக்கும் ஒரு பொதுவான நோய் ஆகும். இது வர பல காரணங்கள் உள்ளன. தலையின் எந்த ஒரு பகுதியிலும் இது ஏற்படும். சில நேரங்களில் இது கடுமையானதாக இருக்கும். சில சமயங்களில் இலேசாக இருக்கும். ஒரு சிலருக்கு விட்டு விட்டு தலை வலிக்கும்.

தலைவலிக்கான காரணங்கள்: 

அதிக டென்சன் தலைவலியை ஏற்படும். சில நோய்களின் விளைவாக கூட தலைவலி தோன்றும். மூளையில் ஏற்படும் அலற்சி காரணமாக ஏற்படும். தலைக்காயம், சளி தேங்குதல், காய்ச்சல் போன்றவற்றால் கூட தலைவலி ஏற்படலாம். மாசு படர்ந்த சூழ்நிலையில் வசிப்போருக்கு சைனஸ் தொந்தரவுடன் கூட தலைவலி உருவாகும். சாதாரணமாக சிறு பிள்ளைகள் முதல் டீன் ஏஜ் இனர் வரை தலைவலி உருவாகும்.

சிறு குழந்தைகளுக்கு, பள்ளிப் படிப்பவர்களுக்கு தலைவலி என்றால் அதற்கு என்ன காரணம் என பெற்றோர்கள் ஆய்ந்தறிய வேண்டும். பெரும்பாலும் புறக் காரணிகளாலேயே சிறு வயதினருக்கு தலைவலி ஏற்படும்.

1. அதிக நேரம் டி.வி / தொலைக்காட்சி பார்த்தல்
2. அளவுக்கதிகமான நேரம் திறன் பேசியில் "வீடியோ" கேம் விளையாடுதல்
3. நீண்ட நேரம் இரவு கண்விழித்திருப்பது
4. தேவையில்லாமல் அதிக மன அழுத்தத திற்கு ஆளாவது

இதுபோன்ற அன்றாட நிகழ்வுகளின்பால் ஏற்படும் தொந்தரவுகளால் இதுபோன்ற head ache பிரச்னைகள் ஏற்படும்.

தலைவலி ஏற்படக் காரணங்கள்

சிறிய அல்லது பெரிய தொற்று நோய்களின் பாதிப்பு மற்றும் அதன் விளைவுகள்
தூசிபோன்ற ஒவ்வாமை காரணிகள்
நோய்க்கு எடுக்கும் மருந்துகள் மற்றும் மன உளைச்சல்கள்
உடலுக்குச் சேராத உணவுப் பொருட்கள்
பல் அல்லது முதுகு தண்டுவடம் பாதிப்பதால்
போதை பொருட்கள் உபயோகிப்பது
மூளையில் கட்டி, இரத்தக் குழாய் அதிகளவு விரிவடைதல்
போதிய உணவு உட்கொள்ளாமை
அளவுக்கதிகமான விளையாட்டு

வாந்தி வரக் காரணங்கள்:

பெரும்பாலும் வாந்தி வரக் காரணம் ஒவ்வாத உணவு வகைகளை உட்கொள்வதால் ஏற்படுகிறது. சிலருக்கு உணவு நச்சுத் தன்மை அடைந்துவிடுவதால் அதனால் வாந்தி ஏற்படுகிறது. தலையில் அடிபடுதல், மசக்கை காரணமாக கூட வாந்தி ஏற்படும். துர்நாற்றத்தை சுவாசிப்பதால் வாந்தி உணர்வு ஏற்படும். ஒரு சிலர் பயணங்களின்போது உடல் உணவுகுழாய் மண்டல சுழற்சியில் ஏற்படும் ஒவ்வாமை காரணமாக வாந்தி எடுப்பர்.

கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் வாந்தி எடுப்பவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு ஜீரண உறுப்பு சரிவர வேலை செய்யாத காரணமாக அவ்வாறு கடினமான உணவினை செரிக்க இயலாத சூழ்நிலையில் அவற்றை வாந்தியாக வெளித்தள்ளுகிறது. எனவேதான் மருத்துவர்கள் பலரும் காய்ச்சல், சளியின்போது மிக எளிதாக ஜீரணக்க கூடிய பழ ரசங்கள், கஞ்சி, இட்லி போன்ற மென் உணவுகளை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கின்றனர்.

சிலருக்கு "அல்சர்" தொந்தரவு அதிகமாக இருப்பதால் சாப்பிடவதற்கு முன்பே அதி காலையில் வாந்தி ஏற்படுவதுபோன்ற உணர்வு ஏற்படும். உணவு உட்கொள்ள முடியாமல் தவிப்பர். உணவுக்கு முன்பு எடுக்கும் அல்சர் மாத்திரையால் இதுபோன்ற உணர்வையும், வயிற்றில் ஏற்படும் வலியையும் குறைத்து. காலை உணவினை எந்த ஒரு சிரமுமின்றி எடுத்துக்கொள்ள முடியும்.

vanthi mayakkam


வாந்தி குமட்டல் என்ன காரணம்?

இது நோய் வருவதற்கு முன்பு காட்டும் அறிகுறியாக கூட இருக்கலாம். பழைய கெட்டுப்போன உணவினை உட்கொண்டால் அஜீரண கோளாறால் இதுபோன்ற உணர்வு ஏற்படும். ஆனால் சாதாரணமாக குமட்டல் ஏற்பட்டால் அது நமக்கு அடிக்கும் ஒரு எச்சரிக்கை மணி என்று கூட எடுத்துக்கொள்ளலாம். மூளையின் ஒரு பகுதியில் உள்ள  முகுளத்தில் தான் வாந்தி மையம் உள்ளது. இது விரைவாக தூண்டப்பட்டுதான் வாந்தி உணர்வு ஏற்படுகிறது. காய்ச்சல், ஒவ்வாமை, செரியாமை மற்றும் வயிற்றுப் புண் முதற் முக்கியகாரணமாக உள்ளது.

வாந்தி குமட்டலை சரிசெய்ய மருத்துவம்

இயற்கை முறையில் இவற்றை மிக எளிதாக சரி செய்யலாம்.
நம் வீட்டில் இருக்கும் எலுமிச்சையை எடுத்து சாறு பிழிந்து வாந்தி-குமட்டலுக்கான மருந்து தயாரிக்கலாம்.
இஞ்சி அரைத்து ஒரு அரை நெல்லிக்காய் அளவு விழுதை எடுத்து அதனுடன் அரை ஸ்பூஸ் சீரக பொடி சேர்த்து ஒரு டம்ளர் அளவு நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி, அதனுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வர வாந்தி குமட்டல் நின்று விடும்.

சமயலறை கறிவேப்பிலை


கறிவேப்பிலை:

கறிவேப்பிலையை பயன்படுத்தி வாந்தி, குமட்டல் நிற்பதற்கு ஒரு கஷாயத்தை தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலையின் காம்புகள்.
பெரிய நெல்லி இலையின் காம்புகள்.
வேம்பு இலையின் காம்புகள்.
முருங்கை இலையின் காம்புகள்.

(கவனிக்க இலைகள் அல்ல. இலையின் காம்புகள்)

இவைகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, லேசாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை ஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும். பின்பு சிறிதளவு மிளகுப் பொடி, சிறிதளவு சுக்குப் பொடி, இவற்றுடன் தேவையான அளவு தண்ணீரைச் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை கொதிக்க வைத்து ஆறவிட்டு பருகலாம். இதனால் குமட்டல், வாந்தி, வயிற்று வலி அனைத்தும் தீர்ந்துவிடும்.

வாந்தி - குமட்டல் நிற்க ஆரஞ்சு - பழச்சாறு


வாந்தி - குமடல்லால் உடல் இழந்த வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துகளை மீண்டும் பெற ஆரஞ்சு பழச்சாறு அருமையான பானம். இது உடல் இழந்த சக்தியை வேகமாக மீட்டுத் தரும். இரத்த அழுத்தத்தை சீராக்கி, உடலுக்கு புதுத் தெம்பை உண்டு பண்ணும். 

வாந்தியெடுத்து களைப்படைந்தவருக்குத் தேவையான ஓய்வு கொடுக்க வேண்டும். அவரை குப்புற படுக்க வைக்காமல் நேராக படுக்க வைக்க வேண்டும்.

அதிக ஓய்வு அசதியிலிருந்து காத்து, உடலுக்கு நல்ல தெம்மை உண்டு பண்ணும். வாந்தி - குமட்டலால் பலவீனப்படுவதால் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கபட வேண்டும். உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். 

உடல் இயற்கையாக தேவையில்லாத கழிவுகளை வெளித்தள்ளும் ஒரு நிகழ்வுதான் வாந்தி. எனவே வாந்தியை எந்த வகையில் கட்டுப்படுத்துவது உடலுக்கு அதிக தீங்கையே விளைவிக்கும். வாந்தி வந்தால் உடனடியாக எடுத்துவிட்டு, அதனால் ஏற்படும் களைப்பு போவதற்கு உரிய சத்துள்ள ஆகார பாணங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். 




Post a Comment

0 Comments