சர்க்கரை எனப்படும் "நீரிழிவு" நோயின் அறிகுறிகள் ஆரம்பகாலத்தில் கண்டறிவது மிக கடினம். என்றாலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரத்த சர்க்கரை அளவை 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது பரிசோதித்துக்கொள்வது நல்லது. நீரிழிவு இரண்டு வகையாக மருத்துவத்தில் பிரிக்கின்றனர். Type 1 Diabetes, Type 2 Diabetes. முதல் வகையில் நீரிழிவு ஆரம்ப கட்டம். உடலில் இன்சுலின் அளவு போதுமானதாக சுரக்காத நிலை. அதை உணவு மற்றும் உடற்பயிற்சி செய்து ஓரளவுக்கு கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
இரண்டாம் வகையே உடலுக்கு மிக ஆபத்தை விளைவிப்பவை. உடல் செல்களுக்கு போதுமான குளுக்கோஸ் கிடைக்காமல் அந்த பகுதிகள் மெல்ல மெல்ல அழிந்து வரும். கொப்புளங்கள் ஏற்பட்டு, அந்த பகுதி முழுவதும் சிதையத்தொடங்கும். புண்கள் ஏற்படும். அந்த புண்கள் ஆறுவதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்ளும். சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு மிக மெதுவாகவே ஆறத் தொடங்கும். அதற்குள் அந்த பகுதி கெட்டு அது மேலும் பரவாமல் இருப்பதற்கு அதை வெட்டி எடுக்க வேண்டிய கொடுமையான சூழ்நிலைக்குத் தள்ளப்படும்.
இந்த நோயினால் சீரான இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அந்தத் தடையால் கால் பாதம் மற்றும் குதிகால்களில் வலி ஏற்படும். எரிச்சல் உண்டாகும். நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
இரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையை சிறுநீரகம் சிறுநீர் வெளியாக வெளித்தள்ளும். இதனால் அடிக்கடி சிறு கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதனால் சிறுநீரகம் அடிக்கடி வேலை செய்ய வேண்டியிருப்பதால் வெகு விரைவில் சிறுநீரகத்தின் செயல்பாடு குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தொடர்ந்து சிறுநீர் வெளியேற்றப்படுவதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து விடும். எனவே நாக்கு வறண்டு அடிக்கடி தாகம் ஏற்படும்.
இரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்போது, உடல் செல்களுக்குப் போதிய குளுக்கோஸ் கிடைக்காமல் போகும். இதனால் உடல் எப்பொழுதும் ஒரு சோர்வான நிலையில் இருக்கும். தூக்கம் தூக்கமாக வரும்.
உடலுக்கு கிடைத்த உணவை செரிமான மண்டலம் குளுக்கோசாக மாற்றும். ஆனால் நீரிழிவு பாதிப்பு இருப்பதால் செல்களுக்குப் போதுமான குளுக்கோஸ் கிடைப்பதில் குளறுபடி ஏற்படும். இதனால் அடிக்கடி பசிப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
இரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கும்போது, கண்களில் உள்ள சிறு சிறு இரத்த நாளங்கள் அதிகம் பாதிக்கப்படும். இதனால் கண்களில் கருமை நிற புள்ளிகள் தோன்றும். மேலும் கண் பார்வை குறைபாடு ஏற்படும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்காது. இதனால் அவர்களுக்கு உடம்பில் காயம் ஏற்பட்டால் அவ்வளவு எளிதில் ஆறாது. அந்த காயங்களுக்கு முறையான சிகிச்சை எடுத்தாலும் ஆறுவதற்கு நாட்கள் பல ஆகும். சிலருக்கு மாத கணக்கில் கூட புண்கள் ஆறாமல் இருக்கும்.
உடல் உறுப்புகளுக்கு போதுமான குளுக்கோஸ் கிடைக்காத்தால் கை கால்களில் பயங்கர வலி ஏற்படும். இரத்த ஓட்டம் பாதிப்படைவதே இந்த வலிகளுக்கு காரணம். மேலும் கை மற்றும் கால் பாதங்களில் வலி, எரிச்சல், மதமதப்பு ஏற்படும். காலில் ஆணி ஏறினால் கூட தெரியாத அளவிற்கு மரத்துப் போகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு வெகு விரைவில் நோய் தொற்று ஏற்படும். ஈஸ்ட் மற்றும் ஃபங்கல் நோய் தொற்று அவர்களை அட்டாக் செய்யும். குறிப்பாக வாய், அக்குள் போன்ற இடங்களில் ஈஸ்ட் தொற்று ஏற்படும். இதனால் தொந்தரவு அதிகமாகும். மேலும் தோல் அரிப்பு, அங்கங்கே சிவந்து போதல் போன்ற பிரச்சனையும் ஏற்படும்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்:
இரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையை சிறுநீரகம் சிறுநீர் வெளியாக வெளித்தள்ளும். இதனால் அடிக்கடி சிறு கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதனால் சிறுநீரகம் அடிக்கடி வேலை செய்ய வேண்டியிருப்பதால் வெகு விரைவில் சிறுநீரகத்தின் செயல்பாடு குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அடிக்கடி அசுர தாகம்:
தொடர்ந்து சிறுநீர் வெளியேற்றப்படுவதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து விடும். எனவே நாக்கு வறண்டு அடிக்கடி தாகம் ஏற்படும்.
அதிக சோர்வு:
இரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்போது, உடல் செல்களுக்குப் போதிய குளுக்கோஸ் கிடைக்காமல் போகும். இதனால் உடல் எப்பொழுதும் ஒரு சோர்வான நிலையில் இருக்கும். தூக்கம் தூக்கமாக வரும்.
அசுர பசி:
உடலுக்கு கிடைத்த உணவை செரிமான மண்டலம் குளுக்கோசாக மாற்றும். ஆனால் நீரிழிவு பாதிப்பு இருப்பதால் செல்களுக்குப் போதுமான குளுக்கோஸ் கிடைப்பதில் குளறுபடி ஏற்படும். இதனால் அடிக்கடி பசிப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
பார்வை திறன் குறைபாடு:
இரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கும்போது, கண்களில் உள்ள சிறு சிறு இரத்த நாளங்கள் அதிகம் பாதிக்கப்படும். இதனால் கண்களில் கருமை நிற புள்ளிகள் தோன்றும். மேலும் கண் பார்வை குறைபாடு ஏற்படும்.
ஆறாத காயங்கள்:
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்காது. இதனால் அவர்களுக்கு உடம்பில் காயம் ஏற்பட்டால் அவ்வளவு எளிதில் ஆறாது. அந்த காயங்களுக்கு முறையான சிகிச்சை எடுத்தாலும் ஆறுவதற்கு நாட்கள் பல ஆகும். சிலருக்கு மாத கணக்கில் கூட புண்கள் ஆறாமல் இருக்கும்.
கை, கால் வலி:
உடல் உறுப்புகளுக்கு போதுமான குளுக்கோஸ் கிடைக்காத்தால் கை கால்களில் பயங்கர வலி ஏற்படும். இரத்த ஓட்டம் பாதிப்படைவதே இந்த வலிகளுக்கு காரணம். மேலும் கை மற்றும் கால் பாதங்களில் வலி, எரிச்சல், மதமதப்பு ஏற்படும். காலில் ஆணி ஏறினால் கூட தெரியாத அளவிற்கு மரத்துப் போகும்.
விரைவில் நோய் தொற்று:
நீரிழிவு நோயாளிகளுக்கு வெகு விரைவில் நோய் தொற்று ஏற்படும். ஈஸ்ட் மற்றும் ஃபங்கல் நோய் தொற்று அவர்களை அட்டாக் செய்யும். குறிப்பாக வாய், அக்குள் போன்ற இடங்களில் ஈஸ்ட் தொற்று ஏற்படும். இதனால் தொந்தரவு அதிகமாகும். மேலும் தோல் அரிப்பு, அங்கங்கே சிவந்து போதல் போன்ற பிரச்சனையும் ஏற்படும்.
0 Comments
Don't Comment Spam Link on Comment Section.